அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை : வாசிங்டன் DC

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

அறிவிப்பு


உங்களிடம் கைவசம் உள்ள வீடியோக் கருவியை வைத்து நல்ல ஒரு குறும்படம் தயாரிக்க விரும்புகிறீர்களா?
தமிழ்க் குறும்பட இயக்குனர்களில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான அஜீவன் நடத்தவிருக்கும் பயிற்சிப்பட்டறை.

இம்மாதம் (மே) 23 (செவ்வாய்) – 26 (வெள்ளி) வரை இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை நடக்கவிருக்கிறது.

வீடியோக் கருவியை திறம்படப் பயன்படுத்தி உங்கள் மனத்தில் தோன்றும் சிறு கருவைக்கூட ஒரு நல்ல திரைப் படமாக மாற்றும் வண்ணம் பல அரிய கலை மற்றும் தொழில் நுட்பங்களை நமக்குக் கற்றுத் தரவிருக்கிறார். மேலும் உலகத்தின் சிறந்த குறும்படங்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தையும் தரவிருக்கிறார் அஜீவன்.

கட்டணம் – $60.00

மொத்தம் பத்து இடங்கள்தான், உங்கள் இடத்துக்கு முந்துங்கள், கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை அழைத்து உங்கள் பெயரைப் பதிவு செய்யுங்கள்.

மீனாட்சி ஸ்ரீகாந்த் (703) 467-0422
சொ. சங்கரபாண்டி(443) 854-0181

அஜீவனைப் பற்றியும் அவரது குறும்படங்களையும் பற்றிய முழுத்தகவல்களைப் பெற கீழ்க்கண்ட இணையத்தளத்துக்குச் செல்லுங்கள்:

http://www.ajeevan.com/

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு