ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

மீ.வசந்த்


வரைந்த வட்டத்துள்
வாக்கப்பட்ட வாழ்க்கை.

மறுக்கப்பட்டு..,
மறைக்கப்பட்டு..,
சின்னஞ்சிறு எல்லைக்குள்
சிரிக்க , பேச
நடக்க , அழ
கற்றுக்கொண்டது நாகரீகம்.

இளமை மூடும்
முகத்திரை நெய்வதில்,
வயதை காட்டும் வருடங்கள்
கட்டாயமாக்கப் படுகின்றன.

அகடு , முகடு தடுக்கும்
குளிர்சாதன அறைக்குள்,
எதிரொலிக்கப் படுவதில்லை
எதிர்வீட்டு அழுகை.

சின்னத்திரை உபயத்தால்
பாதிக்கப்பட்ட விழித்திரைக்குள்…,
விசாலப்பார்வையும் மங்களாய்!.

சந்ததிகளின் வறுமையில்,
ஊருக்கு உழைத்து
செத்து மடிந்த தலைவர்கள்,
கற்றுக் கொடுத்த வரலாறு,
ஒரு மனைவி,
ஒரு குழந்தை,
..சில வீடுகள் அவசியம்.

மீ.வசந்த்.

Series Navigation

மீ.வசந்த்

மீ.வசந்த்