அடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. ?

This entry is part [part not set] of 28 in the series 20051104_Issue

சம்பத் ரங்கநாதன்


தமிழ் குல பெண்களின் புரட்சி வீராங்கனை,பெண் பெரியார்,தமிழ் நாட்டு காரல் மார்க்ஸ் அன்னை குஷ்பு பற்றிய புகழ்ந்துரை

கருத்தரிக்காமல் களவும்

நோய்படாமல் கலவியும்

தமிழ்நாட்டு கோவலன்களின் வாழ்வாம்

சிலம்போடு மெரினாவில் நிற்க

கண்ணகி மட்டும் என்ன பைத்தியகாரியா ?

தமிழ் கலாச்சாரம் கெட்டது குஷ்புவால் அல்ல

மாதவியிடம் போன கோவலனால்.

ஆண் என்பவன் எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.பெண் மட்டும் இப்படிதான் வாழ வேண்டும் ‘ என்று சொல்லும் ஆயிரம் ஆயிரம் திரைப்படங்கள்,சமூக நியதிகள்,தலைவர்கள்,பண்பாட்டு கோட்டைகள் எல்லாம் உருவாக்கிய மாயக்கோட்டையில் வாழ்பவன் தான் தமிழன்.

ஆண் சைட் அடிப்பதுபோல்,விபச்சாரியிடம் போவது போல்,ரகசியாவின் நடனத்தை ரசிப்பது போல் வரும் திரைபடங்கள் எத்தனை ?தமிழ்நாட்டில் உள்ள விபச்சார விடுதிகள் இயங்குவது யாரால் ?டாஸ்மாக் கடைகள் வருடம் 5000 கோடி வருவாய் ஈட்டுவது யாரால் ? மனைவியை அடிப்பது,உதைப்பது,மாமியார் மருமகளை அடிப்பது இவைகளை நியாயப்படுத்தி

படம் எடுப்பது….போதும் அய்யா போதும்…

தமிழ்நாட்டு பெண் அடிமை.ஊமை.வேலைக்காரி,தாசி,நாய்,கணவன் விருப்பதிற்கு எற்ப நடக்குமாறு ப்ரொக்ராம் செய்யப்பட்ட ரோபோ பொம்மை.மாமியாரிடம் நல்ல பேர் வாங்க சிறுவயது முதல் தயார் செய்யபட்ட அடிமை.

கலாச்சார சிலுவையை ஆணுக்காக ஆயிரம் ஆயிரம் வருடமாக சுமந்த இயேசு தமிழ்நாட்டு பெண்.இரு உழவு மாட்டில் ஆண் மாடு கலச்சார கலப்பையை சுமக்காமல் சன்டிதணம் செய்து எப்போதொ வெளியேர்றி விட்டது.ஒத்தை மாடாக கலாச்சாரம் என்னும் ஏரை,குடும்ப மானம் என்னும் மூக்கனாங்கயிரை சுமந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இழுத்து வருகிறது பெண் பசு.

உடைத்து நொறுக்க வெண்டியது தானே இந்த சமுதாயம் தந்த அடிமை விலங்குகளைஆணினம் பெண்னுக்கு சூட்டிய விலங்குகளை அடித்து நொறுக்கி ஆகம்பாவம் பிடித்த ஆணிணத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா ?பப்பில் சென்று பெண் தண்ணி அடித்தால் தான் தெரியும் ,அகம் பிடித்த ஆணினத்திற்கு மதுவின் வேதனை என்ன வென்று..மனைவியின் வேதனை என்னவென்று

ஊருக்கொரு வைப்பாட்டன் வைத்துக்கொன்டால் தான் ஆணுக்கு தெரியும் இத்தனை நாள் பெண் பட்ட வேதனை என்னவென்று.வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்க வைத்து ‘சொல்ல மறந்த கதைகள் ‘ நடத்தி காண்பித்தால் தான் தெரியும் மாமியார் கொடுமை என்ன்வென்று.

ஆணினம் இனி திருந்தாது.அதை எந்த ஆண்டவன் அவதாரம் எடுத்து வந்தாலும் திருத்த முடியாது.பெண்ணினம் இப்படி அடிமையாய் எதற்க்கு வீட்டில் கண்ணீரோடு காத்திருக்க வேண்டும் ?

இந்த அகம் பிடித்த ஆணினம் படைத்த அயோக்ய உலகை அடித்து நொறுக்கி,புது விதியை,புது சமுதாயத்தை உருவக்கினால் அப்போது பெண் கஷ்டப்பட வேண்டியதில்லை அல்லவா ?

இன்பம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது.மது என்பது ஆணுக்கும் இனிக்கும்,பெண்ணுக்கும் இனிக்கும்,பஸ் ஸ்டாப்பில் நின்று பெண் ஆணை விசிலடித்து அழைக்கலாம். பலரோடு உறவு என்பது ஆணுக்கும் இனிக்கும் பெண்ணுக்கும் இனிக்கும் என்று மாற்றினால் எப்படி இருக்கும் ?

நினைத்து பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது அல்லவா ?பழகிகொள்ளுங்கள்.மேற்க்கத்திய பெண் தனது சமுதாய விதிகளை மாற்றி அமைத்து விட்டாள்.ஆண் விபச்சார விடுதிகள் அங்கே நடக்கும் அளவுக்கு அவள் சுதந்திரம் பெற்று விட்டாள்.அவளின் இந்திய சகோதரி அவளை பின்பற்றும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

ஆணுக்கு போட்டியாக பெண் கிளப்புக்கு செல்வது சுதந்திரம் இல்லை என்று வாதிடும் அறிவுஜீவிகள் நிறைய பேர் உள்ளனர்..இவர்கள் வாதம் என்னவென்றால் பெண் சுதந்திரம் என்பது வேலைக்கு போவது,வரதட்சனை கொடுமையை எதிர்த்து போரிடுவது,இந்திரா நூயி போல் தொழிலில் சிறப்படைவது இது தான் பெண்ணுரிமை என்று இவர்கள் வாதிடுகிறார்கள்.இதில் வெட்ககேடு என்னவென்றால் இவர்கள் தங்களை பெண்ணியவாதிகள் என்று அழைத்துகொள்வதுதான்

பெண் சுதந்திரம் என்றால் என்ன என்று நாம் முடிவு செய்வதை விட அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று விடுவது தான் சரி என்று எனக்கு படுகிறது.ஆண் சுதந்திரம் என்றால் என்ன என்பதை ஆணே தீர்மானித்து விட்டான்.அண்ணாச்சி ராஜகோபாலை பொறுத்தவரை அது ஜீவஜோதி பின் சுற்றுவது,அப்துல் கலாமை பொறுத்தவரை அது ராக்கெட் தயாரிப்பது.

இந்த இரு மனிதர்களும் தங்கள் சுதந்திரம் என்ன அதன் எல்லைகள் என்ன என்பதை தாங்களே தீர்மானித்து தாங்களே தங்கள் வாழ்க்கையை நிர்னயம் செய்து கொண்டனர்.பெண்ணுக்கும் அதே போல் தங்கள் சுத்ந்திரம் என்ன என்பதை தாங்களே நிர்ணயிக்கும் உரிமையை நாம் ஏன் மறுக்க வேண்டும் ?

பப்பில் சுதந்திரம் பெறுவதாக நினைக்கும் பெண் அங்கு சுதந்திரம் பெறட்டும்.இந்திரா காந்தி போல் நாடண்டால் மட்டுமே சுதந்திரம் என்று நினைக்கும் பெண் அப்படி சுதந்திரம் பெறட்டும்.

சுதந்திரம் பெறும் அனைத்து பெண்ணும் இந்திரா காந்தி ஆவதில்லை.சிவகாசி ஜெயலட்சுமியாக கூட ஆகலாம்.

சுதந்திரம் பெற்ற அனைத்து ஆணும் அப்துல் கலாம் ஆகிவிட்டானா என்ன ?

சட்டம் அனுமதிக்கும் எல்லைக்குட்பட்டு இஷ்டம் போல் வாழும் உரிமை தான் சுதந்திரம் என்று ஆண்கள் வாழ்கிறார்கள்.பெண்ணும் அது போல் வாழட்டுமே ?

தடுக்கி விழுந்தால் தான் குழந்தை நடை பயிலும்.பெண்களை தடுக்கி விழ,தோல்வியுற அனுமதிப்போம்.அப்போது தான் அவர்கள் வெற்றிப்படி மீது ஏறுவார்கள்.

தன் சுதந்திரத்தயும்,அதன் எல்லைகளையும் அவர்களாகவே நிர்ணயித்து ஒரு புது உலகை அவர்கள் படைக்கட்டும்.

ஆண்கள் படைத்த உலகம் போர்கள் நிரம்பியதாகவும்,வன்முறை நிரம்பியதாகவும் இருந்தது.நமது சகோதரிகள் படைக்கும் உலகம் இனிமையான,அற்புதமான உலகமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

—-

doctorsampath@gmail.com

Series Navigation

சம்பத் ரங்கநாதன்

சம்பத் ரங்கநாதன்