இளமானே…!

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

புஹாரி, கனடா


அடிக்கொருதரம்
துடிக்குது மனம்
படுக்கையை விரி இளமானே – மலர்ப்
படுக்கையை விரி இளமானே

கொடியது கனம்
ஒடியுது இடை
மடியினில் இடு இளமானே – என்
மடியினில் இடு இளமானே

வெடித்ததும் மலர்
கொடுக்குது தேன்
தடுப்பது ஏன் இளமானே – நீ
தடுப்பது ஏன் இளமானே

தடுக்கின்ற வெட்கம்
வடிக்குது ரசம்
உடுப்பினை எறி இளமானே – உன்
உடுப்பினை எறி இளமானே

தொடுவது சுகம்
விடுவது ரணம்
முடிவற்ற தொடர் இளமானே – இது
முடிவற்ற தொடர் இளமானே

————————-
buhari2000@hotmail.com

Series Navigation

புஹாரி, கனடா

புஹாரி, கனடா