அரசு ஊழியர்களுக்கு மணி கட்டுவது யார்?

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

செல்வன்


இந்தியன் படம் திரையரங்கில் பார்க்கும்போது லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை கமல் அடித்து உதைப்பது போல் காட்சி வரும்.தியேட்டரில் அதற்கு என்ன விசில் சத்தம் என்கிறீர்கள்?ஏன் அப்படி கைதட்டல் எழுந்தது?பால்கனி,தரை,பெஞ்சு என எந்த பாகுபாடும் இன்றி ரசிகர்களின் கைதட்டல் பெற்ற காட்சிகள் அவை.

அடி வாங்கியவன் அரசியல்வாதி அல்ல.அரசு ஊழியன்.ஆனால் பொதுஜனம் அரசியல்வாதி மீது கொண்டுள்ள கோபத்தை விட அரசு ஊழியர் மீது அதிக கோபம் கொண்டுள்ளது தெரிகிறது.என்ன காரணம் என்று பார்த்தால் லஞ்சம்,டார்ச்சர் ஆகியவை தான்.

அரசியல்வாதி கொள்ளை அடிப்பது மேல்மட்டத்தோடு முடிந்து விடுகிறது.நேரடியாக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவது கவுன்சிலர் அளவோடு முடிகிறது என நினைக்கிறேன்.கான்டிராக்டர்,வியாபாரி என மேல் மட்ட அளவில் அரசியல்வியாதியின் கொள்ளைகள் நடப்பதால் பொதுமக்கள் அவர்கள் மீது அத்தனை கோபம் காட்டுவதில்லை.

ஆனால் அரசு ஊழியர் கதையே வேறு.படிப்பறிவற்ற கிராமஜனங்களை இவர்கள் படுத்தும் பாடு சொல்ல முடியாது.அரசு அதிகாரிகளின் மெத்தன ஆணவப் போக்கு பல இடங்களில் கண்கூடு. ஏதோ கடவுள் போல நினைத்துக் கொண்டு நமக்கு அருள் பாலிக்க வந்திருப்பவர்கள் போல நினைத்துக் கொள்வார்கள் பெரும்பாலானோர்.நல்லவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பொல்லாதவர்களே நிறைய.

தன் தாயும் தந்தையும் ரத்தம் சிந்தி தன்னை படிக்க வைத்ததை மறந்து தக்கபன் வயதுள்ள இன்னொரு ஏழையிடம் லஞ்சம் வாங்குவோரை எப்படி மன்னிக்க முடியும்?கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் பென்ஷன்,விதவை பென்ஷன் என வருவோர் பார்க்க பாவமாக இருப்பார்கள்.நடக்க முடியாத வயதில் இருக்கும் தாத்தா வயதுள்ள முதியவர்களை பல முறை நடக்க வைத்து காசு பிடுங்கி அலைகழிக்கும் இவர்களை ஆண்டவன் தான் திருத்த வேண்டும்.

சுதந்திர போராட்ட தியாகிகளை கூட விட்டு வைப்பதில்லையாம்.என்னங்க இது கொடுமை?

ஏன் இத்தனை ரெட் டேப் அரசு அலுவலகங்களில் இருக்கிறது என தெரியவில்லை.எத்தனை கையெழுத்து,எத்தனை சர்டிப்பிகேட் இணைக்க வேண்டும்?எத்தனை அலைகழித்தல் செய்வார்கள்.அரசு அலுவலகங்களில் புரொசிஜர் இத்தனை சிக்கலானதாக இருப்பதுதான் இவற்றின் ஊழலுக்கு முக்கிய காரணம்.பியூனுக்கே லஞ்சம் தந்தால் தான் ஆபிசரிடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கும் என்பது தான் தற்போதைய நிலை.லஞ்சம் தரும் பெரும்பாலானோர் படிப்பறிவற்ற பாமரர்கள்.அப்பாவிகள்.லஞ்சம் தரும் அளவுக்கு அவர்களுக்கு வசதி இல்லை.கடன் வாங்கி லஞ்சம் தரும் நிலைக்கு ஆளானோரும் உண்டு

94% வரிப்பணம் இவர்கள் சம்பளத்துக்கே சரியாகிவிடுகிறதாம்.பிறகு ரோடு போட காசு ஏது?மத்திய அரசு தரும் கடனும்,திட்ட கமிஷன் தரும் தொகையும் தான் கைகொடுக்கிறதாம்.(இந்த புள்ளி விவரங்களை கலைஞர் மறுத்துள்ளார்).திறமயின்மையை ஊக்குவிப்பதற்கென்றே அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.சீனியாரிடி அடிப்படையில் புரமோஷன் தருவது அதில் ஒன்று.லஞ்சத்தை ஊக்குவிக்கும் ரெட் டேபிசம் இன்னொன்று.அரசு நிதி நிலைமை எக்கேடு கெட்டால் என்ன எனக்கு சம்பலத்தை ஐந்து வருதத்துக்கொருமுறை அதிகப்படுத்து என கேட்டு போராடுவதே இவர்கள் வேலை.தனியார் மயத்தை எதிர்த்து தமது வேலைகளை காத்துக்கொள்வதே இவர்கள் குறிக்கோள்.மக்கள் நலன் இரண்டாம் பட்சமே.

20,000 மாச சம்பளம் 30000 சம்பளம் என வாங்கிக்கொண்டு அதுபோதாது என ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை ஸ்ட்ரைக் செய்து அரியரோடு காசு வாங்கும் அரசு ஊழியர்களில் பெரும்பகுதியினர் லஞ்சம் வாங்குவது ஏன்?படித்த இவர்களே இப்படி செய்ய காரணம் என்ன?

மக்களின் அறிவின்மை தானே காரணம்?இவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் அரசியல்வாதிகளும் இன்னொரு காரணம்.
நேர்மையான அரசு ஊழியர்கள் சிலரும் அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய தூண்டப்படுவதும் ஒரு காரணம்.

தொழிற்சங்கங்கள் உரிமை கேட்கும் பொழுது கடமையைப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை ஊழியருக்கு ஊட்டவில்லை. ஊழியரிடம் எப்படியாவது வேலை வாங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என்பது போல் இருந்து விட்டனர். அதன் விளைவுதான் இன்று மாறி வரும் உலகில் அதன் மாற்றத்தை தாங்க முடியாத பல சோம்பேறி அரசு ஊழியர்களும் புலம்புகின்றனர் வெளி உலகின் மாற்றம் தெரியாமல்.
சரி.இந்த பிரச்சனையை தீர்ப்பது எப்படி?

தகுதி அடிப்படையில் இவர்களுக்கு சம்பளம்,பதவி உயர்வு கொடுத்தால் தீர்ந்தது பிரச்சனை.வருடா வருடம் அந்த அரசு அலுவலகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் அந்த அரசு ஊழியரை பற்றி evaluation report/ feedback வாங்கினால் கதை தெரிந்து விடும்.

ஒவ்வொரு வருடமும் இதற்கு ஒரு நாள் ஒதுக்கி இவர்கள் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.இந்த ஆசிரியர் சரியில்லை என மெஜாரிடியான தகப்பன்மார்கள் சொன்னால் தூக்கி அடிக்க வேண்டும்.டிரான்ச்பர்,ஊதிய உயர்வு ரத்து என அவருக்கும் நல்ல பெறும் ஆசிரியருக்கு பதவி உயர்வும்,சம்பள உயர்வும் தர வேண்டும்.

ஐந்து வருசத்துக்கொருதரம் சம்பள கமிஷன் அமைத்து மானாவாரியாக சம்பளம் தருவதை விட பெரும்பாலான அரசு துறைகளை அவுட் சோர்சிங் கூட செய்யலாம்.ஏகப்பட்ட காசு மிச்சமாகும்.

இப்போதிருக்கும் அரசியல் வியாதிகள் இதை செய்ய மாட்டார்கள்.மன்மோகனார் தான் செய்ய வேண்டும்.அதற்கு நாம் இந்த கோரிக்கையை தகுந்த தளங்களில் எழுப்ப வேண்டும்.

தகுதிக்கு ஏற்பவே சம்பளம்.பெஞ்சை தேய்ப்பதற்கு அல்ல.

லஞ்சத்தை ஒழிக்க எனது எளிமையான கருத்துகள் வருமாறு

1) அலுவலக நுலைவாயிலில், இந்த சான்றிதழுக்கு இவ்வளவு கட்டனம் என்று ஒரு பலகையில் எழுதி வைக்கலாம்.(இதை படிக்க தெரியனுமே?, படித்தவர்கள் துணையோடு செல்லலாம்).

2) ஒவ்வொரு மனுவுக்கும் ஒரு டோகன் குடுக்கப்படலாம். அதாவது, இந்த தேதியில், இந்த நேரத்தில் நாங்கள் மனு பெற்றுக்கொண்டோம் என்று(முடிந்தால் இந்த தேதியில் கட்டாயம் நீங்கள் எதிர்பார்த்தது கிடைக்கும் என்றும் குறிப்பிடலாம்)

3) Feedback forms ஒவ்வொரு அலுவலகத்திலும் வைத்து அதை மக்கள் உயர் அலுவலகத்திர்க்கு அஞ்சலில் அன்னுப்பலாம்

4) பள்ளிக்கூடங்களில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் “எங்கள் வாழ்வில் என்றுமே லஞ்சம் வாங்க மாட்டோம்” என்று தினமும் உருதி மொழி எடுக்கலாம்.:))

5) “லஞ்சம் வாங்காதே” என்பது போல் நிறைய போஸ்டர்கள் வீதி முழுவதும் ஒட்டலாம்.தீண்டாமை பெருங்குற்றம் என புத்த்கங்களில் எழுதுவது போல் “லஞ்சம் வாங்குவது தேச துரோகம்” என அரசு அலுவலகங்களில் பெரிய எழுத்துக்களில் ஒட்டி வைக்கலாம்.விஜிலன்ஸ் நம்பரை ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பெரிய எழுத்துக்களில் ஒட்டலாம்.சமூக சேவையினரும், அரசாங்கமும் இனைந்து இவை அனைத்தையும் செய்யலாம்.ஆகமொத்தம் காட்டுத்தீ போல் விழிப்புணர்வு வந்தாலே போதும் !!

ஆனால் இவையெல்லாம் ஒரு checks and balance வகைதான். எந்த அமைப்பிலும் திருட வேண்டும் என எண்ணும் சிலரை தடுக்கும். அவ்வளவே.மேலும் இது போன்ற விசயங்களில், மணி கட்டுவதை விட, பூனையே பார்த்து திருந்துவதுதான் நல்லது. வளரும் தலைமுறைக்கு, முறைகேடான வருமானம் மானக்கேடானது என அழுத்தமாக பதிய வைக்க வேண்டும். இந்த மானக்கேட்டை செய்பவர்களை சமூக விலக்கம் செய்ய வேண்டும்.அடிப்படை சிந்தனையான ஊட்டு பெறுதல் ஊட்டு வழங்குதல் மானத்தோடு தொடர்புடைய ஒன்று என்கிற அடிப்படை உறுதிப்படாதவரை, இதை ஒழிப்பது கடினம் என தோன்றுகிறது.வருடக்கணக்கில் மெதுவாக ஊடுருவியுல்ல இதை ஓரிரு புதினங்களில் சிஸ்டம்ஸ் அண்ட் புரெசிஜர்ஸ் மூலம் மாற்ற இயலாது. சமூகம் தழுவிய தொலைநோக்கு திட்டம் தேவை.

www.holyox.blogspot.com
http://groups.google.com/group/muththamiz?hl=en

கட்டுரையில் உள்ள சில கருத்துக்களை அளித்தவர்கள்

ஆறுமுகம் திருஞானம்

ஜி.ராகவன்
நாரியா
சந்தோஷ்
சூப்பர் சுப்ரா
நெருப்பு சிவா
சமுத்ரா

Series Navigation