எம். கோபாலகிருஷ்ணனின்  ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு

This entry is part 1 of 31 in the series 20051118_Issue

க. மோகனரங்கன்


தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தை ‘நாவல்களின் காலம் ‘ என்று சிறப்பித்துக் கூறலாம். அந்த அளவிற்கு வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு மொழி எனப் பலவகைகளிலும் மாறுபட்ட குறிப்பிடத் தகுந்த நாவல்கள் கடந்த பத்தாண்டுகளில் வந்துள்ளன.

அமைப்பியல், பின் நவீனத்துவம், நவ மார்க்சியம், தலித்திலயம், பெண்ணியம் எனப் பல்வேறு விமர்சனக் கருத்தியல்கள் எண்பதுகளை ஒட்டிய வருடங்களில் தமிழுக்கு அறிமுகமாயின. அவற்றைக் குறித்து விவாதங்களும், கடுமையான சர்ச்சைகளும் தொடர்ந்து நமது சிற்றிதழ்ச் சூழலில் நடைபெற்று வந்தது.

அதே சமயத்தில் அமெரிக்க, ஐரோப்பிய இலக்கியங்கள் மட்டுமின்றிப் புதிதாக லத்தீன் அமெரிக்க, ப்பிரிக்க நாடுகளின் இலக்கிய க்கங்களும் மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழுக்கு வந்தன. அவ்விலக்கியங்களின் சொல்முறையும், அவற்றின் அடிநாதமாக ஓடிய கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளும் நமக்குப் புதிய வாசல்களைத் திறந்து வைத்தன.

மேற்சொன்ன விஷயங்களின் தாக்கம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது படைப்புச் சூழலையும் பாதித்தது. அதனால் நாவல்பற்றிய நமது பார்வையிலும் கருத்திலும் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்மைக்கால நாவல்கள் சிலவற்றில் மேலே குறிப்பட்ட மாறுதலின் சில அம்சங்களை நாம் அடையாளம் காணமுடியும். அவ்வகையில் சென்ற வருட இறுதியில் வெளியான எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ என்ற நாவல் மிகவும் முக்கியமானது.

பனியன் ஏற்றுமதித் தொழில்மூலம் அந்நியச் செலாவணியாக யிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புழங்கும் திருப்பூர் நகரின் பின்னணியில் நண்பர்கள் ஐவரின் இருபத்தைந்து ண்டுகால வாழ்க்கையை விவரிக்கிறது இந்நாவல் என்று ஒற்றைவரியில் சுருக்கிக் கூறலாம். என்றாலும், அது மேலோட்டமான ஒரு கூற்றாகவே அமையும்.

ஏனெனில் தற்காலப் படைப்புகளில் கதை சொல்லுதல் என்பது உத்திரீதியிலான ஒரு சாக்கு மட்டுமே. அக்கதையை முகாந்திரமாகக் கொண்டு, நாவலாசிரியன் தன் பாத்திரங்களின் உணர்ச்சிப் போக்கில் கண்டறிந்து சொல்லும் வாழ்வு நோக்கு (vision) என்ன ? அந்நோக்கு எவ்வளவு தூரம் இயல்பாகவும், அதேசமயம் நம்பகத் தன்மையுடனும் நாவலில் உருவாகி வந்துள்ளது ? என்பன போன்ற அம்சங்களே முக்கியமானவைப 2ாகக் கருதப்படுகின்றன.

அவ்விதத்தில் இந்நாவல் முன்வைக்கும் அடிப்படையான வாழ்வியல் பார்வை எது ? என ராய்ந்தால் தெரியவருவது இதுவே: ‘ ‘ஒருவனுடைய வளர்ப்போ, வாய்ப்புகளோ, சூழல்களோ அவனுடைய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. மாறாக ஒருவனுடைய அக இயல்புகளே அவனது வாழ்வின் கதியைத் தீர்மானிக்கின்றன. ‘ ‘

இக்கருத்து எவ்வளவு தூரம் சரியானது அல்லது தவறானது என நேரடியாக விவாதிப்பதைக் காட்டிலும் இது எந்த அளவிற்கு நாவலில் பல்வேறு நிகழ்வுகளின் மூலமாக உருவாகும் பல்வேறு பார்வைகளினின்றும் திரண்டு மேலெழுந்து வந்துள்ளது எனப் பார்ப்பதே இந்நாவலைப் புரிந்து கொள்ள நமக்குப் பெரிதும் உதவும்.

இந்நாவலில் வரும் நண்பர்கள் ஐவரும் சமவயது உடையவர்கள். ஏறத்தாழ ஒரேமாதிரி குடும்பப் பொருளாதாரப் பின்னணி கொண்டவர்கள். இவர்கள் ஐவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொண்டதாகவே திருப்பூரின் தொழில் உலகம் ஒரு பெரும் பரமபதப் பரப்பாக இவர்களின் முன் விரிந்திருக்கிறது. அவ்வாய்ப்புகளைக் கண்டறிந்து ஒருவன் ஏணியில் ஏறிப் போவதும், தவறவிட்டு மற்றொருவன் பாம்பின் வாய்ப்

‘c0ட்டுக் கீழிறங்கிப் போவதும், ஒருவன் ட்டத்தின் பாதியிலேயே விலகி வெளியேறுவதும், மற்றொருவன் தீவிரமாக அதை எதிர்கொள்ளாமல் விளையாட்டாகவே கருதி வேடிக்கை பார்ப்பதும் என ஒவ்வொரு சாத்தியமும் அவர்களுடைய மன இயல்புகளாலேயே தீர்மானமாகிறதை, நாவலின் போக்கிலான சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவ்விதத்தில் இந்நாவலின் நோக்கினை நாம் அறிந்துகொள்_ b8ிறோம்.

ஐந்து நண்பர்களுக்கிடையிலான நட்பே இந்நாவலின் மைய இழை. வாழ்வின் லெளகீக வெற்றி தோல்விகளைத் தாண்டியும் அந்நட்பு எவ்விதத்தில் ஒரு அகப்பிணைப்பாக நிலைபெறுகிறது. மன றுதலைத் தருகிறது என்பதை இந்நாவல், இவர்களுக்கும் முந்தைய தலைமுறை நண்பர்கள் இருவரின் உறவோடு சேர்த்து முன்வைத்து நகர்கிறது. இந்நாவலில் காட்சிப்படுத்தப்படுகிற ண்-பெண் உறவுகளைக் குறித்தும் தனித்து

‘ec குறிப்பிட வேண்டும். அவ்வுறவுகளின் இயல்பிலேயே அமைந்த விடுவிக்கப்பட முடியாத சிக்கல்களை, அவ்வாறு விடுபட முயல்கையில் அறுபட்டுப் போகும் இழைகளை, அதன் ரணங்களை, அப்போதைய வலிகளை, ழமாக விவாதிக்கிறது இந்நாவல். அதன் ஐநூற்றுச் சொச்சம் பக்கங்களுக்குள் கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு மண முறிவுகளைப்பற்றிப் பேசுகிறது இந்த நாவல். அந்த நகரில் நிலவும் தொழில் சார்ந்த வா ய்ப்புகளும், பொருளாதாரச் சுயசார்பும் பெண்களைச் சுதந்திரமானவர்களாகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் உணரச் செய்கிறது. அதனால் அவர்களும் ண்களைப் போலவே சமூக மதிப்பீடுகளையும், குடும்ப நிர்ப்பந்தங்களையும் மிக எளிதாக மீறுபவர்களாக மாறிவிடுகின்றனர். தலைசுற்றும் வேகத்தில் மூன்று ஷிப்டுகளில் இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும் அந்நகரில் காமத்திற்கான ஒரு முன் நி பந்தனையாகக்கூடக் காதல் என்பது இருப்பதில்லை.

இதில் வரும் பெண்களின் சித்திரம் நம் தமிழ் நாவல்களின் மரபான பெண் சித்திரிப்புகளிலிருந்து விலகியிருந்தாலும் அதுவே யதார்த்தம் என்பதை நாம் தயக்கத்துடனாவது ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நாவலின் மற்றொரு முக்கிய அம்சம் இதில் சிறியதும் பெரியதுமாக, முக்கியமானதும் முக்கியமற்றதுமாக அடங்கியிருக்கும் கணக்கற்ற தகவல்கள். ஒரு படைப்பில் ஒரு சம்பவத்தை நம்பும்படியாகச் சித்திரிப்பதற்குத் தேவையான அளவிற்குச் சம்பவங்கள் இருந்தாலே போதும் என்றாலும், பெரிய நாவல்களில் நிரம்பியிருக்கும் தகவல்கள் அந்நாவலின் ஊடும் பாவுமான பல்வேறு இழைகளையும் இடைவெளி இன்றி இட்டு நிரப்புவதுடன், அதன் மையத்தை மேலும் ழமானதாகவும், நுட்பம் பொதிந்ததாகவும் க்குகின்றன. இந்நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருமே அந்நகரின் பரபரப்பை, பணமிதப்பை, பசியை, அஜீரண ஏப்பத்தை, சாக்கடைகளை, வாகனப் புகையை, வியர்வையை என ஒவ்வொன்றையும் தன் நரம்பு மண்டலத்தால் உணர முடியும். உயிர்த்துடிப்பு மிக்க, ஒரு பிரம்மாண்டமான சிலந்தி வலையைப் போன்ற திருப்பூர் ந கரத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை அதன் நிறங்களோடும் வாசனைகளோடும் காட்டுவதற்கு இத்தகவல்கள் நாவலாசிரியருக்குப் பெரிதும் உதவியிருக்கின்றன.

அடுத்ததாக இந்நாவலில் வெளிப்படும் கால உணர்வுபற்றி விரிவாகக் கூறவேண்டும். நாவலுடன் சம்மந்தப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒட்டிய சில வருடங்களைக் கதையாக விவரிப்பதோடுமட்டும் நின்றுவிடாமல், ஒரு அகண்ட காலத்தில் நிறுத்திவைத்துத் தனது பாத்திரங்களின் வாயிலாக மொத்த மனித வாழ்வின் சாராம்சத்தையுமே ஊடுருவிப் பார்க்கிற விதமாகவே தற்கால நாவல்கள 2ன் வடிவம் அமைகிறது.

முதல் அத்தியாயத்தில் ‘அலைகள் ஓய்வதில்லை ‘ படப் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதைப் பதிவு செய்தபடி தொடங்கும் கதை கால் நூற்றாண்டு கழிந்து வீரப்பன் சுடப்படும் தகவலுடன் இறுதி அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது. இந்த இருபத்தைந்து ண்டுகளே கதையின் நிகழ்காலம். இதைத் தவிர மூத்த தலைமுறையாக வரும் சுப்பிரமணியம், செட்டியார் கிய இரு நண்பர்களின் நினைவுகள்மூலம் இக்கால எல்லை மே

‘d6ம் பல ண்டுகளுக்கு முன்னோக்கி விரிகிறது. தவிரவும், குமரன் தடியடிபட்டுச் சாய்வது, இந்திப் போராட்டக் கலவரம் என வரலாற்றை மீள நினைவுபடுத்துவதன் மூலம் வேறொரு காலத்தையும் தொட்டு மீள்கிறது.

ஐந்து பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நாவலில் ஒவ்வொரு பாகத்திலும் முதல் அத்தியாயத்தில் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து ஒரு மலைக்கோயிலுக்குச் செல்வது விவரிக்கப்படுகிறது. திருப்பூர் நகரைச் சுற்றிலும் கயித்த மலை, அலகுமலை, ஒதியமலை, சிவன்மலை, சென்னிமலை என்று கோவில் வழிபாட்டுடன் கூடிய ஐந்து மலைகள் உள்ளன. திருப்பூர் தோன்றுவதற்கு முன்பிருந்தே அந்த மலைகள் அங்கு இருந்துகொ_ f1டிருப்பவை. ஒரு குடியிருப்பாக, கிராமமாக, அசுர நகரமாக, திருப்பூர் பெருகி வளர்வதை மெளனமாக அம்மலைகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

மலைகள் என்பவை காலத்தின் அசைவின்மைதான். உறைந்துபோன காலம்தான் மலைகளாக உருவெடுத்து நின்கின்றது. அதனாலேயே மலைகளின் உச்சியை அடையும்போது நம்மனம் அசாதாரணமான அமைதியை அடைகிறது. கீழே நிலத்தில் அகங்காரத்துடன் நாம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களுமே ஒரு கணம் அற்பமாகத் தோன்றுவதும் அதனாலேயே. இந்த ஐந்து மலைகளையும் அநாதியான காலத்தின் குறியீடாஊ 8க் கொண்டால், திருப்பூரின் இந்த வளர்ச்சி, அதன் காரணமான பெருமிதங்கள் எல்லாமே அந்த முடிவற்ற காலத்தில் மிதக்கும் ஒரு நொடிதான் என்றாகும்போது இந்நாவல் கொள்ளும் காலவிரிவு இன்னும் அதிகமாகிறது. ‘மணற்கடிகை ‘ என்ற தலைப்பும், முகவுரையில் தாண்டவ சிவனின் உடுக்கை அதிர்வுபற்றிய உருவகமும் இதையே சுட்டி நிற்கின்றன எனலாம்.

சிரியனின் உத்தேசத்தையும் மீறி தம் இயல்பில் சுயேச்சையாக இயங்கும் பாத்திரங்களின் வாயிலாக உருவாகும் பலகுரல் தன்மை என்பது தற்கால நாவல்களில் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இந்நாவலில் பேசப்படுகின்ற எந்த விஷயமும் அது நட்பாகட்டும் வணிக நியமங்களாகட்டும், ண்-பெண் உறவாகட்டும்–எல்லாவற்றிலும் உள்ளும் புறமுமாய் நிறைந்திருக்கும் சகல முரண்பாடுகளையும் ஒவ்வொரு பாத்திரமும் தத்தமது கோணத்தில் நின்றபடி அலசுகின்றன. இதில் எவ்விடத்திலும், எந்தவொரு விஷயத்தையும் எடைபோடவென நாவலாசிரியன் தன் நியாயத் தராசைத் தூக்குவதில்லை. ஒழுக்க மதிப்ப_ a3டுகளைப் பயன்படுத்தி எந்த உறவையும் கொச்சைப் படுத்துவதுமில்லை.

நிறைகளுக்கப்பால் இந்நாவலில் தென்படும் குறைபாடுகள் சிலவும் உண்டு. எண்ணற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் கதையில் சில நிகழ்வுகள் மேலோட்டமான சித்திரிப்பின் காரணமாக அழுத்தம் குறைந்து காணப்படுகின்றன. இது தவிர நாவலில் வரும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதில் ஒரு சமநிலை பேணப்படவில்லை. சில இடங்களில் தேவையைவிடச் சுருக்கமாகவும் காணப்படுகிறது. ஒரு பைஊ cப்பினை உயிர்த்துடிப்பு மிக்கதாக்குவது அதன் மொழிதான் என்றால் மிகையாகாது. பல இடங்களில் கவித்துவம் மிக்கதாகவும், உரையாடல்களில் நுட்பத்தைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் இருந்தபோதிலும், சில இடங்களில் இந்நாவலின் மொழி மிகச் சாதாரணமாகவே காணப்படுகிறது. இது வாசிப்பின் போக்கில் சிற்சில இடங்களில் தொய்வினை உண்டாக்குகிறது.

இறுதியாக, இந்நாவல் முடியும் தறுவாயில் உள்ள ஒரு பத்தியை மட்டும் இங்கே எடுத்தெழுத விரும்புகிறேன். நண்பர்கள் ஐவரும் மலை உச்சியிலிருந்து பார்க்கும்போது வரும் வர்ணனை அது. ‘மாலையின் மங்கிய வெளிச்சம் ஒரு பனித்திரையைப் போல நிலப்பரப்பை மூடியிருக்கிறது. வசிப்பிடங்களின் ஓசைகள் எதுவும் அப்போது அங்கு கேட்கவில்லை. மனிதர்களின் மனம் குன்றச் செய்யும் ங்காரங்களுக்கும் மலின

‘edகளுக்கும் அங்கு இடமில்லை. குழந்தைகள் பால்மணம் கமழத் துயிலும் வேளையின் ஒப்பற்ற பேரமைதியின் சாந்தத்தை மட்டுமே அப்போது உணரமுடிந்தது. மண்ணும் மலைகளும் மனிதர்களும் ஒன்றுபோலாகி, பெருங்கடலின் அலைத்திவலைகளால் கரைந்து நிற்கும் இக்கரையில் காண முடிவதெல்லாம் இன்மையின் சங்கீதத்தை மட்டுமே. அகராதியில் கொட்டிக் கிடக்கும் ஒரு சொல்லும் இங்கு செல்லுபடியாகாது. மனம் அரற்றி யழுது ஓயுமட்டும் இந்த பேரியற்கை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கும். அழுது ஓய்ந்தபின் விழியோரம் மிஞ்சி நிற்கும் துளி நீரின் உவர்ப்பை அது சுவைக்கும். அந்த உவர்ப்பின் ஈரத்தில் துளிர்த்து குதூகலிக்கும். ‘

இந்நாவலில் பல இடங்களில் விடப்பட்டிருக்கும் இடைவெளிகளையும், பொதிந்திருக்கும் தொடர்புக் கண்ணிகளையும் கண்டு அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிற ஒரு வாசகன் மேற்சொன்ன சாந்தத்தை ஒரு கணமேனும் தீண்டிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

—-

Series Navigation<< பெரிய புராணம் – 65<< கடிதம்<< சுந்தர ராமசாமி நினைவரங்கு<< கடிதம்<< பெங்களூரில் சுந்தர ராமசாமி நினைவு அஞ்சலிக் கூட்டம்<< மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மாநாடு<< கடிதம்:<< சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI<< சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்<< ஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்<< நைல் நதி நாகரீகம், எகிப்தின் ஒப்பற்றக் கட்டடக் கலைச் சிற்பப் படைப்புகள் -7<< இமைகள் உரியும் வரை….<< கீதாஞ்சலி (49) ஒளியின் நர்த்தனம்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )<< சிறுவட்டம் தாண்டி….<< நான் நான் நான்<< சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஏழாம் காட்சி பாகம்-4)<< நான் காத்திருக்கிறேனடி<< உனக்காகப் பாடுகிற குருவி<< இவ்வாறாக, நான் நூலகர் ஆகிப்போனேன்!<< தனியார் மற்றும் உலகமயமாதலும், இந்திய கலாச்சார, தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரதன்மை பின்னடைவுகளும்<< தமிழ் விடுதலை ஆகட்டும்!<< எடின்பரோ குறிப்புகள் – 2<< போட்லாட்ச் (பெரு விருந்து) (potlatch) (அந்தஸ்துக்கான போட்டி) – 1<< மதமாற்ற எண்ணங்களின் மாற்றம்<< நாயகனும் சர்க்காரும்..<< சிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை<< ஒரு உரையாடலும், சில குறிப்புகளும் -1<< ‘சொல்’’<< கோ பு ர ம் மா று ம் பொ ம் மை க ள்<< ஃபிரெஞ்ச் மொழிக்கதை – அசப்பில் நீயொரு நடிகை

2 Comments

Comments are closed