ஸ்ரீனி
அந்த நாள் ஞாபகம்…..
மண்டை வெட்டும் யுனிபார்மும்
மண்டை வெட்டு தெரியுமா?
எங்க ஊரில் முடி வெட்டுவதை அப்படித்தான் சொல்வது.
நம்ப ஊர் வட்டார மொழி தினுசானது!டிபன் பாக்ஸை
தூக்கு சட்டி என்போம்!தொட்டுக்கொள்ளும் காய்கறியை வெஞ்சனம் என்போம்!வெஞ்சனம் சுத்தத் தமிழ்!இப்படிப் பல!
ஸ்கூல் போக மஞ்சள் பையும் தூக்கு சட்டியும் தான்!
அதில் அம்மா,பண்டரிபாய் போல தாய் பாசத்துடன் வைத்திருக்கும் தயிர்(மோர்?) சாதம்! திறந்தால் ஒருவித வீச்சம்(வாசனை!) வரும்.வீச்சம் இன்றும் மூக்கிலேயே நிற்கிறது!
மண்டை வெட்டுக்கு வருவோம்.
ராமனாதன் என்பவர் அப்பாவின் நண்பர் கம் சிகை
அலங்கார நிபுணர்(!?)தனக்கு முடிந்தவுடன்,’ராமனாதா..பார்த்து பண்ணுப்பா’என்று சாங்கோ பாங்கமாக அப்பா சொல்லி விட்டு போய் விடுவார்!அப்புறம் என்ன
மண்டை வெட்டாகி,என் பாடு?!
சீனி… மண்டை வெட்டு டாப்புடா…
கொடுத்த காசுக்கு வேலை வாங்கிட்டாப்புல…
இதுக்குத்தான் அங்கன போய் பேரம் பேசக்கூடாது!!
மாப்ளே…தூங்கிட்டயாடா…!
கரச்சான் மண்டேய்..ய்!!
ராமனாதா…உன்னை விட மாட்டேன்…என்று கு.கோயில் நம்பியார் ஸ்டைலில் வசனம் பேசி கொதிப்பை காட்டுவேன்!
இது மாதா மாதம் நடக்கும்!மாதா மாதம் நம்பியார் வசனமும் பேசப்படும்!என்ன, ராமனாதன் அப்பா தயவில் எப்போதும் ஜெயிப்பார்!நம்பியார் எப்பொதும் தோற்பார்!
இன்று ராமனாதனும் நம்பியாரும் இல்லை.ஆனாலும் அதே மண்டை வெட்டுதான்!
யூனிபார்ம் கூத்து!
எனக்கு இப்போதும் யுனிபார்ம் போட்டு செல்லும் பள்ளி
குழந்தைகளைக் கண்டால் வினோதமாகத்தான் இருக்கிறது.
நானும் ஒரு மாதம் ஸ்கூலில் போட்டேன்…காக்கி டிரவுசர்,வெள்ளை சட்டை…அதுவும் எப்படி?!
எங்கள் பண்டரிக்கு(அம்மாவுக்கு) உடை அலங்கார விற்பன்னர் ஆக ஆசை வந்து ஒரு தையல் மெஷின் வாங்கி ரவுசு விட்ட நேரம்!என்னுடைய போதாத நேரம்!
சாதாரண அரைக் கால் டிரவுசர் (3/4 கால் உண்டா?) அப்புறம் அரைக்கை சட்டை தானே,அதுவும் சிறு பையனுக்கு என்று அக்கம் பக்கம் மாமிகள் கோஷ்டி வேறு சேர்ந்து தட்டேத்தி விட..பண்டரி in full swing..!!ஸ்கூலுக்கு போட்டுப் போனால்….?!
சீனி ! …என்னடா சொக்கா புது டிசைனா..
மாப்ளெ..டாப்புடா!
டிரவுசர் பாருடா கிம்பர்லாக் ஸ்டைல்..டோய்….!
ஏம்ப்பு..யார் கிட்டே தைச்சே?
ஏண்டா…??
அந்த தெரு பக்கமே போக மாட்டோம்ல!!
ஒரெ லந்து….!காமெடி ஆகி விட்டேன்!
என்ன ஆச்சு?
டிரவுசருக்கு இரண்டு காலும் ஒரே நீளமாக இருக்க வேண்டும் என்று சட்டமா என்ன!
சட்டை?….ரவிக்கை கட்டிங்கில் கை அமைந்து விட்டது….பட்டன் எல்லாம் மேலும் கீழும்!!
மாறுகை மாறுகால் வாங்கப்பட்ட மதுரை வீரன் போல ஆகி விட்டேன்!ஒரு மாதம் இந்த தமாஷ்!பின் யுனிபார்ம் நின்று விட்டது.நம்ப ஸ்கூலில் எல்லாம் இப்படித்தான்.கிளாஸ் நடப்பதே பெரிசு..யுனிபார்ம் வேறா…!
ஸ்ரீனி
kmnsri@rediffmail.com
- க ண ப் பு
- வலைப்பூ இலக்கியத்தின் வளமை
- காதல் நாற்பது -17 முழுமைப் படுத்தும் என்னை !
- பெரியபுராணம்- 128 43. கழறிற்றறிவார் நாயனார் புராணம்
- அறிவிப்பு
- ஈவேரா- காந்தியடிகள் உரையாடல் – எழுப்பும் சில கேள்விகளும் வெளிப்படுத்தும் சில உண்மைகளும்
- கவிஞரை விட்டுக் கொடுக்காத கவிஞர் விவேக்
- கடிதம்
- அந்த நாள் ஞாபகம்…..
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 14 – சாகச ‘ வாலிபன் ‘ !
- நம் பெண்கவிஞர்கள் கேலிக்குறியவர்களா?
- நினைவுகள் மட்டும்…
- ஏகத்துவ அரசியல் மற்றும் சமய மரபுகளின் தோற்றுவாய்
- கவிதைகள்
- புத்தாண்டு வாழ்த்துக்கள்
- உறைந்த தேவதைகள்
- பயணமுகவர்கள்
- புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை
- மருந்தின் விலை ரூ. 1,20,000 உயிர் குடிக்க வரும் நோவார்ட்டிஸ்
- இரு காந்தீயப் போராளிகள்
- மடியில் நெருப்பு – 33
- மாத்தாஹரி – அத்தியாயம் -5
- கால நதிக்கரையில்….. – அத்தியாயம் – 2
- ஒரு தீர்ப்பு முழுமையானது