இணக்கு

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

கரவைதாசன்


புதியதோர் உலகினுள்

வடு ஒன்று உருவாகப் போகின்றது.

மறைவது அது எப்போது ?

தலைமுறைகள் ஏழேழு தாண்டியும்

விழும் இவ்விதைகளை

முளைக்க விடுங்கள் – விழுந்த

இடத்திலேயே.

கிளைகளை வேண்டுமானால்

அவை

எங்கேனும் பரப்பட்டுமே.

ஆனாலும்,

அந்த விழுதுகள்

வேர் இறக்க முன்பாக

ஓட்டி வையுங்கள் – நல்ல

கிளைகளை.

புதியதோர் உலகுள்

ஊடுருவப்போகும் – வடு

மறையட்டுமே இப்போதாவது.

தாவரங்கள் இரண்டை

ஒட்டு வைப்பதில்

நற்பயன் பெறலாம் – எப்போதும்

இது

மனிதனுக்கும் பொருந்தும்.

—-

thasan@vejen-net.dk

Series Navigation