ஒரு பூ ஒரு வரம்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

இனியவன்



ஒரு பூ
சோலையை கொண்டாடியது.
அது மலர்ந்தும் மலராத தருணங்களில்
மண் வயசுக்கு வந்தது .
அந்தப் பூ
ஊசித் தட்டான் ,வண்ணத்து பூச் சிகளை
அருகழைத்து
முகவரி சொல்லிக் கொண்டிருந்தது .
யாரும் விலாசம் மறந்து விட லாகாது …..
மறக்காமல் வாசனையையும் பரிசளித்தது ,
கொஞ்சம் தேனையும்.
இதழ்களின் நுனியில்
பனித்துளி பரவசமானபோது
சூரியன் தாகம் தனித்து கொண்டான்
அடர்ந்த வெறுமைகளில்
அலைக் கழிந்த பேருக்கு
அன்னமாக ….இனிக்கும் கனியாக
அவதானிக்க இருந்தது .
பேச்சற்ற பேச்சு
கிளர்ந்து விடாத மௌனம்
பொங்கி வழிந்திடாத ஆசை
அத்தனையும்
சூழ்ச்சியின் சுண்டலில்
ஒரு சுவாரசியமாய்.
எனக்கும் அந்தப் பூ
வரம் தந்தது
ஒரு நதி தொலைந்த வனத்தில்
நெடுநாளாய்
அழுது புலம்பும் தேவதைக்கு
தன்னை,ஒப்படைக்க வேண்டி.

Series Navigation