This entry is in the series 20070118_Issue

கே ஆர் மணி



அந்த அறையின் அழுக்கு
துடைக்க துடைக்க
வந்து கொண்டேயிருக்கிறது.. எப்போதும் போல்..

துடைத்துவிட்டு நிமிர்கையில்
தூசுகளின் வாசனை..
அழுக்கின் ஆவர்த்தனம்..
தோய்ந்து போன ஆணுறைகள்..
காயம்பட்டுப்போன சானடரி நாப்கின்கள்..
வியர்வையும், விந்துவும் கலந்ததுமாய்
துணிக்குவியல்கள்.

கூனிந்து உற்றுப்பார்க்க, குட்டியாய்
ஒரு குருஷ்த்திரம்..ரணகளமாய்..

வெட்டப்பட்ட இதயத்தில் வைரஷ் ஊடுருவல்..
குத்தப்பட்ட முதுகுகள்..
நறுக்கப்பட்ட மூக்குகள்..
கீறப்பட்ட மேற்புறத் தோல்கள்
காய்ந்த புண்களை கீறிக் கொள்ள
மழுங்கிப்போன கத்தியும், ஏராளமான முகமூடிகளும்..

எல்லாவற்றையும் தூக்கி எறிய முற்படுதலில்
தொலைதலும், தேடலும் மறுபடி தொலைக்க
முயற்சியாய்..

எப்போதும் போல் என் அறை
அழுக்காகவே இருக்கும்போல..


mani@techopt.com

Series Navigation