எனக்கு மழை வேண்டாம்

This entry is part [part not set] of 16 in the series 20011029_Issue

ஆர் சிவசங்கரன்


துளியொன்று மண்ணை நனைக்கவும்
காரமும் காபியும்
கேட்பது மனமா நாக்கா
குழம்ப தெரிந்து
தவிர்க்க தெரியாமல்
சட்டை மாட்டி நடப்பதேன் ?

வேகம் சற்றே அதிகரிக்க
துளியெல்லாம் உளியாய் மாற
பொய்முகமனைத்தும் கிழிக்க
போதுமா இவ்வேகம் ?

யோசனைக்கிடையே
தேவை சொல்லி
ஆசையோடு அதனை வாங்கி
ஆவியோடு உள்ளே இறக்க ….
காலடி தடத்தை – சிறு
கையொன்று துடைத்தல் பார்த்து
ஆவியிலே வலிக்குதே …

ஓரு கோடி சுகிக்க
ஒருவர் மட்டும் தவிக்கவா இது
அவசியமானாலும் அழகானாலும்
மழை வேண்டாம் ……

Series Navigation

ஆர் சிவசங்கரன்

ஆர் சிவசங்கரன்