இது இந்தியாவில்தான் நடக்கும் – தின கப்ஸா தலைப்புச் செய்திகள்

This entry is part [part not set] of 8 in the series 20000709_Issue


இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி; 120 பேர் அதிர்ச்சியால் மரணம்.

பீகார் பாகிஸ்தானிடம் விற்பனை – சம்பந்தமில்லாமல், இந்திய கற்றறிந்தவர்களின் கணக்கீடு 86% ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் தொகை புள்ளி விவரம்: 45% – கற்றோர்கள், 58% – அரசியல்வாதிகள்

எம் எப் ஹ்உசைனின் நிர்வாண ஓவியத்தில் முலாயம் சிங்

பிகாரில் வெள்ளம்; 2 பேர் தாகத்தால் மரணம்.

இந்தியா, மற்ற அனைத்து நாடுகளுக்கெதிரான போட்டிகளில் தங்கப் பதக்கம் வெற்றி.

சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட, விடுதலை வீரர்கள் மீது கைத்தடிப் பிரயோகம் செய்யப் படும்.

ராமர் பிள்ளை அரிசி, தண்ணீர், ஒரு குச்சி மற்றும் சிறிது பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு பொட்டாசியம் பெர்மாங்கனேட் தயார் செய்தார்.

காழ்மீரில் இன்று குண்டு வெடிக்க வில்லை.

1526 ஆம் ஆண்டு பானிபட் யுத்தம் காரணமாக ராவ் மீது வழக்கு.

இந்திய கிரிக்கெட் அணியினர் அனைவரும் ஓய்வு பெறுவதால், இந்திய கிரிக்கெட்டிற்கு பிரகாசமான எதிர்காலம்.

ஜெயலிதாவிற்கு 2 மாதம் ஜெயில் தண்டனை நிறைவு பெறுவதால், டாக்டர் பட்டம் வழங்கப் படுகிறது.

 

 

  Thinnai 2000 July 09

திண்ணை

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா