எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)

This entry is part [part not set] of 23 in the series 20021007_Issue

எச். பீர்முஹம்மது


‘ஒன்றை வெளிப்படுத்தி கொள்ளும்போது

இன்னொன்று மறைந்து கொள்கிறது

ஒன்றை எழுதிக்கொள்ளும்போது

இன்னொன்று எழுத முடியாததாகிறது

முடிவுகளை எதிர்;பார்க்கும் போது

குழப்பநிலையே எதிர் கொள்கிறது

எழுதப்படாத பிரதிகள் நமக்குள்

இன்னும் மறைந்து கிடக்கின்றன ‘.

இயக்க இயலின் தந்தையான ஹெகலின் தீர்ப்புகள் வித்தியாசமானவை. அவாின் பார்வையில் தீர்ப்புகள் என்பது சிந்தனையின் ஓர் இயக்க வடிவம். ஹெகலை குறித்து அறிய முடியாதவர்கள்அநேகம் பேர் இருக்கமுடியாது. காரணம் மார்க்ஸின் இளமைக்கால ஆளுமை மீது தாக்கம் செலுத்தும் நபராக அவர் விளங்கினார். லெனின் குறிப்பிட்டார்/

‘ஹெகலின் தர்க்கவியலை புாிந்துகொள்ளாமல் மார்க்ஸின் மூலதனத்தை புாிந்து கொள்ள முடியாது. அாிஸ்டாடில்/ பிளிட்டோவை புாிந்துகொள்ளாமல் ஹெகலின் தர்க்கவியலை புாிந்து கொள்ள முடியாது ‘.

ஹெகல் பண்டைய அறிவியல் ஆய்வுமீது புதிய முறையியலை உட்புகுத்தி அதனை இயக்கவியலாக மாற்றினார். அதுவரையிலும் ‘பிரபஞ்சத்தின் எல்லா பொருட்களும் அதனதன் நிலையிலே தொடர்ந்து இருக்கின்றது ‘ என்ற கருத்தே நிலவி வந்தது. ஹெகல் தான் அதனை இயங்கும் பொருளாக பார்த்தார். நாம் முரண்கள் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தற்போதைய சூழலில் மிதந்து கொண்டிருக்கிறோம்/ உலவுகிறோம்.

அறிதல் முறையான தர்க்கவியலின் கோட்பாட்டாளரும் அவரே. பண்டைய/ வெறும் சம்பிரதாயத் தர்க்கவியலுக்கு எதிர்மாறாக இயக்க இயல் தர்க்கவியல் முன்சொன்னதைப்போல சிந்தனையின் இயக்க வடிவங்களை/ அதாவது தீர்ப்பு/ முடிவு இவற்றின் பல்வேறு வடிவங்களை பற்றி ஆராய்ந்தது. அந்த தீர்ப்புகளை ஹெகல் எண்ணிக்கையிட்டு அவற்றை சம மட்டத்தில் வைப்பதற்குப் பதிலாக ஒன்றுக்கு மற்றொன்றாக மாறுபட்ட வடிவில் வைத்தார். கீழ் நிலை வடிவங்களிலிருந்து மேல்நிலை வடிவத்திற்கு அவற்றை வளர்த்தெடுத்தார். தர்க்கவியல் முழுவதையும் பிாிவின் பகுதிகளாக ஆக்கியவாறு கீழ்கண்டவாறு தீர்ப்புகளை தொகுத்தார்.

1. உள்ளியல்பான தீர்ப்பு – தீர்ப்பின் மிக எளிமையான வடிவம். இதில் ஒரே வஸ்துவைப்பற்றிய ஒரு பொதுவான பண்பு நேர்நிலையாக அல்லது எதிர்;நிலையாக கூறப்படுகிறது.

(நேர்நிலை தீர்ப்பு : வானம் நீலமாக உள்ளது

எதிர்நிலை தீர்ப்பு : வானம் நீலமாக இல்லை)

2. எடுத்துக்காட்டுகளை ஒரு நியதிக்குட்படுத்திக் காட்டும் தீர்ப்பு – இதில் ஒரு பொருளின் மீது ஓர் உறவு நிலையான நிர்ணயித்தல் பண்பேற்றி கூறப்படுகிறது (ஒருமையான தீர்ப்பு : இந்த மனிதன் மிக மோசமானவன். பிரத்யேக தீர்ப்பு : சில/ அனேக மனிதர்கள் மோசமானவர்கள் . சர்வவியாபக தீர்ப்பு : எல்லா மனிதர்களும் மோசமானவர்களே)

3. கட்டாய நிலை தீர்ப்பு – இதில் ஒரு பொருளின் மீது அதனுடைய உட்பூர்வமான நிர்ணயத்தைப் பண்பேற்றிக் கூறப்படுகிறது (வகையினச் சார்புள்ள தீர்ப்பு : ரோஜா ஒரு செடி. அனுமான சார்புள்ள தீர்ப்பு : சூாியன் உதிக்கும்போது பகல்நேரமாக இருக்கிறது).

4. கருத்துப்பாங்கு சார்புள்ள தீர்ப்பு – இதில் ஒரு பொருள் அதனுடைய பொதுவான இயல்புடன் அல்லது கருத்துப்பாங்குடன் அவனுக்கு எவ்வளவு ஒத்திசைவு உள்ளது என்பது பண்பேற்றி கூறப்படுகிறது. (உறுதிநிலையான தீர்ப்பு : இந்த வீடு சீர்கேடாக உள்ளது. நிபந்தனை தீர்ப்பு : இந்தவீடு இப்படி அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும். வல்லுறுதியான தீர்ப்பு இவ்விதமாக அமைக்கப்பட்டால் தான் வீடு சிறப்பாக இருக்கும்).

ஹெகல் மூன்று பெரும் பிாிவாக தீர்ப்புகளை வகைப்படுத்தினார். (1) தனிப்பட்ட தீர்ப்பு (2) விசேஷ தீர்ப்பு (3) பொதுவான தீர்ப்பு.

தனிப்பட்ட தீர்ப்பு என்பது இரு நபர்கள் சார்ந்தது. அவர்களுக்கிடையேயான எல்லா உரையாடல்களும் இது சார்ந்தே நகர்கிறது. விசேஷமான தீர்ப்பு குறிப்பிட்ட பகுதியை குறிக்கும். குறிப்பிட்ட காலச் சூழலில் குறிப்பிட்ட வெளியில் நிகழும் எல்லா மாற்றங்களும் இதற்குள் உள்ளடங்கும். பொதுவான தீர்ப்பு என்பது வியாபகம் சார்ந்தது. இன்றைய பின் நவீன உலகில் எல்லாம் பகுதிகளின் மாற்றம்தான். பொதுவிற்கு சாத்தியமில்லை. ஙபொதுங குறிப்பிடும் குறிப்பீடு பகுதியின் வடிவமே. ஹெகலின் தீர்ப்பின் வகை¢பிாிவு இந்த இடத்தில் அடிபட்டு போகிறது. ஆகவே தீர்ப்பின் சிந்தனை வடிவ வளத்ச்சியை போல ஹெகலிடத்தில் காணப்படும் ஙபொதுவானங இயக்கத்தின் இயல்பை பற்றிய அனுபவாதாீதியான அடிப்படை நம்மீது எதிர்நிலையாக வந்து போகிறது.

இயக்கத்தின் எந்த வடிவமும் மற்றொரு வடிவமாக மாற இயலும் என்ற ஹெகலின் பார்வை தீர்ப்பு பற்றிய விஷயத்தோடு இன்றும் பொருந்துகிறது. தனிப்பட்டதிலிருந்து விசேஷத்திற்கும் விசேஷத்திலிருந்து தனிப்பட்டதிற்கும் மாறக்கூடிய தீர்ப்பானது ஹெகலின் தர்க்கவியல் விஞ் ‘ானத்தில் முக்கிய இடத்தை பிடித்தது.

நாம் தனி / விசேஷம் இவற்றிற்குள்ளிருந்து வெளிவரும் சாத்தியங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம். இம்மானுவேல் கண்ட தீர்ப்பு என்பதை வெறும் ‘தீர்ப்பு சக்தியாக ‘ பார்த்தார். ஹெகல் அதனை சிந்தனையின் இயக்க வடிவமாக்கினார். உலகியல் நிகழ்வுகள் குறிப்பாக கலகம்/ போர்/ மோதல்/ சிாிப்புகள்/ ஓலங்கள்/ துக்கங்கள்/ அமைதி எல்லாம் வெவ்வேறு வெளியில் ஒரே / பல காலச்சூழலில் அரங்கேறுகின்றன. இவைகளுக்கும் தீர்ப்புகளுக்கும் என்னதான் உறவு> ஒருவேளை இந்த உறவின் அடிப்படையும் அதுவாக தான் இருக்குமா ?

***

peer13@asean-mail.com

***

முன்பு ஹெகல் பற்றி திண்ணையில் வந்த கட்டுரை

http://www.thinnai.com/pl0330025.html

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது