அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

இப்னு பஷீர்


‘கீதையை எப்படி படிப்பது ? ஏன் ?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஜெயமோகன் எழுதியது: “போரைப்பற்றி சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர்ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே. நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர். அப்போர் கூட ஒரே இனத்துக்குள் ஒரே இனக்குழுவுக்குள் நிகழ்ந்த போர்தான்.”

http://www.thinnai.com/ar1014041.html

நான் எழுதியது (சூரியாவின் பாஷையில் சொல்வதானால், மழுப்பி மறுத்தது):

மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் தேவையான வழிகாட்டுதல்களை தரும் குர்ஆன், ஒரு நிர்மாணிக்கப்பட்ட ஆட்சியில் இருப்பவர்களால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களாலேயே நடத்தப்படும் போரில் நடந்து கொள்ள வேண்டிய விதிமுறைகளையும் சொல்லித்தருகிறது. ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திருக்குர்ஆன் வசனங்களில் சொற்ப வசனங்களே போரைப்பற்றி பேசுகிறது. ஜெயமோகன் சொல்வதுபோல் ஏராளமான வரிகள் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர்க்க முடியாமல் முழு வீச்சுடன் போரில் பங்கேற்றது மூன்றே மூன்று முறைகள்தான். பத்ரு, உஹது, ஹுனன் என்ற மூன்று பெரும் யுத்தங்கள்தான் தற்காப்பின் பொருட்டு தவிர்க்க இயலாதபடி நிகழ்ந்தன. முஸ்லிம்களை வேண்டுமென்றே எதிர்த்தவர்கள்தான் இந்த போர்களுக்கும் காரணமாக< SPAN style= 'mso-hansi-font-family: TSC_Avarangal '> இருந்துள்ளார்கள்.

http://www.thinnai.com/le1021042.html

ஜெயமோகன் கருத்தாக சூர்யா எழுதியது: குர் ஆனும்தான் போர் புரியச்சொல்கிறது. நபியும் போர்வீரரே.

http://www.thinnai.com/pl1118046.html

நண்பர் சூரியா அவர்களே! “போரைப்பற்றி சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர்ஆன் தான். அதில் ஏராளமான வரிகள் போரைப்பற்றியவையே” என்ற ஜெயமோகனின் வாக்கியத்தை “குர் ஆனும்தான் போர் புரியச்சொல்கிறது” என்றும்; “நபி தாமே ஒரு மாபெரும் போராளியாக இருந்தவர்” என்ற அவரது கருத்தை “நபியும் போர்வீரரே” என்றும் ‘சுருக்குவதற்கு’ பெயர்தான் மழுப்பல்.

இப்னு பஷீர்

Series Navigation