ஒரு தாயின் அழுகை

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

புஸ்பா கிறிஸ்ாி


காஞ்சிப் பட்டுடுத்தி
உன் கணவன் அருகில் இந்த பாச மண்ணை
நீ வலம் வரும் போது நான் தனியே

என்னை நீ தனியே விட்டு விட்டு
உன் கணவன் அருகிலே,

நான் தனியே உன்னைப் பிாிந்து
அழுகிறேன் மகளே

மகளே என்னை மன்னித்துவிடு
நான் அழுகிறேன்
உன்னை வாழ்த்துவதை விட்டு
நான் அழுகிறேன்

மற்றவர் கண்ணிலே நீ மணப்பெண்
பெற்றவள் எனக்கு நீயோ இன்னும் சின்னப்பெண்

இன்றைய உன் ஆடை அலங்காரம்
உனது இளமை, உனது அழகு
உலகுக்கும் உன் கணவனுக்கும்
நீ அழகு தரும் இன்பத் துளி

என் கண்களில் வடிந்திடும் கண்ணீர்த்துளி

ஆம் மகளே என் கண்களில் நீ இன்னும் சின்னப்பெண்
என் கைகளில் இன்னும் நீ சின்னக் குழந்தைப் பெண்

கருவறையின் கறுப்பறையில் நீ அன்று ஜெனித்த போது
ஊர்ந்திட முடியாத உனது உருவம் அன்று எனக்குச் சொந்தம்

நீ மழலையாய் ஜெனித்த போது எனக்கும் உன் தந்தைக்கும்
நீ தந்தது பெற்றவர் என்னும் பெருமைச் சொந்தம்

மழலை இன்பம் தந்து, தவழ்ந்து, குறுநகை புாிந்து
உருண்டு பிரண்டு, எழுந்து, நின்று நீ காட்டியது குழந்தைப் பருவம்

மூன்று வயதான் போது நீ காட்டிய அழகுக் குறும்பு
எனக்கு மட்டுமே இன்பம் கூட்டிய சொந்தம் அன்று

கன்னிப் பருவத்திலே சின்னப்பெண் நீ
என் எண்ணத்திலே வளர்த்தது எத்தனை எண்ணங்கள்

அன்று மகிழ்ச்சி வெள்ளத்திலே நான்
இன்று கண்ணீர் வெள்ளத்திலே யாருமறியாமல் நான்

என்னுடன் கூடி நீ அன்று எடுத்து வைத்த முதல் அடி
இன்று போல் என் நினைவில் நிற்குதடி மகளே

நீ இன்று இப்படி வளர்ந்ததை அன்று
நான் அணு அணுவாக ரசித்தேன் மகளே

இன்று நீ என்னைத தனியே விட்டு விட்டு
உன் கணவன் பாதை நடப்பது என் நினைவு துடிக்கிறது மகளே

உனக்கென நான் சேர்த்துத் தந்ததோ என் அன்பும், ஆசியும்
முத்தமும் என் தாய் வீட்டுச் சொந்தமும் சொத்தும்

இன்று நீ எனக்கு விட்டுச் செல்வதோ மகளே, மகளே
என அலறும் என் நெஞ்சின் நினைவுகளும் அதன் நோவுகளும்

காலம் உன்னை என்னிடமிருந்து பிாித்தாலும்
காதற் கணவனின் அன்பும் ஆசையும்
பாாில் உனது பண்பும், என் பாசமும் பிாியாது காத்திடு என் மகளே

உன்னைப் பிாிந்து நான் தனித்து விட்டாலும்
என்னைத் தொடர்ந்திடும்

உன் நினைவுகளுடன் நான் வாழ்வேன்
நீ நீடுழி வாழ்க

***
pushpa_Christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி