இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
கோவை புதியவன்
இன்றைய கணணி மனிதன்
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில்
புதிய இனப் பெருக்கம்
கணணியின் கவர்ச்சியால்
கணணி மாயையில்
கலாச்சார திறவுகோல்
துருப்பிடித்துப் போவதற்கு
கண்டறியப்பட்ட சாதனம்
அமெரிக்க டாலர்களின்
அமோக விற்பனையில்
அன்பை அநாதையாக்கிய
ஆறறிவு புதுயுக அவதாரங்கள்.
உள்ளத்து உணர்வுகளுக்கு
பிண்டம் வைத்து
அண்டம் தங்கள் கரங்களில் என
இறுமாப்பு கொள்ளும் புத்திரர்கள்
அப்பாவின் ஆஸ்தி உருமாறி
அருமை மகனுக்கு அயல்நாட்டுப் பணி
அவரே அஸ்தியாகிப் போனால்
விமானச் சீட்டு குளறுபடியால்
இறுதி ஊர்வலம் வீடியோ ஆதாரம்
கரன்சி மோகத்தில்
பகலும், இரவும் மறந்து
வளர்ச்சிப் பாதை காட்டுவதையாய்
வாழ்வின் பாதையைத் தொலைத்த
நாட்டின் வளைந்த முதுகெலும்புகளே!
அசையாது உறங்கியவன் கும்பகர்ணன்
அமர்ந்தே குறுகியவன் கணணிகர்ணன்
விழித்துக் கொள் கணணி நண்பா!
கணணித் திரையிலருந்து
கொஞ்சம் கண்களைத் திருப்பு.
இல்லையெனில்….
நாளை சிறுநீர் கழிப்பதற்க்கே
சிரமப்படுவாய்
thendral_venkatguru@yahoo.co.in