உருக்கியில் (HIV) உருகும் சிறார்!!

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

இமாம்.கவுஸ் மொய்தீன்


போதை!
விலை மாதர்!
வேண்டாச் சேர்க்கை!
‘வேண்டாம்
தவறு
கூடாது’
சொன்ன வார்த்தைகள்
செவிடன் காதில் ஊதிய
சங்காகிப் போனது….
தந்த வினையால்
வந்த வினை!

பொதுவாகவே
பெற்றோர்
தம் குழந்தைகட்கு
கல்வி ஒழுக்கம்
அசையும் அசையாச்
சொத்துக்கள்
உறவுகளை
விட்டுச் செல்வர்!
இவர்களை
விட்டுச் சென்றவர்களோ
இவர்களுக்கு
விட்டுச் சென்றது
உருக்கி(HIV) நோய்!

அறிந்தோ
அறியாமையிலோ
பெரியவர்களால்
நிகழ்ந்துவிட்ட
தவறுகளுக்கு
தண்டனை
அனுபவித்துக்
கொண்டிருக்கிறார்கள்
இப் பரிதாபத்துக்குறிய
அப்பாவிகள்!

மொட்டாக இருக்கும்
இவர்கள்
பூவாக
காயாக
கனியாக
விதையாக
ஆகாமலேயே
உதிர்ந்துவிடப்
போகிறவர்கள்!

இவர்களை
அரவணைப்பதாலோ
ஆதறவு கொடுப்பதாலோ
அன்புசெலுத்துவதாலோ
ஏன்? முத்தமே
கொடுத்தால் கூட
இந்நோய்
தொற்றிக் கொள்ளும்
ஆபத்தில்லை!
இரத்தத் தொடர்பு
மட்டுமே
அச்சத்துக்குறியது!

இவர்கள்
இம்மையில்
நரகம்
அனுபவிப்பவர்கள்!
பெரியவர்கள்
தம் இச்சைகளைக்
கட்டுப் படுத்தாதால்
ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு
எடுத்துக்காட்டுகள்!
பாவங்களல்ல இவர்கள்!
பாடங்கள்! பரிதாபங்கள்!!


drimamgm@hotmail.com

Series Navigation

இமாம்.கவுஸ் மொய்தீன்

இமாம்.கவுஸ் மொய்தீன்