இது கூட இயற்கை தானா?….
சக்தி சக்திதாசன்

கண்ணின் வழியே பாய்ந்த அம்பு
காளையின் நெஞ்சைத் துளைத்த பொழுது
காதல் என்னும் உணர்வு இதயத்தில்
கருவாய் புலர்ந்தது இயற்கை நிகழ்வே
நேசத்தின் நிழலில் இதயத்தைக் கிடத்தி
நாளைய வாழ்வின் கனவால் தாலாட்டி
இன்றைய பொழுதில் அமைதி அடையும்
இயல்பு அதுவும் இயற்கை நிகழ்வே
பெண்ணின் மென்மை வருடிய உணர்வு
போதை கொடுத்து உள்ளம் கிறங்க
பெற்ற இன்பம் நிலையானது என்ற
பேதையர் எண்ணமும் இயற்கை நிகழ்வே
இதயத்தில் இருந்த அன்பைக் கொட்டி
இருப்பதைத் துறந்து தஞ்சம் புகுந்திடும்
இளம் காதல் நெஞ்சங்கள்…. வஞ்சிப்பது….
இதையும் எப்படி இயற்கை நிகழ்வென்று ? …….
sathnel.sakthithasan@bt.com