திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051006_Issue

அரசியலும் சமூகமும்

விற்பனைக்கு ஒரு தேசம்

புல்புல் ராய் மிஷ்ரா புராதன காலத்திலும் உளவு என்பது அறியாத ஒன்றல்ல. ராமாயணம், மகாபாரதம், கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம், பழைய ஏற்பாட்டில் மோஸஸ் கானான், பிலிஸ்டைன் நாடுகளுக்குள் ஒற்றர்களை அனுப்பியதும், சாம்சனை அழிக்க டிலைலாவை அனுப்பியதும்…

நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்

கோ. ஜோதி, வி. பிரபாகர் ஞானக்கண் உலகமயமாதல் (Globalization)... உலகமயமாதல் என்ற ஒரு மோசடியின் மூலமாக ஏழை நாடுகளின் மீது ஆயுதங்களற்ற போரை, வளர்ந்த நாடுகள் துவக்கியுள்ளன. இவைகளின் நோக்கம் ஏழை நாடுகளின் பொருளாதாரத்தைச்…

குஷ்புவும், ஈ வெ ராவும் – சில சமன்பாடுகள்

விஸ்வாமித்ரா ---- குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, .... இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான…

சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (திரு.ராமதாஸ் மற்றும் திரு. திருமாவளவன் ஆகியோர் கவனத்திற்கு)

மாதவி ஸ்ரீப்ரியா சில வாரங்களுக்கு முன் திண்ணைப் பத்திரிக்கையில் தமிழ் சினிமா, தொலைக்காட்சி உலகின் பொறுப்பற்றதன்மை பற்றியும், சினிமா நடிக, நடிகைகளின் கேலி(காலி)த்தனமான நடவடிக்கைகள்பற்றியும் நான் எழுதியது போலத்தான் அமைந்துள்ளது குஷ்பு அவர்களின் பேட்டி.…

லிஃப்ட் பைத்தியம்

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் லிஃப்டில் (எலிவேட்டர் ? அமெரிக்காவில் லிஃப்ட் என்றால் “எதை ? என்று கிண்டல் பண்ணுகின்றார்கள் !) நுழைந்து 28 என்ற எண்ணை அழுத்தினேன். 28 வது தளத்தில் எனது அலுவுலகம் உள்ளது.…

அறிவிப்புகள்

கடிதம்

மு. சுந்தரமூர்த்தி ஆசிரியருக்கு, ‘திண்ணை’ எழுத்தாளர் சின்னக்கருப்பன் ஒரு அபூர்வமான சிந்தனையாளர். நகைச்சுவை மதிப்பு கருதி இவருடைய எழுத்துக்களை படிக்கத் தவறுவதில்லை. சென்றவாரம் எழுதியிருந்த கட்டுரையில் (“கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும்”) அரசியல், சமூகவியல்,…

கற்பு யாருடையது

கோவிந்த் குஷ்பு கொளுத்தித் போட்ட 1000 வாலா அங்கங்கு வெடித்துக் கொண்டிருக்கிறது. சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறேன்... 1. கற்பு பற்றி.. கற்பு நெறிபற்றி சிலப்பதிகாரம், திருக்குறள், பாரதியார் என்றப் பெருந்தகைகள் கூறியது காண்போம்...…

கடிதம்

K. ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவிற்கு, சின்னக் கருப்பனின் கட்டுரை மிகப் பிரமாதம்.இத்தகைய கற்பனை வளத்தினை குஷ்பு சொன்ன சில வாக்கியங்களுக்காக அவர் ஏன் வீணாக்க வேண்டும். 600 பக்க அளவில் ஒரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூமியின் ஓஸோன் வாயுக் குடையில் போடும் துளைகள் [Holes in the Global Ozone Envelope]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா ஓஸோன் வாயுவின் தீவிரப் பண்புகள்! ஓஸோன் வாயு நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் மூலக்கூறு [Oxygen Molecule] வேறுபட்ட மற்றொரு தோற்றம். ஆங்கிலத்தில் அல்லோடிரோபி…

இலக்கிய கட்டுரைகள்

புகாரி கவிதை நூல் வெளியீடு

மதுரகவி தமிழ்க் கவிதை நூல் வெளியீட்டு விழாவென்றால், இன்று, கனடாபோன்ற, வாழ்வு யந்திரமயமாக்கப்பட்ட நாட்டில், எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டப்படுமென்ற ஆதங்கம் மிக்க கேள்வி எழுவதில் வியப்பில்லை. இங்கே, மணித் துளிகள் ஒவ்வொன்றும் டாலர்களால்…

வைதீஸ்வரன்

இரா முருகன் வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி ( 'வைதீஸ்வரன் கவிதைகள் ' - கவிதா பதிப்பகம் வெளியீடு 2005) எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள்…

The Almond by Nedjma – ஒரு பார்வை

கூத்தாடி 'The sexual awakening of a muslim women ' என்ற கவர்ச்சியான அறிவுப்புடன் இருந்த புத்தகத்தை வலையில் படித்த சில விமர்சனங்கள் படிக்கத் தூண்டியது. படித்ததை பகிர்ந்து கொள்ளவும் என் கருத்துக்களை…

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

கோவிந்த் அழகான அற்புத கதை. மிகப் பெருவாரியான ஆண்களைப் போல் பொறுப்பற்ற குடும்பத் தலைவன். கிடைத்த வாத்தியார் வேலையைக் கூட ஒழுங்காகப் பார்க்காமல் தனது சினிமா ஆசைக் கனவிற்கு வீட்டின் காசை வேட்டு விடும்…

கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005)

சி. ஜெயபாரதன், கனடா கவிஞர் திலகம் புகாரியின் புத்தக வெளியீட்டு விழா கனடாவின் பெருநகர் டொரொன்டோவில் ஸ்கார்பொரோ நகராட்சி அரங்கில் இலக்கியத் தோட்டம் அளித்த பீடத்தில் துவங்கியது. வெளிவரும் நூல்கள் இரண்டு: பச்சை மிளகாய்…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-11)

சி. ஜெயபாரதன், கனடா 'அந்தோ! இப்படி இரக்கமற்ற முறையில் கொடூரமாகவா, கோரமாகவா என்னை நீவீர் நடத்துவது ? தூய்மையான என்னுடல், முழுமையான என்னுடல், தீயக் கவர்ச்சி சக்திகளால் தீண்டப்படாத என்னுடல் உயிரோடு எரிக்கப்பட்டு, இன்றைய…

கெளரவம்

என்.கணேசன் 'பார்த்தா பிச்சைக்காரி மாதிரித் தெரியுது. ஆனா நீங்க தான் வரச் சொன்னதா அந்தப் பொண்ணு சொல்லுது. பேரு காவேரியாம். வாட்ச்மேன் என்ன செய்யறதுன்னு கேட்கறான் ' வேலைக்காரி சொன்னவுடன் அமிர்தம் எதுவும் புரியாமல்…

கவிதைகள்

பெரிய புராணம் – 59( திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா.சத்தியமோகன் 1607. பல பதிகளிலும் நெடிய மலைகளிலும் படர்ந்த காடுகளும் சென்று அடைவராகி உயிர் செல்லும் கதியை முன்னமே அளிக்கின்ற திருக்காரிக்கரை எனும் தலம் வணங்கி தொன்மையான ஞானங்களின் மன்னரான நாயனார் தேவர்கூட்டங்கள் பொருந்தியுள்ள…

எரியும் மழைத்துளிகள்

புதிய மாதவி ==== என் ப்ரியமானவளே.. உன் ஊர்வலம் என் தோள்களில். உன் மாலைகள் உதிர்ந்து என் பாதங்களில். கடைசித்தடவையாக உன் ஸ்பரிசத்தை உணர்த்தும் மழைத்தூறலில் நாம் நடந்தப் புல்வெளியில் நான் மட்டும் நடக்கிறேன்…

கொச்சைப்படுத்துதல்: மனித அவலட்சணம்

தேவமைந்தன் அடிமை ஆண்டான் உறவுகள் ஆண்டாள் அடிமை சரண்புகல் யாவும் புதுவகைக் கோலம் பூண்டன. நாகரிகம் ஓ! பூத்துமலர்ந்து எங்கும் வீசுது நறுமணம். வேலைக்குச் செல்லும் அம்மை 'சார் ' 'சார் ' என்று…

ஒட்டடை

தேவமைந்தன் நாற்பத்தேழு வயதில் என்னையும் தன்னையும் நிரந்தரமாய் மறந்துபோன மூர்த்தி அண்ணன் புதுச்சேரிக்கு வந்த பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப எனக்கு அறிவுறுத்துவார்: ' 'அறையில் ஒட்டடை சேர விடாதே! ஒட்டடை எவ்வளவு சேருகிறதோ, அவ்வளவு…

எரிந்த ஊர்களின் அழகி

சந்துஷ் எரிந்த ஊர்களின் அழகி நேற்றிங்கு வந்திருந்தாள் எரிந்த ஊர்களைப் பற்றித் தனக்கெதுவுமே தெரியாதென்றாள் வியப்புடன் கோணிய என் முகத்தில் தொங்கிக் கொண்டு நெடு நேரஞ் சிரித்தாள். வழியும் அவள் குழற்கற்றைகளிலிருந்து தெலைந்து போன…

கீதாஞ்சலி (43) எனக்குப் பூரிப்பளிப்பது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இதுதான் எனக்கு பூரிப்பளிப்பது! நிழல் எங்கே ஒளியை விரட்டுகிறதோ, வேனிற் காலம் விழி திறந்ததும், மழை எங்கே பொழிகின்றதோ, அந்த சாலைப் புறத்துக் கோலத்தைக் காத்திருந்து கண்டு களிப்பதோர்…