ஊமைக்காயம்
Published October 19, 2006 • By
காயத்ரி
காயத்ரி
சொல்ல நினைத்து
சொல்லாமல் விட்ட வார்த்தைகளில்…
கேட்க நினைத்து
கேளாமல் விட்ட கேள்விகளில்…
அருகிலிருந்தும்
மெளனமாய்க் கடத்திய நிமிடங்களில்…
தவறான புரிதல்களால்-அன்பை
தவற விட்ட தருணங்களில்…
இன்னும்…
உள்ளாறாமல் இருக்கின்றன
நம் நட்பின் காயங்கள்.
gayatri8782@yahoo.com