ஒளியூட்டுவிழா

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

ரஜித்


ஒளியூட்டுவிழா . தீவாவளிக்கு முன் சிங்கையில் சிராங்கூன் வட்டாரத்தில் இந்த ஒளியூட்டுவிழா பிரமாண்டமாக நடத்தப்படும். இந்த ஆண்டும் நடந்தது. அது தொடர்பான ஒரு கவிதை

————————————-

சுருக்குப் பைக்குள்
சூரியனைப் பொத்திய சிங்கை
இங்கே ஒளிக்கே
ஒளியூட்டுகிறது
***
மின்சாரம் இங்கே
மின்னலைவிட அழகாம்
***
வெட்கும் விண்மீன்களுக்கு
முகில்கள்தான் முக்காடாம்
***
வெளியெல்லாம் அம்மவோ
வெளிச்சப்பூக்கள்
***
விழிகள் செய்த தவம்
பார்வைகள் பாக்கியம்
***
செர்ரிப் பூக்களென
சிரிக்கிறது சிராங்கூன்
***
ஒளியின் அழகை
உலகம் பார்க்கிறது
வலைப்பக்கங்களில்
***
உலகம் சொல்கிறது
தீபாவளியின் முகவரியே
சிங்கைதானாம்
***

Series Navigation

ரஜித்

ரஜித்