ஓடுகிறேன் ஓடுகிறேன்

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

அஸ்காாி


ஓடுகிறேன் ஓடுகிறேன்
கால்கள் வலிக்க ஓடுகிறேன்.
நதிகளும் வனங்களும் கடந்து
மலைகளும் வெளிகளும் தாண்டி
மிருகங்களும் விலங்குகளும்
துரத்த ஓடுகிறேன்.

முதுகில் கட்டியிருந்த
குழந்தை பாலின்றி
பாலையின் புழுதியிலும்
மூச்சுமுட்டி இறந்தபோதும்
சடலத்தை எறிந்துவிட்டு ஓடுகிறேன்.

என் கற்பைக் கொடுத்து
என் கருப்பையைக் காக்க ஓடுகிறேன்.

சூட்டிலும், குளிாிலும்
புழுதியிலும், காற்றிலும்
கல்லிலும், முள்ளிலும்
பாய்ந்தும், பறந்தும்
நடந்தும், ஊர்ந்தும்
பாவப்பட்ட அகதியாய் ஓடுகிறேன்

எங்களை துரத்திய
உங்களை வந்து மிதிக்க
ஒருவனை அல்லது ஒருத்தியை ஈன.

அஸ்காாி, இலங்கை.

Series Navigation