ஆப்பம்

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue


பச்சரிசி –1டம்ளர்

புழுங்கலரிசி –1டம்ளர்

வெந்தயம் –சிறிதளவு

வெள்ளை உளுந்து –சிறிதளவு

இவை நான்கையும் ஒன்றாக மூன்று மணிநேரம் ஊறவைக்கவும். பின் கொஞ்சம் மையாக அரைத்துக் கொண்டு உப்பு போட்டுக் கரைத்து முதல் நாள் இரவே வைத்துவிடவேண்டும். அல்லது குறைந்த பட்சம் எட்டுமணி நேரம் வைக்க வேண்டும். பின் அந்த மாவில் சிறிதளவு சோடாஉப்பு கலந்து ஆப்பக்கடாயின் நடுவில் ஒரு கரண்டி மாவை ஊற்றி கடாயை அப்படியே சாய்த்து சுற்றி வட்டமாக வருமாறு செய்ய வேண்டும். ஓரப்பகுதிகளில் மெல்லியதாகவும் நடுவில் மெத்தாகவும் இருக்கும் வண்ணம் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து வெந்ததும் அப்படியே எடுத்து விடவேண்டும். திருப்பிப் போடக்கூடாது. இதற்கு தேங்காய்ப்பால் சிறந்த காம்பினேஷனாக இருக்கும். இதிலேயே இனிப்பு ஆப்பம் செய்ய ஆப்பம் ஊற்றப் போகும் முன் உடைத்த வெல்லத்தை அதில் போட்டு கரைந்தவுடன் ஊற்றினால் இனிப்பு ஆப்பம் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை.

Series Navigation