அதிரூபவதிக்கு…..

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

மாமதயானை


இவ்வுலகின்அதிஅற்புதமான
கவிதை
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது

பிறந்த குழந்தையின்
பிஞ்சு விரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்….
உன் வார்த்தைகளில்

மழைக்காலங்களில்
உனக்கு
குடை வாங்கித்தர
பிரியப்படுகிறது
என் மனசு
ஆனால்
எப்பொழுதும் போலவே
மழையில்
நனையவே
பிரியப்படுகிறது
உன் மனசு

உன்
திவ்விய தரிசனத்திற்காக
பவ்வியமாக
காத்துக்கொண்டிருக்கிறது…..
அடியேனின் உயிர்

வெட்கத்தால்
நிரம்பியிருக்கும்
உன்
முகத்தைப்போலவே
காதல்
சொர்க்கத்தால்
நிரம்பியிருக்கிறது
என் அகம்

சகியே
சமையல் செய்யவும்
கோலம் போடவும்
துணிகளைத் துவைக்கவும்
கூடிய விரைவில்
கற்றுக்கொள்கிறேன்…..
நீயும்
என்னை
காதலிக்க கற்றுக்கொள்

உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும்
என் காதல்

கிளியோபாட்ராக்களுக்கும்
நடுக்கத்தையே தரும்
உன்
காலடித்தடத்தின்
அழகு


மாமதயானை-
manisen37@yahoo.com
sengodi550.blogspot.com

Series Navigation

மாமதயானை

மாமதயானை