இந்தியச்சூழல்களில் சமூக முரண்பாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும் – தேசிய கருத்தரங்கு

This entry is part [part not set] of 32 in the series 20100220_Issue

ஹெச்.ஜி.ரசூல்


மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,சமயங்கள்,தத்துவம் மற்றும் மனிதநேயச்சிந்தனைப்புலம் சார்பில் பிப்ரவரி 16 – 17 ஆகியதேதிகளில் யுஜிசி யுபிஇ தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

துவக்கவிழாவில் ஆய்வுப்புல ஒருங்கிணைப்பாளர் முனைவர் பீ.மு.அஜ்மல்கான் வரவேற்புரை நல்க தவத்திரு குன்றக்குடிபொன்னம்பல அடிகளார் முதன்மைஉரை ஆற்றினார்.

முதல் அமர்வில் முனைவர் அ.மார்க்ஸ் வன்முறைகளும் சமயங்களின் எதிர்வினைகளும்,முனைவர் ஆர்.பிரேமா பாலின வேறுபாடுகளும் சமயங்களின் எதிர்வினைகளும், முனைவர் மா.பா.குருசாமி இன்றைய பொருளாதார சிக்கல்களும் சமயங்கள் காட்டும்தீர்வுகளும் ஆகிய பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் மீதான தொடர் விவாதங்கள் நடை பெற்றன.
இரண்டாம்நாள் அரங்கிற்கு முனைவர் லூர்துசாமி தலைமை வகித்தார். முனைவர் அஜ்மல்கான் சமூகமுரண்பாடுகளும் சமயச் சுதந்திரமும் முனைவர் எஸ் ஆண்டியப்பன் சமயப் பூசல்களும் காந்திய அணுகுமுறையும் பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் தீண்டாமையும் தமிழகச் சமயங்களும் முனைவர் ஜெ.ஜெயன் கேரளாவில் சீக்கியம் ஆகியப் பொருண்மைகளில் கட்டுரைகள் வாசித்தனர்.

மூன்றாம் அமர்வுக்கு பேரா.ஆ.சிவசுப்பிரமணியன் தலைமைதாங்க ஹெச்.ஜி.ரசூல்,இந்தியமுஸ்லிம்சமூகத்தின் படிநிலை முரண்களும் இனவியல் அடையாளங்களும்.முனைவர் வீரா.அழகிரிசாமி சமூக சமய முரண்பாடுகள் திருவிவிலிய வழிப் புரிதல் ஆகிய ஆய்வுரைகளை வழங்கினர்.

பொதுவான நிலையில் ச்மூகமுரண்பாடுகளுக்கான அரசிய,பொருளாதார, சமூக காரணிகள்விவாதிக்கப்பட்டன. சைவ வைணவசமயங்களின் வெளிப்பட்ட தீண்டாமையின் கூறுகளும் கோட்பாட்டுரீதியாக அவற்றை நிலைநிறுத்தமுயன்ற தத்துவ பின்புலங்களும் உரையாடலில் முன்னுக்கு வந்தன.

கிறிஸ்தவம், இஸ்லாத்தில் சாதீயத்திற்கும் வர்ணாசிரமத்திற்கும் இடமில்லை என்றாலும் இந்திய சாதியத்தின் கூறுகள் கத்தோலிக்கம் சீர்திருத்த கிறிஸ்தவ்ம் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாழ்வியல் நிலைகளில் படிநிலையாக அமைந்திருப்பதையும் ஆய்வியல்ரீதியாக விவாதிக்கப்பட்டன.

வன்முறைகளுக்கும் , சமூக பொருளியல்முரண்பாடுகளுக்கும் சமயங்கள் என்ன தீர்வினை முன்வைக்கின்றன அல்லது சமூக முரண்பாடுகளுக்கு சமயங்களும் சாதிப் படிநிலைகளும்காரணங்களாய் இருக்கின்றனவா என்பது போன்ற கூட்டுவிவாதங்களும் இக்கட்டுரைகளின் வழியாக முன்னுக்குவந்தன.
இக்கருத்தரங்க்கின் நிறைவுரையை பட்டியாலா பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் தரம்சிங் நிகழ்த்தினார்.
முனைவர் பேரா.முத்துமோகன் , முனைவர் மு.பெரியசாமி, ஆய்வுதிட்டபேராசிரியர் கோரிஜான்,ஜகநாதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆய்வாளர்கள் நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர்.

Series Navigation