எஸ். அர்ஷியா
அரவாணியர் அல்லது திருநங்கையர் என்று சமீப காலமாக சற்று மா¢யாதையுடன் விளிக்கப்படும் மூன்றாம் பாலினத்தவா¢ன் வாழ்நிலை ஒன்றும், மோஸ்தா¢ல் பதிக்கப்பட்ட வைரக் கல்லாக இல்லை. பெரும்பான்மை மக்கள், அவர்களை இன்னும் கேலிப் பொருளாகவும், பொழுதுபோக்கு அம்சமாகவுமே அபிப்ராயம் கொண்டிருக்கிறார்கள். தெருவில் நடந்து செல்லும் அவர்களை, வினோதமாக வேடிக்கைப் பார்க்கும் வழக்கம் இன்னமும் இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் தவிர, மற்றெங்கும் அவர்கள் மதிக்கப்படுவதாகக் காணோம். அங்கும் கூட அவர்களின் வாழ்நிலை, ஏதோ சில உ¡¢மைகளைப் பெற்றிருக்கிறதே தவிர, அடி மட்டத்திலிருந்து மேலெழும்பி நிமிரவில்லை. இதே நிலைதான் நாடு முழுவதும் இருக்கிறது.
தமிழகம் தாண்டி மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களில் ஏதோ அவர்களுக்குக் கொஞ்சம் அந்தஸ்த்து கிடைத்திருப்பது தொ¢கிறது. அவ்வளவு தான்!
உடலமைப்பால் ஆணாகவும் மன உணர்வால் பெண்ணாகவும் தங்களைப் பாவித்துக் கொள் ளும் அவர்கள், தங்கள் உணர்வுகளை அங்கீகா¢யுங்கள் என்று விடுக்கும் கோ¡¢க்கைகள், அர்த்தமுள்ளவை. சமூக அந்தஸ்துடன் வாழ்தலுக்கான தங்களின் உ¡¢மைகளைப் பெற அவர் கள் நடத்தும் போராட்டங்கள் எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை ஈடேறாத முடிவுகளையே தந்திருக்கின்றன.
இருந்தும் அவர்கள், தங்களின் சமூக அங்கீகா¢ப்புக்கானப் போராட்டத்தைத் தொடர்து கொண்டே இருக்கிறார்கள். அதற்கான மன உறுதி, சாதாரணமானதல்ல! மருத்துவர் ஊசி குத்தும்போது கண்களை இறுக மூடி, பற்களைக் கடித்துக்கொண்டு இருப்போமே.. அப்படி யானதல்ல, அவர்களின் மனத்திண்மை. அது, மா¡¢யப்ப நாடார் அண்ணாச்சிக் கடையிலோ.. அல்லது ¡¢லையன்ஸ் பிரெஷ்களிலோ விற்கப்படும் சந்தைப் பொருளுமல்ல. அவர்களின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வந்தது!
அவர்களை அரவணைக்காமல் எள்ளி நகையாடுவது, அவர்களுக்கு எத்தனை வேதனையைத் தரும் என்பதை அவர்களால் மட்டுமே உணர முடியும். பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டும், சமூக அங்கீகாரம் கிடைக்காமலும், கடை கடையாகப் பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலை வேறு வழியில்லாமல் செய்து வருவது, அவர்களின் விருப்பத்தின் போ¢ல் அல்ல. வாழ்தலுக்கானத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே!
அதனால் அவர்கள் படும் மனஅவஸ்தை, சொல்லி மாளாது. சட்டமும் நீதியும் தண்டிக்குமே என்று அச்சத்துடன் பயந்து பயந்து வாழும் அவல வாழ்க்கையைக் காட்டிலும் போலிஸ¥ம் சமூக விரோதிகளும் செய்யும் துன்புறுத்தல், அவர்களை மேலும் பாடாய்ப் படுத்தி வருகிறது.
சமீப காலமாக, திருநங்கையா¢ல் பலர் ‘தந்தா’வுக்குச் செல்வதில்லை. கடைகளில் கைத்தட்டிப் பிச்சைக் கேட்பதில்லை. மாறாக, கைத் தொழில்களைக் கற்றுக்கொண்டு, சமூகத்தின் மேம் பாட்டுக்கு உறுதுணையாகி வருகிறார்கள். சிலர் பூ, காய்கறி, மீன் வியாபாரம் செய்து வருகிறார் கள். இது, அவர்களின் மனமாற்றத்தையும் சமூகம் மீது அவர்கள் கொண்டிருக்கும் அக்கறை யையும் காட்டுகிறது.
அவர்கள், தங்களின் பழைய போக்குகளைக் கைவிட்டுவிட்டு, புதிய பாதையைத் தேர்ந் தெடுத்துப் போய்க் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், குஜராத் மாநில செஷன்ஸ் நீதி மன்றங்களில் 60 இளைஞர்கள் தாக்கல் செய்திருக்கும் அபிடவிட் மனுக்கள், தங்களைத் தாங்களே கேலி செய்து கொள்வதுடன், கண்ணிய வாழ்க்கை முறைக்குத் திரும்பிக் கொண்டி ருக்கும் அரவாணியர் அல்லது திருநங்கையா¢ன் வாழ்நிலைப் போக்கை அவமதிப்பதாகவும் உள்ளது.
“குஜராத்தைச் சேர்ந்த 60 இளைஞர்கள், தங்களை அரவாணியாக மாற்றிக் கொள்ள அனுமதிக் கோ¡¢, நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஏழ்மை நிலையிலிருக்கும் அவர்களுக்கு வேலை கிடைக்காதது தான், அரவாணியாக மாற முடிவு எடுத்ததற்குக் காரணம்” என்று நீளும் தினமலர் நாளிதழின் செய்தி (ஜூலை.7, 2008. மதுரைப் பதிப்பு), இப்படியாகப் போகிறது. “அரவாணியாக மாற விரும்புவர், எந்த நிர்பந்தமுமின்றி, மனம்விரும்பி அரவாணியாக மாற விரும்புவதாக மனுத்தாக்கல் செய்தால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப் படும். அதனடிப்படையில் ஆமதாபாத் நகா¢ல் மட்டும் 60 இளைஞர்கள் அரவாணியாக மாற அனுமதிக் கோ¡¢, செஷன்ஸ் நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளதாக”த் தொடர் கிறது.
அதில், மனுத்தாக்கல் செய்திருக்கும் இளைஞர்கள் கூறியிருக்கும் காரணங்கள், வேடிக்கையாக உள்ளது. 22 வயதே ஆன மகேஷ், “இரண்டு ஆண்டுகளாக ஒரு நல்ல வேலைக்கு முயற்சித் துக் கொண்டிருக்கிறேன். ஆறாம் வகுப்புவரை மட்டுமே படித்திருப்பதால் லிப்ட் ஆபரேட்டர், பியூன் வேலை மட்டுமே கிடைக்கிறது. அரவாணியாக மாறிய எனது நண்பர் ஒருவர், சமீபத் தில் சொந்தமாகக் கார் வாங்கிவிட்டார். எனவே தான், அரவாணியாக மாற முடிவு செய்தேன்” என்று சொல்லியிருக்கிறார்.
தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்யும் சஞ்சய் தேசாய், “அரவாணியாக மாறினால், பணம் சம்பாதிப்பது சுலபம். சுகமாக வாழலாம்” என்று கூறியிருக்கிறார்.
இதில் இரண்டு விஷயங்கள் புலனாகின்றன.
அரவாணிகள் சுகவாசிகளாக இருப்பதாக, மனுத்தாக்கல் செய்த இளைஞர்களுக்குப் பட்டிருக் கிறது.
மற்றொன்று, அவர்களைப் போல மாறினால், பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தி ருக்கிறது.
ஆக இவ்விரு விஷயங்களுமே அவர்களின் அறியாமையைக் காட்டுவதுடன், நீதிமன்றம் வழங்கும் அனுமதியின் லட்சணமும் பு¡¢படுகிறது.
அந்த இளைஞர்கள், அரவாணியாக மாறுவதை விரும்பிச் செய்யவில்லை. பணம் சம்பாதிக்க அரவாணியாக மாற விரும்புகின்றனர். இதற்கு, நீதிமன்றத்தின் அங்கீகாரம்!
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கையர். ரேவதி தொகுத்திருக்கும் ‘உணர்வும் உருவமும்’ நூலின் முன்னுரையில், சுபா சாக்கோ எழுதியிருப்பதைப் பார்ப்போம். ‘ஒருவரை பராமா¢த்துப் பாதுகாக்க வேண்டிய குடும்பம். ஊக்குவித்து வளர்க்க வேண்டிய பள்ளிக்கூடம். ஆதரவாகச் சூழ்ந்திருக்க வேண்டிய நெருக்கமான உறவுகள். மனதுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய மதம். நீதிக்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தொண்டு நிறுவனங்கள். பாரபட்சமின்றி செயல்படுவதாகக் காட்டிக் கொள்ளும்அரசு: அரவாணிகளைப் பொறுத்தவரை, இவை அனைத்துமே வன்மமும் பாரபட்சமான நடவடிக்கைகளும் நிகழும் களமாகவே இருந்து வந்துள்ளன’ என்கிறார்.
தன்னுரையில் ரேவதி குமுறுவதைக் கேட்போம் : ‘அடிப்படை உ¡¢மைகள், மனித உ¡¢மைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுந்தானா? அரவாணிகளுக்கு இல்லையா? நாங்களும் இந்நாட் டின் குடிமக்கள் தானே? எங்களுக்கும் ஓட்டு¡¢மை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், சொத்து ¡¢மை, ரேஷன் அட்டை ஆகியவை வேண்டும். ஆணாகப் பிறந்த நான், ஆணாக இருந்தால் மட்டுந்தான் இந்த அடிப்படை உ¡¢மைகள் கிடைக்கும் என்று சொல்வதில் என்ன ஞாயம் இருக் கிறது? என்னுடைய பாலினத்தை மாற்றிக் கொள்ள எனக்கு உ¡¢மை இல்லையா? ஏன் என் உணர்வுகளை ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்?’
பணம் சம்பாதிக்கும் வேட்கையுடனோ… கொழுப்பெடுத்துப் போயோ… பாலினத்தை மாற்றிக் கொண்டவா¢ல்லை, இந்தத் தோழி!
மன உணர்வுகளின் பு¡¢தல் அவரை வழிநடத்தி, அதன் அடிப்படையில், “என் பயணம் இது தான்!” என்ற திண்மையான முடிவுடன் களத்திற்கு வந்து போராட முடிவெடுத்தவர்.
அரவாணிகளின் வாழ்நிலைப் போராட்டம் இப்படியிருக்கும் போது, எப்படி நாளொன்றுக்கு ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்?
இளைஞர்களே… உணர்வுகளைப் பு¡¢ந்து, அதுதான் உங்களுக்குத் தேவையென்று பட்டு, அரவாணியாக மாற விரும்பினால், மனமுவந்து மாறுங்கள். அது உங்களுக்கான உ¡¢மை!
ஆனால், பணம் சம்பாதிக்க, அரவாணிகளாக மாறப் போவதாக நீங்கள் சொல்வது, மாற்றங் களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை… அவர்களின் வாழ்நிலையை… அவமதிக்கிறீர்கள் என்று தான் பொருளாகிறது.
arshiyaas@rediffmail.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் ! (கட்டுரை: 35)
- தாகூரின் கீதங்கள் – 40 யாருடைய தவறு அது ?
- காற்றினிலே வரும் கீதங்கள் – 28 கண்ணன் என் அரசன் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 16 (சுருக்கப் பட்டது)
- பாவண்ணனின் ‘துங்கபத்திரை’ – கொட்டிக்கிடக்குது அழகு
- ஊடுருவிப் பார்க்கும் கண்கள்
- திவசம் @ டோம்பிவிலி – அவுட்சோர்ஸிங் (Outsourcing)
- நினையாத நினைவு
- குர்சி (நாற்காலி)
- இன்னும் கொஞ்சம்…!
- கவிதை௧ள்
- In Memory of Sri Lanka’s Black July
- 27-வது பெண்கள் சந்திப்பு , கனடா
- கோவையில் மதுவுக்கு எதிரான மக்கள் இயக்கம்
- நூல்வெளியீடு “பிரம்மா”
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 28 மாப்பசான்
- அவுஸ்திரேலியாவில் எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழா
- இந்தியாவின் சாதனை மறைக்கப்பட்ட மர்மம் !!
- மதங்களின் பெயரால்
- என்றான், அவன்!
- அய்யப்பன் நாதர் இறப்பதற்கு ஒரு மணி நேரம் இருந்தது
- எல்லாம் கடவுள் செயல்
- யாதும் ஊரே
- அறிஞர் அ.ந.கந்தசாமியின் மேலும் 11 கவிதைகள்!
- அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்
- தமிழுக்கு தமிழ் என்றே பெயர்
- இரயில் நிலையப் பெஞ்சு
- கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி
- சொல்ல வேண்டிய சில… 1
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- நலந்தானா அண்ணா?: பாட்டால் நலம் விசாரித்த கண்ணதாசன்
- வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!
- நினைவுகளின் தடத்தில் – 14
- அறியாமல் பிழை செய்யும் அவர்களை…அரவாணிகளே… மன்னித்து விடுங்கள்…!
- பிரகிருதி
- இந்தக் கடிதத்தில் முகவரி இல்லை