இஸ்லாமிய மன்னர்களின் வரலாறும் மக்களின் வரலாறும்

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

அபுஅனார்


நபிமுகமதுவின் வழிமுறையாக இருப்பது மன்னராட்சி முறையாகத்தான் இருக்கிறது. இந்த ஆட்சிமுறையைப் பின்பற்றிதான் சவுதியில் கூட சவுது குடும்பத்தின் பரம்பரை ஆட்சிமுறை நடை பெற்றுவருகிறது

1)நபி முகமதுவிற்கு பிறகு குறைஷி இன மேலாண்மைமிக்க குடும்பவகை மன்னராட்சி முறையே நடை பெற்றுள்ளது.
2)முதல் மன்னர்(கலீபா)அபூபக்கர். இவர் நபிமுகமதுவிற்கு தன் மகள் ஆயிஷாவை கட்டிக் கொடுத்த வகையில் மாமனார் ஆகிறார்.
3)இரண்டாம் மன்னர் உமர் தன் மகள் ஹப்ஸாவை நபிமுகமதுவிற்கு கட்டிக் கொடுத்தவகையில் இவரும் மாமனார் ஆகிவிடுகிறார்
4)மூன்றாம் மன்னர் உதுமான், நபிமுகமது தன் மக்ளை கட்டிக் கொடுத்தவகையில் இவர் மருமகன் ஆகிவிடுகிறார்.
5)நான்காம் மன்னர் அலி, நபிமுகமது தன் மகள் பாத்திமாவை கட்டிக் கொடுத்த வகையில் இவரும் மருமகன் ஆகிறார்.
6)நபிமுகமதுவும் அபிசீனிய அடிமை கறுப்பின பிலாலை மன்னராக்கவில்லை. மாறாக தனது மாமனார்கள் மற்றும் மருமகன்களுக்கும்தான் இஸ்லாமிய ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது.
இந்தவகையான, குடும்பவகைப்பட்ட மன்னராட்சி முறையையே நபிமுகமது நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன்படியேதான் ஆண்மேலாண்மை கொண்ட அல்சவுது குடும்பத்தின்மன்னர்அப்துல்அஸீஸ்,பைசல்,பக்த்,காலித்,என நீண்டு தற்போது அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் மன்னராட்சி நடக்கிறது.
அதுபோல் நபிமுகமது, அபுபக்கர் உமர் உதுமான்,அலி கலீபாக்களின் ஆட்சிகளை புனிதப்படுத்தி கூறினாலும்
இவர்கள் காலத்தில் நடந்த இஸ்லாமிய ஆக்ரமிப்பு போர்களை வரலாறு பதிவாக்கி வைத்துள்ளது.
நபிமுகமதுவும் அவரது தோழர்களும் எளிமையாகவே வாழ்ந்தார்கள் என்றாலும்சமயத்தின் பெயரால் அதிகார வெறி போரை துவக்கியதில்இவர்களுக்கு முக்கிய பங்குண்டு.
1)நபிமுகமதுவின் காலத்தில் அவர் தலைமையிலும், அவரின் வழிகாட்டுதலிலும் நடை பெற்ற போர்களின் எண்ணிக்கை 57. கஸவாத் என்பது நபிமுகமது கலந்து கொண்ட போர்களாகும். இது எண்ணிக்கையில் 19.
சரிய்யா நபிமுகமதுவின் கண்காணிப்பில் நடைபெற்ற போர்களாக உள்ளன்.இவை எண்ணிக்கையில் 38. நபிமுகமது தன் முஸ்லிம் குழுமத்தை காக்க நடத்திய போர்கள் நபிவாழ்வின் பிற்பகுதியிலேயே இஸ்லாமிய ஆட்சி விரிவாக்கத்திற்கான யூத கிறிஸ்தவத்தோடான போர்களாகவும் இவை வடிவம் பெற்றன்.
2)முதல் கலீபா அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில்(கிபி 632 – 634)மத்திய அரேபியா இனங்கள் மீது போர்தொடுத்து ப்கரின், ஓமன், ஏமன்,பகுதிகள் என அரபுபகுதிமுழுவதும் விஸ்தரிப்பு நடந்தது. மூவாயிரம் பேர் கொண்ட அமிர் இபின் அல் அஸ்,யாசித் இபின் அபுசுய்யான் உள்ளிட்ட படைப்பிரிவுகளின் தலைமையில் சிரியாவின் மீதான படையெடுப்பும் வட கிழக்கு அரேபியா முழுவதும் அபூபக்கரின் ஆளுகைக்கு வந்தது.
3))மற்றுமொரு எளிமைக்கு பேர் போனதாக சொல்லப்படும் கலிபா உமரின் காலகட்டம் கிபி 634- 644.உமர் நடத்திய போர்களில் கதிசியா, டெசிபான், யார்முக்ஆகியவற்றைக்குறிப்பிடலாம்.ஈரான்,சிரியா,எகிப்து பாலஸ்தீனம் பகுதிகளில் நடைபெற்ற போர்களாக இவை உருப்பெற்றன்.இதன் உச்ச கட்டமாகத்தான் மதினாமசூதியில் தொழுது கொண்டிருந்த உமரை தொழுகையின் போதே பாரசீக கிறிஸ்தவ அடிமை ஒருவன் படுகொலை செய்தான்.
4)கிபி 644 – 656 கலிபா உதுமானின் காலகட்டத்திலும் டுனீஷியா, ஆர்மீனியா, காபூல் என பல பகுதிகளில் போர்களின் வெற்றியினால் இஸ்லாமிய ஆளுகைக்கு வந்தது.
5)கலிபா அலி நபியின் மருமகன். உதுமானை கொலை செய்ததாக இவர்மேலே பழி சுமத்தப்பட்டது.நபிமுகமதுவின் மனைவி ஆயிஷா தனது படைகளுடன் அலியின் பெரும் படையை எதிர்த்துப் போர் புரிந்தார். இதைத்தான் ஒட்டகப்போர் என்று வரலாறு குறித்து வைத்திருக்கிறது.நபித்தோழர்கள் பலர் இதில் கொல்லப்பட்டனர். ஆயிஷா கைது செய்யப்பட்டார். மதிநாவிற்கு திருப்பி அனுப்பப்பட 22 ஆண்டுகள் வாழ்ந்து இறந்து போனார்.661 -ல் அதிகாலை தொழுகையின் போது கலிபா அலியை முல்ஜிம் விஷவாளினால் வெட்டிக் கொன்றான்.
6)இந்தப் போர்களெல்லாம் ஒடுக்கப்பட்ட, அடித்தளமக்களின் விடுதலைக்கான போராக,அல்லது போராட்டங்களாக இல்லை.

இஸ்லாத்தையும் ஆட்சி அதிகாரத்தையும்நிலைநாட்டிக் கொள்ள அதிகார வர்க்கம் நடத்திய போர்களாகவே காட்சியளிக்கின்றன. எனவேதான் பேரரசுகளான கிலாபத்துக்களின் வீழ்ச்சியும் நிகழ்ந்தன்.இந்த ரத்தத்தால் எழுதப்பட்ட இஸ்லாமிய அதிகாரவர்க்கத்தின் வரலாறை இஸ்லாமிய மக்களின் வரலாறாக உருவகிப்பது கருத்தியல் மோசடியேதவிர வேறொன்றுமில்லை.
இஸ்லாமிய மக்கள் சார்ந்த மாற்றுவரலாற்றை இனிமேல்தான் நாம் உருவாக்கவேண்டும்

Series Navigation

அபுஅனார்

அபுஅனார்