அக்கினி விதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

இரா. அரிகரசுதன்


எங்கள்
தோல் உரிந்த வெம்மைகளில்
வெகுண்டு அழும் உணர்வுகள்
வளிந்து கொண்டே
நிரம்பிக் கிடக்கின்றன.

வெம்மைகளை உறிந்து கொண்டு
பாளம் பாளமாய் கிடக்கும்
பழுத்தக்கறுப்பாய் வெளிச்சப்படுவது
வெற்று உடம்புகள் அல்ல
அவை அநீதிகள் விளைத்த
புண்முகங்கள்.

எத்தனை தள்ளிப்போக்கள்,
ஆலய மறுப்புகள்,
பொதுகுடிநீர் மறுப்புகள்,
மேலாடை மறுப்புகள்
கல்வி மறுப்புகள்…

இப்படியாய் எங்கள்அத்தனை
வெந்தழல்களிலிருந்தும்
ஆயிரம் ஆயிரம்
அக்கினி விதைகள் எழுந்து நிற்கின்றன
வகுப்புவாதத்தை தின்று வளர்வதற்காய்.

15.08.2004

—-
inian_tamil@rediffmail.com

Series Navigation

இரா.அரிகரசுதன்

இரா.அரிகரசுதன்