அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
அசுரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை நண்பர் வழி அறிந்த பொழுது மிகவும் நொந்தேன். ஆனாலும் அவரைப் பற்றிய செய்திகள் தெளிவாக எனக்குத் தெரியவில்லை. அந்தக் குறையைப் போக்கியது, நண்பர் எஸ்.பி. உதயகுமார் உங்களுக்கு அனுப்பித் தந்த மின்னஞ்சல். சித்த மருத்துவத்தின்மேல் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கை, இயற்கையான சுற்றுச் சூழல் பற்றிய அக்கறை, தன் மோசமான உடல்நிலை ஊடாகவும் – கூடங்குளம் அணு உலைப் பணித்திட்டங்களுக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியமை முதலானவை அவர் வாழ்வின் முழுமையை அடையாளப்படுத்துவன.
அவரைப் பெற்ற குடும்பமும் நாடும் பேறுபெற்றவை.

துயரத்தில் மூழ்கியுள்ள அவர் துணைவியார், மகளார், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தாருக்கு நம் திண்ணை குழாமுடன் சேர்ந்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-தேவமைந்தன்
(அ.பசுபதி)

Series Navigation