அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்

This entry is part [part not set] of 20 in the series 20011202_Issue


(அருகாமை படத்தில் அஸ்கி வெள்ளை Asci White இரண்டு கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அளவுக்கு)

நன்றி பிபிஸி

அணுகுண்டுகளுக்கு மிகவும் அழிவுச்சக்தி அதிகம். உலகத்திலேயே அதிகம் அழிவு உண்டுபண்ணும் ஆயுதங்கள் அவையே. ஆனால், இந்த சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் புவிமண்டலத்தில் பரிசோதனை செய்து பார்க்கப்படுவதில்லை.

அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த வேகமான கணினியான ஐபிஎம் நிறுவனத்தின் அஸ்கி வெள்ளை என்னும் கணினியால் பரிசோதிக்கப்படுகின்றன.

‘ஒரு அணுகுண்டு வெடிக்கும் போது எப்படி மிகவும் குறைந்த நேரத்துக்குள் அதிக வெப்பத்துடன் அதிக அதிர்வலைகளை சுற்றியெங்கும் எழுப்பி வெடிக்கிறது என்பதும் அதனை கணினிக்குள் மாதிரி வடிவமைத்து வெடிக்க வைப்பதும் மிகவும் சவாலான விஷயங்கள். ‘ என்று கூறுகிறார் லாரண்ஸ் லிவர் மோர் தேசீய பரிசோதனைச்சாலையின் உதவி இயக்குனர் டேவிட் நோவாக்.

அஸ்கி வெள்ளை இரண்டு கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அளவு பெரிய இடத்தை ஆக்கிரமித்திருக்கிறது. சுமார் 8000 கணினி மையச்சில்லுகள் அதிவேக வலையுடன் இணைக்கப்பட்டு வினாடிக்கு சுமார் 1200000 கோடி கணக்குகள் போட வல்லது (12 டிரில்லியன்)

இதற்கு சுமார் 6 டெராபைட் கணினி ஞாபகமும். 160 டெராபைட் தகடு ஞாபகமும் இருக்கிறது. அமெரிக்காவின் மையநூலகத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஆறுமடங்கு அதிகமாக கொள்ளத்தக்க அளவு ஞாபகம்.

‘வன்பொருள் பக்கத்திலிருந்து, எங்களது குறிக்கோள் உலகத்திலேயே மிகவும் அதிவேகம் கொண்ட, மிகவும் சக்தி கொண்ட கணினியைக் கட்டுவது ‘ என்று கூறுகிறார் நோவாக்

‘மென்பொருள் பக்கத்திலிருந்து, மிகவும் அதிக அளவு நிரல்களை சுமார் 10000 மையகணினிச் சில்லுகள் இணைந்து ஒரே கணினியில் வேலை செய்வது போல வேலைசெய்யும்படிக்கும் நிரல்களை எழுதுவது ‘ என்றும் கூறுகிறார் நோவாக்.

வெடிப்புகளை மாதிரிப் படுத்துவதும், அணுகுண்டுகள் வயதாக வயதாக அதன் வேதிப்பொருள் மாற்றத்தின் மூலம் அதன் சக்தி மாறுபடுவதையும் கணக்கிடவும் இந்த கணினி பயன்படுகிறது.

இந்த அணுகுண்டுகள் கதிரியக்கம் செய்பவை. இந்த கதிரியக்கத்தால் உலோகங்கள் தொடர்ந்து அழிகின்றன., இதனால் வேதிப்பொருள் மாற்றமும் நிகழ்கிறது ‘ என்று கூறுகிறார் நோவாக்

அஸ்கி வெள்ளை சமாதான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. பெரிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்த இயந்திரத்தை எவ்வாறு நட்சத்திரங்கள் வெடிக்கின்றன என்பதை ஆராயவும், ஜெட் இயந்திரங்களும் ராக்கெட்டுகளும் எவ்வாறு வேலை செய்யும் என்பதை ஆராயவும் பயன்படுத்துகின்றன.

Series Navigation

செய்தி

செய்தி