உப்பானது சாரமற்றுப் போனால். . .?

This entry is part [part not set] of 43 in the series 20070125_Issue

கவிஞர் வைகைச் செல்வி


இனிப்பும் . . கசப்பும்
உரைப்பும். . புளிப்பும்
மாறி மாறி வரும்
வாழ்க்கையில்
கரிப்பு மட்டும்
தங்கும்-
கண்ணீராய். .
வியர்வையாய்.
எளியவனின்
கண்ணீரை
வியர்வையை
உணர்வதற்கே
உடலில் கரிப்பு.
உன்னில்
பொங்கும் இனிப்பால்
யாருக்கும் பலனில்லை.
உணர்வைக் கிளறிவிடும்
கரிப்பே
மனித நேயம்.
எனினும்
உப்பானது சாரமற்றுப்
போனால். . .
எதனால் சாரமேற்றுவாய்?

+++++++++

அனுப்பியவர்:
சி. ஜெயபாரதன், கனடா

Series Navigation