இரவுகள் பனித்துளிகளை விழிநீராய்க் கொட்டுகிறது…!!
கலாசுரன்

*
முகம் தெரியா
இம்சைகளை
மூழ்கடித்த வார்த்தைகளும்
தற்பொழுது முக்காட்டுக்குள்
மறைந்து கொள்கின்றன……
துயிலெழ்த் தூண்டுவது
புனைவு எனினும்
விழிக்க மறுக்கிறது
இறையாண்மையின்
கூரான கருக்குகள்….
அவை மென்மை கொணர்ந்த
இளைப்பாறுதலின்
தூக்கத்தைச் சிதைக்கின்றன …..
பனித்துளிகளை
முத்துக்களாய் ரசித்த
இரவுகள் இப்பொழுது
அதயே…. விழிநீராய்க்
கொட்டுகிறது…..!
**