அம்மாவுக்காக சில வரிகள்

This entry is part [part not set] of 34 in the series 20070419_Issue

கோ.வெற்றி


அன்று

உன் மடியில் மழலையாய் நான்!

இன்று

என் இதயத்தில் நிணைவலையாய் நீ!

அன்று

என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு

நீ தவித்த தவிப்பு இன்னும்

என் நெஞ்சில்

இன்று

காலங்கள் கடந்தாலும்

உன்னை நிணைக்கும் போது இன்னும்

மழலையையாய் நான்….

அன்பே

நீ

என்னை ஈன்றதற்காக

காத்துகிடக்கின்றேன் அன்பே!

உனக்காகப் புகழ்

மழையைத் தேடி…..

என் அன்பே

நான்

காதலிக்கும் முதல் பெண்மணி

நீதான் ஞாபகத்தில் வை!

நீ

என்னை சுமந்த அன்றே…

எனக்கு மட்டும் நிணைவிருக்குமெனில்

அன்று

நீ

துடித்துடித்த அந்த துடிப்பை உனர்ந்து

கருவறையிலேயே கரைந்துபோயிருப்பேன்

உன்னை

இந்த பாவிக்காக பணயம் வைத்தாய்

என்னை

இந்த உலகில் அறிமுகம் படுத்த!

நான்

உனக்கென்று என்ன செய்து

உன்னை திருப்தி படுத்த முடியும்

ஒருவேளை என் உயிரை மடித்து

உனக்குமட்டும் சாகாவரம் கிடைக்குமெனில்

இப்பொழுதே சாக ஆசைப்படுகிறேன்…..

அன்பே

உன்னை தெய்வத்திற்கு சமமென்று

சொல்லமாட்டேன், ஏனென்றால்….

நீ

தெய்வத்திற்கு ஒரு படி

மேல் என்பதால்……..


கோ.வெற்றி

கிள்ளை

shahul.hameed@alpineservices.com.sg

Series Navigation

கோ.வெற்றி

கோ.வெற்றி