உறவுக்காக ஏங்கும் இதயங்கள்….

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

தில்லைநாயகி திருநாவுக்கரசு.


ஆழ்ந்து உறங்கிப் போயிருக்கும் சந்தியா தன் குழந்தைகளை ஒருகணம்; வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாள்.

“என் குழந்தைகளை ஒரு மாதத்துக்கு பிரிந்து கொண்டு இருப்பதாஸ ?

சுகந்தன் ஜெயந்தனை விட்டு பிரிந்திருக்க என்னால் முடியுமாஸ ? ”

அவள் தனக்குள் அடிக்கடி கேட்டுக் கொண்டு கொண்டாள்.

பிள்ளைகள் வேறு

“அம்மம்மா அப்பபாட்ட எப்பையம்மா போறம் ?”

என்ற அங்கலாய்ப்பில் இருப்பது அவளை மேலும் தர்ம சங்கடத்துக்குள் ஆழ்த்தியது.

ஏதோ.. இனம் புரியாத ஒர் சோகம் அவளுக்குள் ஊடுருவதை அவளால் அணுஅணுவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

வேலையால் திரும்பிவந்த கணவனிடம் கூட அவளாhல் முகம் கொடுத்து கதைக்க முடியவில்லை. துக்கம் அவள் தொண்டையை அடைக்கக் கேட்டாள்.

“லீவுக்கு பிள்ளையள கட்டாயம் அம்மா அப்பா வீட்டை விடத்தான் வேண்டுமா.. ? அவையள் இங்கேயே இருந்திட்டுப் போகட்டுமன்”என்றாள்.

“இதென்ன புதுக்கேள்வி சந்தியா ! மாமா மாமியவ வலியக் கேட்க அவையளிட்ட விடாமல் இருக்கமுடியுமே. அவையளுக்கும் பேரன்மாரைப் பார்க்க ஆசையிருக்காத என்ன.. ? “

நியாயமான ஆசைக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தான் அவளது கணவன் குமார்.

ஆனால்… சந்தியாவால் எதையும் மனம் விட்டு சொல்ல முடியாத நிலைஸ

தன் குழந்தைகளை தன் பெற்றோரிடம் அனுப்ப அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை. இதை எப்படி அவள் அவனிடம் சொல்வாள். ?

மனதின் குழப்பங்கள் நிழற்படங்களாய் அவள் கண்முன் விரிகின்றது.

அப்போது அவளுக்கு 11 அல்லது 12 வயதிருக்கும்.

அன்று அப்படித்தான் ஒருநாள் அவளின் அப்பா காரில் போய்க் கொண்டிருந்;த போது ஏற்பட்ட விபத்து. உண்மையில் தற்செயலாக ஏற்பட்டது என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால்… வீட்டிற்கு வந்தபோது தான் அதன் உண்மைநிலை அவளுக்குப் புரிந்தது.

அப்பா அம்மாவிடம் கூறியது அவள் காதிலும் விழுந்தது.

“பார்த்தனியே….! எப்படி என்ட கார் ஓட்டம். என்னில பிழை வராத மாதிரி… எப்படிப் போய் இடிச்சனான் என்று. காரிலே இருக்கிற மற்ற றிப்பேயரையும் இதிலேயே திருத்திப்போடுவன். சுந்தரம் என்டால் என்ன கொக்கே… ? ? ? ”

அப்பா தன் கெட்டித்தனத்தை மார்பு தட்டிக் கொண்டு சொல்லிக் கொண்டு இருந்தார்.

அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.

உடனே அவள் கேட்டும் விட்டாள்.

“ஏன் அப்பா இப்படி செய்தனீங்கள்…. இப்படி செய்றது…” என்று கேட்பதற்குள் அப்பாவே…

“ உனக்கு தெரியாதாம்மா இதைப்பற்றி எல்லாம். வாழ்றதுக்கு கொஞ்சம் டெக்னிக்குகள் தெரிந்திருக்க வேண்டுமம்மா… எந்த எந்த வழியில காசை கறக்க முடியுமோ அதில் எல்லாம் கறந்து போடனும்.. பிழைக்கிற வழியைப் பார்க்கோணும்”

என்று கூறி அன்று அவள் வாயை அடைத்து விட்டார்.

இதன் பிறகு நடந்த மற்றெரு சம்பவம் அவள் மனதை அதிகம் பாதித்தது.

இந்தியா போவதாக கூறிக்கொண்டுபோன அவளின் அப்பா… திரும்பி வரும்போது ஓர் பெண்ணுடன் வந்தது.

அம்மா கூட இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாதது ஆரம்பத்தில் அவளை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஏனம்மா அப்பா இப்படி செய்றார்…. எங்கள விட்டு அப்பா போக போறாரா…. எனக்கு அப்பா அம்மா இரண்டு பேருமே வேண்டுமம்மா….

அம்மாவின் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதது

பிறகு போலிஸ் என்ற கெடுபிடி எல்லாம் நடந்து முடிந்தது.

இறுதியில் தான் அவளுக்கு தெரிய வந்தது. தன் மனைவி என்று வேறு ஓர் பெண்ணை கூப்பிட்டு விட்டதாக….

சட்டத்திற்கு புறம்பாக நடப்பவை அவள் நெஞ்சில் நீக்கமற பதிந்து விட்டது. அவற்றிலிருந்து மீள முடியாமல் தவித்த தவி;ப்புக்கள்….

அவளின் உள்ளத்தே மேலும் ஆழமாக வேர் ஊன்றி விட்டது.

அன்று படிந்த நிஜங்கள்தான் மாறாத வடுக்களாக அவள் மனதில் பதிந்துவிட்டது

முகம் கழுவிக் கொண்டு வந்த கணவர் மீண்டும்

“உனக்கென்ன நடந்தது… ? ”

மீண்டும் அவள் தன்னை சுதாகரித்துக் கொண்டாள்..

தொலைபேசி மணி அடிக்கின்றது. அவளாhல் தொலைபேசியை எடுக்கமுடிய வில்லை. கைகளில் அவளையறியாமல் ஓர் நடுக்கம்…

அப்பா கூறியது தான் அவள் நினைவிற்கு வந்தது. “நான் இல்லை என்று சொல்லு பிள்ள. உவன் அருண்தான் சீட்டுக்காசுக்கோ அல்லது வட்டிக்காசுக்கோ தான் அடிக்கிறான் நான் இல்ல என்ற சொல்லிப் போட்டு வை…” என்று அன்று அப்பா சாதாரணமாக கூறியது இன்றும் அவள் காதுகளுக்குள் ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றது.

இருந்துகொண்டே… இல்லை என்று கூறியது அவளுக்குப் பிடிக்கவில்லை.

சீட்டு ஏன் பிடிக்கவேண்டும்… அதில் ஏதோ ஓர் அவலம்…. ஏமாற்றம.;… இருப்பது போல் ஓர் உணர்வு அவளுக்குள் ஊடுருவி… வியாபித்திருந்தது. அன்று அவளால் அதை தட்டிக்கேட்க முடியாத வயது. நிலை.

இப்போது தொலைபேசிமணி அடிக்கின்றது.

“யார் தொலைபேசியில் .. ? ? ? அப்பா வா.. ? ? ? ”

அவளின் மனம் ஆத்மார்த்தமாகக் கேட்கின்றது

“அப்பா நீங்கள் மாறிவிட்டார்களா…. ? ? ?

என் பிள்ளைகள் இந்த சமூகத்தில் நல்ல மக்களாக…. வாழ வேண்டும். அதற்காக… அப்பா நீங்கள் மாறவேண்டும்.

என் பிள்ளைகளுக்காக நீங்கள் மாறித்தான் ஆக வேண்டும். உறவுக்காக இதயங்கள் துடிக்கின்றது…. அப்பா ”

அவள் மானசீகமாக இறைவனை வேண்டிக் கொள்கிறாள்.

உறவுக்காக ஏங்கும் இதயங்களின் துடிப்புக்கள்… நிதர்சனமாகுமா… ?

(யாவும் கற்பனை)

—-

Series Navigation

தில்லைநாயகி திருநாவுக்கரசு.

தில்லைநாயகி திருநாவுக்கரசு.