அபத்தம் அறியும் நுண்கலை – 2

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

கார்ல் சாகன்


அமெரிக்கப் புரட்சியாளர் TOM PAINE தனது AGE OF REASON என்ற நூலில் குறிப்பிட்டதைப் போல நம்பிக்கையின்மை (நாத்திகம் – இறைமறுப்பு) ஒழுக்க ரீதியான முழுமையான விளைவுகளைக் கொண்டுள்ளது.

இறை மறுப்பு என்பது நம்புவதிலோ நம்பாமல் இருப்பதிலோ இல்லை. தான் நம்பாத ஒரு விஷயத்தை நம்பச் சொல்லிப் பிரச்சாரம் செய்வதில் இருக்கிறது. இந்த ஒழுக்கக் கேட்டை அளவிடுவது சாத்தியமானதல்ல. நான் இதனை இப்படிச் சொல்வதானால்: மனப்பூர்வமாகப் பொய் சொல்வது என்பது சமுதாயத்தில் இருக்கிறது. எங்கே மனிதன் கற்பைப் பறிகொடுத்து சோரம் போகிறானோ அதாவது தான் நம்பாத விஷயங்களை தொழில் ரீதியான நம்பிக்கையாக வரித்துக்கொள்கிறானோ அங்கே ஒவ்வொரு குற்றத்தையும் செய்வதற்குத் தன்னைத்தானே தயாரித்துக் கொண்டு விட்டான் என்று பொருள்படும்.

T.V. HUXLEY சொல்கிறார் :
“ஒழுக்கத்தின் அடித்தளம் என்பது, சாட்சியம் இல்லாதவற்றை நம்புவதாக நடிப்பதை விட்டு விலகுவதும், அறிவின் சாத்தியத்துக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் பற்றிய முன்மொழிதலை விட்டு விலகுவதும் ஆகும்”.

கிளமெண்ட், ஹ்யூம் , பேய்ன் மற்றும் ஹக்சிலி ஆகிய அனைவரும் மதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது எழுத்துக்களில் பெரும்பான்மை ஆன விஷயங்களுக்குப் பொறுத்திப் பார்க்கும் பிரயோகங்களும் இருந்தன. உதாரணத்துக்கு நமது வணிக ரீதியான கலாச்சாரத்தின் பின்புலம் பற்றி ஓயாமல் விடாப்பிடியாக வற்புறுத்தி வந்ததைக் குறிப்பிடலாம்.

ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணி பற்றி வகைவகையான விளம்பரங்கள் வருகின்றன. அதில் மருத்துவர் போல வேடம் பூண்ட நடிகர்கள் சந்தைபோட்டியிடும் தயாரிப்புகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலிபோக்கி உட்பொருட்கள் இவ்வளவு அடங்கி இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆனால் அந்த அற்புதமான உட்பொருட்கள் (Ingredient) (மருந்துக்கலவை) என்ன என்று உங்களி¢டம் சொல்வதில்லை. அவர்களது தயாரிப்பில் அதிக அளவில் அந்த உட்பொருட்கள் அடங்கி இருக்கிறது (1.2 லிருந்து 2 மடங்கு ஒவ்வொரு மாத்திரையிலும் உள்ளது) எனவே அவர்களது தயாரிப்பினை நாம் வாங்க வேண்டும். எனினும் போட்டியிடும் இருவகையான தயாரிப்புகளை ஏன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது? போட்டியிடும் தயாரிப்புகளின் வலி போக்கும் வலிமை, முறையான வலிமையை விட எவ்வாறு துரிதமாக வேலை செய்கிறது என்பதை ஏன் சொல்லக்கூடாது?. கூடுதலான வலிமை உள்ளதை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது?

அத்தோடு கூட ஆஸ்பிரின் மருந்தை உட்கொள்வதால் அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பேருக்கு மேல் மரணம் அடைகிறார்கள்.ACETAMINOPHEN அதுவும் குறிப்பாக TYLENOL பயன்படுத்துவதால் ஆண்டு ஒன்றுக்கு 5000 -கும் அதிகமானவர்களின் சிறுநீரகங்கள் சீர்கேடு அடைகின்றன என்கிற தகவலை யாரும் நமக்குச் சொல்லுவதில்லை.காலை உணவின் போது நாம் சாப்பிடும் உயிர்மச்சத்து மாத்திரையை விட கூடுதலான சத்து எந்த தானிய வகையில் இருக்கிறது என்பது பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? அமில எதிர்ப்பு மருந்தில் சுண்னாம்பு கலந்து இருக்கிறது. இந்தச் சுண்ணாம்பு சத்து ஊட்டத்துக்கு அவசியம் என்பதை விட வயிற்றுப் பொருமலுக்குத் தேவையற்றது என்பதை யார் பொருட்படுத்துகிறார்கள்?இது போன்ற பல தவறான வழிகாட்டுதல்களையும் பொருப்பற்ற தவிர்த்தலையும் பயனீட்டாளர் செலவில்தான் செய்கிறது வணிகக்கலாச்சாரம்.
நீங்கள் கேள்வி கேட்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுவது இல்லை. வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அவ்வளவுதான்.

ஆதாயத்துக்காக இவ்விதத் தயாரிப்புகளைப் பரிந்துரைக்கும் உண்மையான நிபுனர்களும் அல்லது நிபுனர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பலரும் இடைவிடாத அடைமழை போல் ஏமாற்று வித்தையில் குதித்து இருக்கின்றனர்.வாடிக்கையாளர்களை மதிமயக்கும் நோக்கத்தில் துரோகம் செய்கின்றனர்.அறிவியலின் நம்பகத்தன்மையின் மேல் மக்களுக்கு இருக்கும் கண்ணோட்டத்துக்குள் நயவஞ்சகமான ஊழலை அறிமுகப் படுத்துகின்றனர்.இன்று ஓரளவு பெருமை படைத்த உண்மையான அறிவியலாளர்கள் கூட பெரும் நிறுவனங்களின் பொய்யான நுகர்வோராக நடிக்கும் வர்த்தக சூதாடி விளம்பரப் படங்கள் கூட வருகின்றன.அறிவியலாளரும் கூட பணத்துக்காக பொய் சொல்லலாம் என அவர்கள் கற்றுத்தருகின்றனர்.TomPaine எச்சரித்ததைப் போல, பொய்களுக்கு நம்மை ஆற்றுப்படுத்துகின்றனர்.பல்வேறு தீமைகளுக்கும் அடித்தளம் அமைக்கின்றனர்.

WHOLE LIFE EXPOSE-என்கிற வருடாந்திர பொருட்காட்சியின் நிகழ்ச்சி நிரல் என் முன்னே இருக்கிறது
சான்fபிரான்சிஸ்கோவில் புது யுகத் தொழிற்கண்காட்சி (NEW AGE EXPOSITION) நடந்தது.வழக்கம் போல பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனைக் காண வந்தனர்.மிகவும் சந்தேகத்துக்குறிய தயாரிப்புகள் பற்றி மிகவும் கேள்விக்குரிய நிபுணர்கள் தரகு வேலை பார்த்தனர்.அங்கே விளம்பரப்படுத்தப்பட்ட சில வாசகங்கள் கீழ்க்கண்டவாறு இருந்தன:
“அடைபட்ட இரத்தப்புரதங்கள் வலியையும் வேதனையையும் எப்படி உருவாக்குகின்றன? _”பளிங்குக்கற்கள் என்பவை தாயத்துகளா அல்லது கற்களா?” (எனக்கென இது பற்றி ஒரு கருத்து இருக்கின்றது).”பளிங்குகள் வானொலி மற்றும் தொலைக்காட்சிக்கு ஒலி-ஒளி அலைகளை குவித்துத் தருவது போல்-சுருதி சேர்ந்த இசைவான மனிதர்களுக்கு ஆன்மீக அதிர்வலைகளைப் பெருக்கித்தரும்”_இது வானொலி மற்றும் தொலைகாட்சி எவ்வாறு செயல் படுகிறது என்பது பற்றிய மட்டமான புரிதலின் விளைவு ஆகும்.அல்லது , “தேவதை மீண்டும் வருகை-ஒரு காட்சி விளக்கச் சடங்கு ” , மற்றொன்று “சமகால அனுபவம் அறிதலும் புரிதலும்”, சகோ.சார்லஸ் வழங்கியது இது.”.YOU SAINT GERMAIN AND HEALING THROUGH THE VIOLET FLAMES” வயலெட் சுவாலையால் குணப்படுத்தல்……..இப்படியாக அது நீண்டு கொண்டிருக்கிறது.வாய்ப்புகள் பற்றிய ஏராளமான விளம்பரங்களுடன் கிடைக்கும் போலிகளுக்கு ஒத்திசைவாய்ப் பாடும்சேர்ந்திசைகள் ஆகியன எல்லாம் கிடைக்கின்றன WHOLE LIFE EXPO-வில்.

மனமொடிந்த புற்று நோயாளிகள் புனித யாத்திரை செல்கிறார்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு.அங்கே ஆவியுலத் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக்கொள்கிறவர்கள் நோயாளிகளின் உள்ளுறுப்புகளுக்குள் நுழைந்து பாதிக்கப்பட்ட உடற்பகுதிகளை வெளிக்கொண்டு வருவதாக ,கோழி ஈரல் அல்லது ஆட்டினுடைய இதயத்தின் துண்டுகளை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறார்கள்.அது வெற்றிகரமாக நடந்தேறுகிறது.மேற்கத்திய ஜனநாயக நாட்டின் தலைவர்கள் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் பற்றி முடிவு எடுக்குமுன் சோதிடர்களையும் ஆன்மீக குருக்களையும் முறையாகக் கலந்து ஆலோசிக்கின்றனர்.

துப்புத்துலக்க முடியாத கொலை வழக்குகள் அல்லது காணாமல் போனவர்கள் இவற்றைக் கண்டறிய ESP நிபுணர்களைக் காவல்துறை பயன்படுத்துகிறது. (இந்த நிபுணர்களோ பொது அறிவுக்கு மேலாக எதையும் யூகித்து விடுவதில்லை. ஆனாலும் காவல் துறை அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது. எதிரி நாடுகள் கட்புலனுக்கு அப்பாற்பட்டதைக் காணும் திறமையை அதிகம் ஈட்டி விட்டதாகத் தெரிய வந்தால் உளவுத்துறை காங்கிரசின் தூண்டுதலின் பேரில்,ஆழத்தில் உள்ள நீர்முழுகிக் கப்பல்களைக் கண்டறிய ஆழ்ந்த தியானத்தின் மூலமாகக் கண்டறிய முடியுமா என்று மக்களின் வரிப்பணத்தைச் செலவிடுகிறது.ஒரு உளவியல் நிபுணர் / தொலை நோக்காளர் ஊசல் குண்டு மந்திரக்கோல் இவற்றை தேசப்படத்தின் மீது நகர்த்தி விமானத்தில் பறந்து புதிய கணிம வளங்களைக் கண்டு பிடிப்பதாக பாவலாப் பண்ணுகின்றனர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சுரங்க நிறுவணம் இவர்களுக்கு ஏராளமான டாலர்களை வாரி வழங்குகிறது.அவர்கள் சொல்வது பொய்த்துப் போனால் பணம் திரும்பி வராது.ஆனால் பலித்து விட்டால் கண்டுபிடிக்கப் படும் கணிமத்தில் அவர்களுக்குப் பங்கு தர வேண்டும்.ஒன்றுமே கண்டு பிடிக்கப்படவில்லை.இயேசுபிரானின் சிலைகளும் மாதாவின் சித்திரங்களும் கண்ணீர் வடிப்பதாகச் சொல்லப்படுகிறது. அன்பு உள்ளம் கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தாமும் அந்த அற்புதத்தைக் கண்டதாகச் சாட்சியம் அளிக்கின்றனர்.

இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்ட அல்லது அதீதமான தகாத நம்பிக்கை கொண்ட அபத்தங்கள்.சில நேரங்களில் இம்மாதிரியான ஏமாற்றுதல்கள் வெகுளித்தனமாகவும் ஆனாலும் உடந்தையாகவுமிருக்கிறது.சில நேரங்களில் முன் கூட்டியே சிந்திக்கப்பட்ட கெட்ட நோக்குடையதாகவும் இருக்கிறது.வழக்கம் போல்பலிக்கடா ஆகுபவர் உணர்ச்சிப் பெருக்கில்ஆழ்ந்து விடுகிறார்.ஆச்சரியம் அச்சம் பேராசை துயரம் வந்து கவ்வுகின்றன.இவ்வாறு எளிதாக நம்பிவிடுவதில் பண விரையம் ஏற்படும்.அதைத்தான் P.T.BARNAM: “ஒவ்வொரு நிமிடத்துக்கும் ஒரு ஏமாளி பிறக்கிறான்” என்று சொன்னார்.ஆனால் இது மேலும் ஆபத்தானதாகக் கூடும்.அரசுகளும் சமுதாயங்களும் விமர்சன ரீதியான சிந்தனையை இழந்து போனால் அபத்தங்களை விலை கொடுத்து வாங்குபவர்கள் மீது அனுதாபம் காட்டப் பட்டாலும் கூட விளைவுகள் விபரீதமாகி விடும்.

சோதித்து அறியப்பட்ட முடிவுகள் புள்ளி விவரங்கள் அவதானிப்புகள் அளவைகள் போன்ற தரவுகளிலிருந்து அறிவியலில் நம்மால் புதிய கண்டு பிடிப்புகளைத் தொடங்க முடியும்.நாம் எதையாவது கண்டு பிடிக்கிறோம் என்று சொன்னால்,வெளிப்படையாகக் காட்ட முடிந்த வளமான விளக்கங்களைக் கொண்டு ஒவ்வொரு தகவலையும் முறையாக உரசிப்பார்க்கிறோம் என்று பொருள் படும்.அறிவியளாளர்கள் தங்களது பயிற்சியின் போது அபத்தம் அறியும் கருவிகளை உள்வாங்கித் திறம் பெருகின்றனர்.எங்கெல்லாம் புதிய சிந்தனைகள் முன் வைக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம் இந்தக் கருவிகள் பயன் படுத்தப் படுகின்றன.இந்தக் கருவிகளின் கூரிய ஆய்வினை புதிய கருத்து தாக்குப் பிடிக்குமானால் அதனை நாம் மேலும் புடம் போட்டுப் பார்க்கின்றோம்.ஆனாலும் கூட பரிட்சார்த்தமாகத்தான் ஒப்புக் கொள்கிறோம்.அது செயற்படும் என உறுதியளித்த போதிலும்;அதனை வாங்க ஒருவர் விரும்பவில்லை என்றால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவற்றைக் கடைப் பிடிக்கலாம். சோதித்து உண்மையென நிரூபிக்கப் பட்டதும் பயனீட்டாளர்களால் முயற்சிக்கப் பட்டதுமான முறை அதுவாகும்.

அபத்தம் அறியும் அந்தக் கருவிப் பெட்டகத்தில் என்னதான் இருக்கிறது? சமய நம்பிக்கையற்ற சிந்தனைக்கான கருவிகள் அவை.(அய்யுறவான சிந்தனை).எந்தவொரு வாதம் கட்டுவிக்கவும் புரிந்து கொள்ளவும் முடியதாகவும் காரண காரியத் தொடர்பு உடையதாகவும் இருக்கிறதோ அல்லது பொய்யானதும் தவறானதும் ஆன வாதங்களைக் கண்டறியும் சாதங்களைக் கூர்மைப் படுத்துகிறதோ அது அய்யுறவு வாதம் எனவாகும்.தொடர்ச்சியான காரணங்களைப் பகுத்தறிந்து எட்டப்படும் முடிவை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது இங்கு கேள்வி அல்ல.ஆனால் தொடக்கப் புள்ளியில் இருந்து பின் தொடரும் முடிவுகள் சரியானவையா அல்லது தொடக்கப் புள்ளியே சரியானது தானா என்பதுவே கேள்வி ஆகிறது.

அபத்தம் அறியும் அந்தக் கருவிகளாவன:

# எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் அந்த தகவல்-உண்மை சுதந்திரமாக உறுதி செய்யப்பட வேண்டும்.

# கிடைக்கும் சாட்சியங்கள்-தரவுகள் மீது எல்லாக் கோணங்களில் இருந்தும்,அவற்றை முன் மொழிபவர்கள் ஆழ்ந்த விவாதம் நடத்த வேண்டும்.

# AUTHORITY-அதிகாரத்தில் உள்ளவர்கள்/ விற்பன்னர்கள் ஆகியோரின் வாதங்கள் வலுவற்றவை. தகுதி உடையவர்கள் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளனர். எதிர் காலத்திலும் அவர்கள் இவ்வாறே செய்வார்கள்.இதனை இன்னும் நேர்த்தியாகச் சொல்லுவதென்றால் அறிவியல் விற்பன்னர்கள் என யாரும் கிடையாது.மிஞ்சிமிஞ்சிப் போனால் நிபுணர்கள் இருக்கிறார்கள்
.
# ஒன்றுக்கு மேற்பட்ட கருதுகோள்களை உருவாக்கி மோத விட வேண்டும். எதையாவது விளக்க வேண்டியிருப்பின் எந்தெந்த மாறுபட்ட வழிகளில் எல்லாம் சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு மாற்றுக் கருத்தினையும் மறுதலிப்பதற்கான பரிசோதனைகள் பற்றிப் பிறகு சிந்திக்க வேண்டும்.மறுதலிக்கவே முடியாமல் எது மிஞ்சி நிற்கிறதோ ,அதுவே, “பல தரப்பட்ட கருதுகோள்களின் செயற்பாட்டில் “- டார்வீனிய முறைப்படி இறுதித் தேர்வு செய்யப் பட்டது எனவாகும். உங்கள் மனதுக்குப் பிடித்த முதல் கருதுகோளைப் பின் பற்றிச் செல்வதை விட இத்தகையக தேர்வே சரியான விடையாக இருக்கும் வாய்ப்பினைப் பெறுகிறது.
# குறிப்பு :இத்தகைய மனதுக்குப்பிடித்த கருதுகோளின் பின் செல்லல் என்பது JURY TRIAL – எனப் படும் அறங்கூறாயத்தின் நடுநிலையைப் பாதிக்கும் போக்காக இருக்கிறது.சில நடுவர்கள் வாதங்களின் ஆரம்ப கட்டத்திலேயே தங்கள் மன நிலையை ஒரு போக்காக வரித்துக் கொண்டு, தங்கள் துவக்க கால மனப்பதிவை ஆதரிக்கும் சாட்சியங்களை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு மாறுபட்ட சாட்சியங்களை மறுதலிக்கிறார்கள் என்பதனை கடந்த கால ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.மாறுபட்ட கருதுகோள்கள் செயல்படும் என்பது அவர்களது மண்டையில் உறைப்பது இல்லை.

# உங்களுடைய சொந்தக் கருதுகோள் என்பதனால் அதன் மீது அதிகப் பற்று வைக்காதீர்கள். அந்தக் கருத்து ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்ற கேள்வியினை எழுப்புங்கள். மாற்றுக் கருத்துடன் நியயமான முறையில் அதனை ஒப்பு நோக்கிப் பாருங்கள். உங்கள் கருதுகோளினை மறுப்பதற்கான காரணங்களைக் கண்டு பிடிக்க முடியுமா என்று முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவ்வாறு முயற்சி செய்யவில்லை என்றால் மற்றவர்கள் அதனைச் செய்து விடுவார்கள்.

# அளவைப்படுத்துங்கள். நீங்கள் விளக்குவதற்கு எடுத்துக் கொண்ட விஷயத்தில் ஏதாவது எண்ணிக்கை வகையிலான அளவுகள் இருப்பின்போட்டியிடும் மற்ற கருதுகோள்களில் இருந்து வேறுபடுத்தி அறிய முடியும்.மேம்போக்காகவும் தரம் பற்றியதாகவும்(குணாம்சம்) இருப்பின் அது தொடர்பான பல விளக்கங்களை அளிக்க வேண்டியிருக்கும்.தரம் சார்ந்த உண்மைகளையும் தேட வேண்டிய கடமை இருக்கிறது எனினும் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமமான சவாலுக்கு இழுக்கும் தன்மையானதாக இருக்கும்.

# சங்கிலித் தொடரான வாதங்கள் இருப்பின் அவற்றின் ஒவ்வொரு கண்ணியும்( LINK ) செயற்ப்படுவதாக இருக்க வேண்டும். பெரும்பாலானவை செயல் படும் என்பதாக இருப்பது போதாது.துவக்கம் கூட இவ்விதிக்கு உள்ளடங்கியதாகவே இருக்க வேண்டும்.

# OCCAM `S RAZOR : கத்திமுனையால்செதுக்குவது போல் தேவையில்லாதவற்றை செதுக்கி விட வேண்டும். இரண்டு கருதுகோள்கள் ஆய்வுக்கு வருமெனில் எளியதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# குறைந்த பட்சம் கொள்கையளவிலாவது அந்தக் கருதுகோளை மறுதலிக்க முடியுமா எனப் பார்க்க வேண்டும் சோதித்து அறிய முடியாதவை நிலைநிறுத்த முடியாதவை குற்றம் கண்டு பிடிக்க முடியாதவை என்ற வகையிலான கருத்துகள் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல.மிகப் பெரியதான அண்ட கோளத்தில் பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் வெறும் அடிப்படைத் துகள்கள்- ஒரு எலக்ற்றான் என வைத்துக் கொள்வோம்.ஆனால் நமது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து எந்தத் தகவலும் பெற முடியாது எனின் அந்தக் கருத்து நிரூபிக்க முடியாதது என ஆகி விடும் அல்லவா?.உறுதிப்பாடுகளை வற்புறுத்துவதைத் தடுக்க உங்களால் முடிய வேண்டும்.தலை கீழாகப் புரட்டிப் பார்க்கும் அய்யுறவு வாதிகளுக்கு ,அவர்கள் உங்களது நியாயத்தைப் பின் பற்றவும் உங்களது சோதனைகளை நகலெடுத்து தாமே செய்து பார்க்கவும் உங்களுக்குக் கிட்டிய அதே விளைவுகள் அவர்களுக்குக் கிட்டுகின்றதா என்பதைக் கண்டறியவும் வாய்ப்புத் தர வேண்டும்.

கவனமாக வடிவமைக்கப்பட்டதும் கட்டுப்பாடானதும் ஆன சோதனைகள் மீது நம்பிக்கைவைப்பதும் சார்ந்திருப்பதும் தான் நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல் சரியான திறவு கோல் ஆகும்.வெறுமனே ஆழ்ந்து சிந்திப்பதன் மூலமாக மட்டும் நாம் அதிகமாகக் கற்றுக்கொள்ள முடியாது.முதலில் மனதில் உதித்த விளக்கங்களுடன் திருப்தி அடைந்து போகும் விருப்பம் இருக்கத்தான் செய்யும்.ஒன்றுமே இல்லாததற்கு இந்த நிலை மேல் தான்.ஆனாலும் நாம் பலவற்றையும் கண்டு பிடிக்கும் போது என்ன நிகழுகிறது? அவற்றுள் ஒன்றை எவ்வாறு தேர்ந்து எடுப்பது? நாமே அவ்வாறு தேர்வு செய்யக் கூடாது.சோதனைகளே அதனை அறுதியிட அனுமதிக்க வேண்டும்.fபிரான்சிஸ் பேக்கன் இது பற்றி சிறந்த அறிவுரை¨யை வழங்கி உள்ளார்:

” புதியதைக் கண்டு பிடிக்க விவாதங்கள் மட்டும் போதாது.விவாதங்களின் நுட்பத்தை விட இயற்கையின் நுட்பங்கள்பல மடங்கு பெரியவை.”

கட்டுப்படுத்தும் சோதனைகள் அவசியம்.உதாரணமாக,ஒரு புதிய மருந்து அப்போதைய ஒரு நோயை 20 விழுக்காடு கட்டுப்படுத்துகிறது என்று சொல்லப்பட்டால்; ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை ,அதாவது சோதனைக்கு உட்படுத்தப் படுகிறவர்கள்,வெறும் இனிப்பு மாத்திரையை புதிய மருந்து என நினைத்துக் கொள்வதாக வைத்துக் கொண்டோமானால் அவர்களும் கூட 20 விழுக்காடு நோய் உடனடியாகக் குறைவதாக நினைக்கக் கூடும் அல்லவா?

மாற்றமானவைகளை தனித் தனியாகப் பிரித்து அறிய வேண்டும். உங்களுக்கு கடற்பயணத்தின் போது தலை சுற்றல் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.அப்போது உங்களுக்கு அக்குப்பிரசர் எனப்படும் குறிப்பிட்ட நரம்பு முடிச்சுகளை அமுத்தி விடும் சிகிச்சையும் 50 மில்லி கிராம் MECLIZINE எனப்படும் மருந்தும் தரப்படுவதாக வைத்துக்கொள்வோம்.அடுத்த முறை கடற்பயணத் தலைச் சுற்றல் வரும் போது இவற்றுள் ஏதேனும் ஒரு சிகிச்சையை நீங்கள் எடுத்துக் கொண்டால் மட்டுமே, மருந்து உட்கொண்டதால் குணமடைந்தீர்களா அல்லது அமுக்கு வளையத்தால் குணமடைந்தீர்களா என்பதை உறுதி செய்ய முடியும்.

இப்போது நீங்கள் கடற்ப்பயணத் தலைச்சுற்றல் சோதனைக்கு ஆட்பட இசைந்ததுபோல் அறிவியல் சோதனைகளுக்கு அர்பனிக்கத் தயாராகவில்லை என்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது வெவ்வேறு விதங்களை பிரித்துப் பார்க்க இயலாது நீங்கள் இருவிதமான சிகிச்சைகளையுமே எடுத்துக் கொள்வீர்கள். நடைமுறை ரீதியான விளைவை அடைந்து விட்டோம் அதனால்
மேலும் அறிவு பெறுவற்காக வீண்சிரமப்படத் தேவை இல்லை என்று நீங்கள் சொல்லக் கூடும்.

விளைவுகளை மதிப்பிட்டுப் பார்க்கும் வலுவான சாத்தியகூறுகள் உள்ள ஒரு கண்டுபிடிப்பினை எதிர்பார்த்து பெரும்பாலும் பரிசோதனைகள் செய்யக்கூடாது. (SIC) உதாரனமாக ஒரு புதிய மருந்தை பரிசோதித்து பார்க்கும்போது மருத்துவரிடமிருந்து எந்த நோயாளிகளுக்கு அந்த மருந்து கொடுக்கபட்டது என்பதைவிட எந்த நோயாளிகளுக்கு நோய் அறிகுறிகள் குணம் அடைந்தது என்பதை அறிய நீங்கள் விரும்பக் கூடும். தற்செயலாக உணர்வுக்குள் புகாமலேயே இந்தத் தகவல் அவர்களது முடிவை பாதிக்கக் கூடும். அதற்குப்பதிலாக யாருக்கெல்லாம் புதிய மருந்து தரப்பட்டதோ அவர்களது பட்டியலும், நோய் அறிகுறிகள் யாருக்கெல்லாம் குறைந்ததோ அவர்களது பட்டியலும், தனிதனியாக அலசப்பட / உறுதி செய்யப்படவேண்டும். பின்னர் ஒன்றுக்கொன்றான தொடர்பு எவ்வாறு இருக்கிறது என்பதை நீங்கள் நிர்ணயிக்க முடியும். அல்லது குற்றவாளியை அடையாளம் காண்பதற்காக நடத்தப்படும் அணிவகுப்பின் போது அதற்குப் பொறுப்பான காவல் துறை அதிகாரிக்கு முக்கிய குற்றவாளி யார் என்பது தெரிந்திருந்தால் உணர்வுபூர்வமாகவோ அல்லாமலோ அது சாட்சியத்தின் மீது செல்வாக்கு செலுத்தும்.

ஒரு கருத்தைப் பற்றிய உரிமை கோருதலை மதிப்பீடு செய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுத் தருவதோடு கூட, ஒரு நல்ல அபத்தம் அறியும் கருவிப்பெட்டகம், நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைச் சொல்லுவதாகவும் இருக்கவேண்டும். தர்க்கத்துக்குப் புறம்பான பொய்களையும் தவறுகளையும் அலங்காரச் சொற்களையும் அடையாளம் கண்டுகொள்ள இது உதவும். மதத்திலும் அரசியலிலும் பல நல்ல எடுத்துக் காட்டுகளை நீங்கள் இது தொடர்பாக காண முடியும். ஏனெனில் இதன்மூலம் பிழைப்பு நடத்துபவர்கள் பெரும்பாலும் இரு முரண்பாடான கருத்துகளிடையே சமரசம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இத்தகைய பொய்களில் சில:

# AD HOMINEM ; – மனிதனைக் குறி வைத்து எனப் பொருள் படும் இலத்தீன் சொற்றொடர் இது.இதன் படி ஒரு வாதத்துக்கு எதிர் வாதம் செய்வதற்குப் பதிலாக /மாற்றுக் கருத்தை வைப்பதற்குப் பதிலாக மாற்றுக் கருத்து உடைய மனிதனைத் தாக்குவதாகும் ( எ.கா ) REV.DR.SMITH அவர்கள் விவிலிய அடிப்படை வாதி எனவே பரிணாம வளர்ச்சி பற்றிய அவரது கருத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

# ARGUMENT FROM AUTHORITY ; அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து வரும் வாதம். எடுத்துக்காட்டாக குடியரசுத் தலைவர் நிக்சன் மீண்டும் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்,ஏனெனில் தென் கிழக்கு ஆசியாவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு ரகசியத் திட்டத்தை வைத்திருக்கிறார்._ஆனால் அது இரகசியம் என்பதால் வாக்காளர்கள் இதன் சாதக பாதகங்களை மதிப்பீடு செய்ய முடியாது.அவர் குடியரசுத் தலைவர் என்பதனால் அவரை நம்ப வேண்டும் என்ற வாதம் தவறாகிப் போகிறது.

# ARGUMENT FROM ADVERSE CONSEQUENCES ;பாதகமான பின் விளைவுகள் ஏற்படும் என்கிற வாதம். எடுத்துக்காட்டாக நாம் செய்யும் புண்ணியம் பாவம் ஆகியவற்றைக் கவனித்து பரிசுகளும் தண்டனையும் வழங்கும் கடவுள் ஒருவர் இருந்தே ஆக வேண்டும்.அப்படி இல்லையென்றால் சமுதாயம் மேலும் சீர்கெட்டுப் போய் விடும்.ஒரு வேளை ஆட்சி செய்ய முடியாமல் கூட ஆகிவிடக் கூடும்.அல்லது மிகவும் பிரபலமான கொலை வழக்கு ஒன்றில் நிரபராதி என எதிர் வழக்கு ஆடுபவர் குற்றவாளி என தண்டிக்கப் பட வேண்டும்.இல்லையெனில் மற்றவர்கள் தம் மனைவியைக் கொல்ல ஊக்குவிப்பதாகி விடும்.

குறிப்பு: ரோமானிய வரலாற்றியலாளரான போலிபியஸ் இன்னும் மோசமான விதி முறை வகுத்தார்.அவர் என்ன சொல்கிறார் என்றால்: மக்கள் திரளானது நெறி பிறழ்ந்தவர்களாகவும், கட்டுக்கடங்காத ஆசை கொண்டவர்களாகவும், எளிதில் சினம் கொள்ளக் கூடியவர்களாகவும்,பின் விளைவுகள் பற்றிக் கவலைப் படாதவர்களாகவும் இருப்பதால் ,அவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எப்போதும் பயமுறுத்தியே வைத்திருக்க வேண்டும்.ஆகவே,மரணத்துக்குப் பின் தண்டனை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையையும் புகுத்தினார்கள் .

# APPEAL TO IGNORANCE ;அறியாமைக்கு வக்காலத்து வாங்குவது.
எதுவெல்லாம் தவறு என்று நிரூபிக்கப்படவில்லையோ அதுவெல்லாம் உண்மை -எதுவெல்லாம் சரி என்று நிரூபிக்கப்படவில்லையோ அதுவெல்லாம் பொய் என்ற வாதம். விண்வெளியில் சுற்றி வரும் அடையாளம் காணப்படாத பொருட்கள் பூமிக்கு வரவில்லை என வலியுருத்தும் சாட்சியங்கள் இல்லாமையால் இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எங்கும் அறிவுள்ள உயிர்கள் இல்லை என்பது அல்லது 70 KAZILLION உள்ளன ஆனாலும் அவற்றுள் ஒன்று கூட பூமியைப் போல் ஒழுக்கத்தில் முன்னேறியதாக இல்லை எனவே பிரபஞ்சத்துக்கு நாம் தான் இன்னும் மைய்யமாக இருக்கிறோம்.ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்படக்கூடியவற்றின் மீதான விஷயங்களின் மீதுஅவசரப்பட்டு முடிவெடுப்பதை இந்த சொற்றொடர் மூலம் விமர்சிக்க முடியும்.சாட்சியம் இல்லாமை என்பது இல்லாமையின் சாட்சியம் ஆகி விடாது.

# SPECIAL PLEADING ; அதீத சொல்லலங்காரமும் சூழ்ச்சியும் கலந்த வாதம்.
ஒரு முன் மொழிவு ஆழமான பிணைப்பு நடையில் இருப்பதில் இருந்து மீட்டல்.எடுத்துக்காட்டாக தனது கட்ட¨ளையை மீறி ஆப்பிள் பழம் ஒன்றைத் தின்று விட்டாள் என்பதற்காக இரக்கமுள்ள இறைவன் எதிர்கால சந்ததியினரை எவ்வறு தண்டிக்க முடியும்? சுதந்திரமான விருப்பம் என்ற நுட்பமான கோட்பாடு உங்களுக்குப் புரியவில்லை.அல்லது ,தந்தை மகன் புனித ஆவி மூன்றுமே எப்படி ஒருவரிடமே எப்படி இருக்க முடியும்? உங்களுக்கு தெய்வீக அற்புதமான திருத்துவம் புரியவில்லை. அல்லது யூத மதமும் கிருத்துவமும் இஸ்லாமும் தத்தம் வழியில் வலியுறுத்தும் அன்பும் கருணையும் செலுத்தும் வீரமிக்க நடவடிக்கைகளின் பேரால் இவ்வளவு காலமாக இவ்வளவு கொடுமைகளை இழைப்பதற்கு கடவுள் எப்படி அனுமதித்து வருகிறார்? திரும்பவும் நீங்கள் சுதந்திரமான விருப்பம் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.இருந்தபோதிலும் கடவுள் புதிரான வகையில் செயல் படுகிறார்.

# BEGGING THE QUESTION யூகத்தின் பேரில் வாதித்தல்/விடையைத் தானே யூகித்து வலியுறுத்தல்
எடுத்துக் காட்டாக: கொடுமையான குற்றங்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும். மரண தண்டனை நிறைவேற்றப் படுவதால் வன்முறைக் குற்றங்கள் குறைந்து விடுகின்றனவா? இலாபம் ஈட்டுவதற்காக முதலீடு செய்பவர்கள் தொழில் ரீதியில் சில சீரமைப்பு செய்ததால் பங்குச்சந்தையில் விலை குறைந்து விட்டதா? விளைவு எற்படுத்தும் சீரமைப்பின் பாத்திரம் மற்றும் இலாபம் ஈட்டுவது என்பதற்கு சுதந்திரமான சாட்சியங்கள் இருக்கின்றனவா?

# OBSERVATIONAL SELECTION வாய்ப்பான/ சாதகமான சூழ்நிலையைக் கண்காணித்தல்
தத்துவவாதி பிரான்சிஸ் பேக்கன் விவரித்ததைப் போல் குத்துக்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு தவிர்த்தலுக்கான புள்ளிகளைக் கண்டு கொள்ளாமல் விடுவது.

குறிப்பு :இதற்குப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டு என இத்தாலிய இயற்பியல் அறிஞர் என்ரிக்கோ பெர்மி பற்றிச் சொல்லப்பட்டதாகும்.அவர் புதிதாக அமெரிக்க கரைக்கு வந்தார்.மன்ஹாட்டன் அணு ஆயுதத்திட்டத்தில் சேர்க்கப் பட்டார்.இரண்டாவது உலகப் போரின் போது அமெரிக்கத் தளபதிகளை நேருக்குநேர் சந்தித்தார்.
குறிப்பிட்ட ஒருவர் பற்றி அவர் பெரிய ஜெனரல் என்பதாக அவரிடம் சொல்லப் பட்டது. பெரிய ஜெனரல் என்பதற்கான வரையறை என்ன என்று பெர்மி குறிப்பாகக் கேட்டார்.பல போர்களில் தொடர்ந்து வென்றவரை ஜெனரல் என நான் யூகிக்கிறேன்.எத்தனைப் போர்கள்? கூட்டிக்கழித்து அய்ந்து என அவர்கள் ஒப்புக்கொண்டனர். அமெரிக்க ஜெனரல்களில் எந்தப் பிரிவு மகத்தானது? மீண்டும் அப்படி இப்படி கூட்டிக் கழித்து சில விழுக்காடுகள் என்பதாக ஒப்புக் கொண்டணர்.

ஆனால் கற்பனை செய்து பாருங்கள்.மிகப் பெரிய ஜெனரல் என யாரும் இல்லை. எல்லா படைகளுமே சம பலம் வாய்ந்தவை.ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது முற்றிலும் தற்செயலானது.இரண்டில் ஒரு போரில் வெற்றி பெறுவது அல்லது 1/2 , 1/4 , 1/8 ,1/16 என்ற வரிசையான அய்ந்து போர்களில் 1/32 அதாவது இது மூன்று விழுக்காடு என ஆகும்.அமெரிக்க ஜெனரல்களில் ஒரு சிறிய விழுக்காடு தான் அதுவும் அய்ந்து தொடர்ந்த போர்களில் வெற்றி பெற வேண்டும் என எதிர் பார்ப்பீர்கள்.யாராவது பத்துப் போர்களில் தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்களா?

# STATICS OF SMALL NUMBERS ;குறைந்த எண்னிக்கையிலான புள்ளி விவரங்கள்.
இது கண்கானிப்பதுடன் நெருங்கிய உறவு கொண்டது இது.எடுத்துக் காட்டாக அய்ந்து பேர்களில் ஒருவர் சீனர் என்று சொல்கின்றனர்.அது எப்படி உண்மையாகும்? எனக்கு நூற்றுக் கணக்கானவர்களைத் தெரியும்.அவர்களில் யாருமே சீனர்கள் இல்லை ” உங்கள் உண்மையான” அல்லது “வரிசையாக மூன்று ஏழுகள் போட்டேன் இன்றிரவு நான் தோற்க முடியாது.”

# MISUNDERSTANDING OF THE NATURE OF STATISTICS ; புள்ளி விவரங்களின் தன்மை பற்றிய தவறான புரிதல் .
எடுத்துக்காட்டாக குடியரசுத் தலைவர் அய்சனோவர் ,அமெரிக்கர்களில் சரி பாதி சராசரி அறிவுத் திறமைக்கும் கீழே உள்ளனர் என்பதைக் கேட்டு திகைப்பும் பீதியும் அடைந்தார்.

# INCONSISTENCY ; முன்னுக்குப் பின் முரன் படுதல்.
திறமையான ஒரு இராணுவ எதிரி எவ்வளவு சேதம் ஏற்படுத்த முடியும் என்பதை முன் கூட்டியே யூகிக்கவேண்டும் ஆனால் சிக்கன நடவடிக்கையாக இன்னமும் நிரூபிக்கப் படாததும் சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைப்பதுமான அறிவியல் கண்டு பிடிப்புகள் பற்றி அலட்சியமாக இருக்கலாம் அல்லது முன்னள் சோவியத் யூனியனில் மக்களின் ஆயுட்காலம் குறைவாக இருந்ததற்கு கம்யூனிச ஆட்சி தான் காரணம் எனச் சொல்லிக்கொண்டே அமெரிக்காவில் குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு முதலாளித்துவம் தான் காரணம் என்று குற்றம் சாட்டத் தவறுவது.( தொழில் மயமான தேசங்களில் இதுவே மிக அதிக மானது.)அல்லது எதிர் காலத்தில் பிரபஞ்சம் எப்போதும் இருக்கும் ஆனால் கடந்த காலத்தில் அது அளவிட முடியாத நீண்டகாலமாக இருந்தது என்ற சாத்தியப்பாட்டினை கொச்சைப் படுத்துவது.

# NON SEQUITUR ;அது தொடருவதில்லை என்ற பொருள்படும் இலத்தீன் சொற்றொடர்.எடுத்துக்காட்டாக- நமது தேசம் வெல்லும் ஏனெனில் கடவுள் மகத்தானவர்-ஆனால் ஒவ்வொரு தேசமும் இதனை உண்மை எனவே நம்புகின்றனவே. ஜெர்மானியர்கள் இதையே GOTT MIT UNS என்று சொல்கிறார்கள்.இந்தப் பொய்க்குப் பலி ஆகுபவர்கள் மாற்று சாத்தியப்பாடுகள் குறித்து கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.

# POST HOC ERGO PROPTER HOC :அதன் பின் இது நிகழ்ந்தது .எனவே அதனால் தான் நிகழ்ந்தது என்ற சொற்றொடருக்கான இலத்தீன் வடிவம் இது. எடுத்துக்காட்டாக ஜெய்மெ கார்டினல் சின். மணிலாவின் ஆர்ச் பிஷப் சொன்னார் :60 வயதுக் கிழவி போல் தோற்றமளிக்கும் ஒரு 26 வயதுப் பெண்ணை எனக்குத் தெரியும்.அவள் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் தான் அப்படி இருக்கிறாள்.பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன் அணு ஆயுதங்கள் இல்லை.

# EXCLUDED MIDDLE OR FALSE DICHOTOMY ;தொடர்ச்சியான சாத்தியப்பாடுகளின் முதலாவதும் முடிவானதும் பற்றிச் சிந்திப்பது. எடுத்துக் காட்டாக என் கணவர் நல்லவர் அவரைப்பின் பற்றுங்கள் நான் எப்போதுமே தவறு செய்பவள்.அல்லது ஒன்று நாட்டை நேசிக்கிறாய் இல்லையெனில் வெறுக்கிறாய்.தீர்வுக்கான பங்கு உனக்கு இல்லையென்றால் நீ பிரச்சினையின் பங்காக இருக்கிறாய்.

# SHORT TERM V/s LONG TERM ; குறுகிய கால நோக்கு எதிர் /நீண்ட கால நோக்கு.
ஏற்கனவே சொல்லப்பட்ட இடையில் விடுபடுவதின் உப தலைப்பு இது.ஆனால் முக்கியமானது என்பதால் ச்ற்ப்பு கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். எடுத்துக் காட்டாக ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளுக்கு உணவு வழங்குதல் ,பள்ளி முன் பருவக் குழந்தைகளுக்கு கல்வி புகட்டுதல் போன்ற திட்டங்களுக்குச் செலவிட முடியாது.
தெருக்களில் நடக்கும் குற்றங்கள் பற்றி அவசர கவனம் செலுத்த வேண்டும்.அல்லது நமக்கு மிகப் பெரிய பட்ஜெட் பற்றாக்குறை இருக்கும் போது விண்வெளி ஆராய்ச்சியிலும் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியிலும் ஏன் ஈடுபட வேண்டும்?

# SLIPPERY SLOPE ,RELATED TO EXCLUDED MIDDLE -இடையில் ஒதுக்கியது பற்றிய வழுக்குப்பாதை.
எடுத்துக் காட்டாக கறுவுற்ற முதல் வாரங்களில் கருச்சிதைவை அனுமதித்தால் முழு வளர்ச்சி பெற்ற குழந்தையைக் கொல்வதைத் தடுக்க முடியாது.அல்லது அதற்கு எதிரிடையாக ஒன்பதாவது மாதத்தில் கூட கருச்சிதைவை அரசு தடுக்குமானால்வெகு விரைவில் கருவுறும் போது நமது உடலை என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.

# CONFUSION OF CO RELATION AND CAUSATION ;ஒன்றுக்கொன்றான காரணகாரியத் தொடர்பு பற்றிய குழப்பம் .
எடுத்துக் காட்டாக படிப்பறிவு குறைந்தவர்களை விட கல்லூரிப் பட்டதாரிகளில் ஒரினப் புணர்ச்சியாளர்களதிகம் இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது .எனவே கல்விதான் மக்களை ஒழுங்கீனம் உள்ளவர்களாக மாற்றுகிறது.அல்லது யுரேனஸ் கிரகம் நெருங்கி வரும் போதெல்லாம் ஆண்டிஸ் மலைத்தொடரில் பூகம்பம் ஏற்படுகிறது.எனவே இப்படிப்பட்ட காரண காரியத் தொடர்பு மிகவும் அருகில் உள்ளதும் மிகப்பெரியதுமான ஜுபிடர் கிரகத்துக்கு சொல்லப்படுவதில்லை.பின்னால் உள்ளதுதான் முன்னே உள்ளதற்குக் காரணம் ஆகிறது.

குறிப்பு; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வன்முறைக் காட்சிகளைக் காணும் குழந்தைகள் வளரும் போது வன்முறையாளராகும் வாய்ப்பு இருக்கிறது.ஆனால் தொலைக்காட்சியா வன்முறக்குக் காரணமாக இருக்கிறது? அல்லது வன்முறையை நேசிக்கும் குழந்தைகள் அத்த்கைய காட்சிகளை விர்ம்பிப் பார்க்கிறார்களா?இவை
இரண்டு மே உண்மையாய் இருக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளனதொலைக்காட்சி வன்முறைக்கு வக்காலத்து வாங்குபவர்கள் சொல்கிறார்கள், தொலக்காட்சிக்கும் யதார்தததுக்குமான வேறுபாட்டை எவர் ஒருவரும் பிரித்தறிய முடியும்.ஆனால் சனிக்கிழமை காலைகளில் வரும் குழந்தைகள் நிகழ்ச்சிகளிலொரு மணி நேரத்தில் 25 வன்முறைக்காட்சிகளாவது இடம் பெறுகின்றன. குறைந்த பட்சம் ,முரட்டுத்தனம் கொடூரம் பற்றிய இயல்பான உணர்வை இவை மழுங்கடிக்கின்றன.பெர்யவர்கள் மனதில் தவறான நினைவுகளைப் புகுத்த முடியும் என்றால் ஆரம்பப் பள்ளி க் காலம் தொடங்கி பட்டம் பெரும் வரை குறைந்தது பத்து லட்சம் வன்முறைக் காட்சிகளைக் காணும் குழந்தைகளின் கதி என்னவாகும்?

இப்படிப்பட்ட தர்க்க ரீதியானதும் பகட்டுப் பிணைப்பு உள்ளதுமான தவறுகள் பற்றித்தெரிந்து கொள்வது நமது கருவிப் பெட்டகத்தை முழுமையாக்குகிறது.எல்லாக் கருவிகளையும் போலவே இந்த அபத்தம் அறியும் கருவிகளும் தவறாகப் பயன் படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது.சுய சிந்தனைக்குப் பதிலாக குருட்டுப் பாடம் ஆகி விடக்கூடும்.இடம் பொருள் எவல் தெரியாமல் பிரயோகப் படுத்தக் கூடும்.ஆனால் நியாயமாகப் பின் பற்றப்பட்டால் உலகத்தில் மாற்றங்கள் கொண்டு வர முடியும். குறைந்த பட்சம் மற்றவர்களிடம் நமது வாதங்களை வைக்கு முன்னரும் மதிப்பீடு செய்கையிலும் உதவி செய்யும்.

___________ முடிவுற்றது ___________

Series Navigation