ஆலவிருட்சம்

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

முத்துக்குமார்


எண்ணற்ற மழைத்துளிகள்
எங்கெங்கோ விழுகின்றன
சிப்பிக்குள் விழுந்ததால்
ஒரு துளிக்கு மட்டும்
முத்தாகும் மகத்துவம்!
எத்தனை எத்தனையோ…
பார்வைப் பாிமாற்றங்கள்
உரையாடல்கள், சந்திப்புக்கள்
அன்பு மடல்கள், ஆரத்தழுவல்கள்
காதல் எனும் விதை
சாியான இடத்தில் விழுந்தால் மட்டுமே
ஆலவிருட்சம் எனும் திருமணம்!
இல்லையெனில்…
மனிதர்கள் காண்பது
பல மனங்கள் மட்டுமல்ல
பல மணங்களுமே!
***

thanearuvi@yahoo.co

Series Navigation

முத்துக்குமார்

முத்துக்குமார்