This entry is in the series 20030419_Issue

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்


உன்னை காற்று என்பேன்
தினமும் உன் நினைவை சுவாசிப்பதால்……
உன்னை நெருப்பு என்பேன்
என் நெஞ்சில் கதகதப்பாய் இருப்பதால்……
உன்னை நீர் என்பேன்
நீ இல்லாமல் நான் வாழ முடியாததால்……
உன்னை ஆகாயம் என்பேன்
என் எண்ணம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால்……
உன்னை நிலம் என்பேன்
மக்கும் வரை உன்னில் கலந்து இருப்பதால்……

saxsun76@yahoo.com

Series Navigation