பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) ஏதோ ஒன்றுக்காக உண்மையைத் தொலைத்துவிடுகிறோம் யாரோ ஒருவருக்காக சுயத்தை இழந்துவிடுகிறோம் எதனாலோ பலநேரம் முதுகெலும்பை மறந்துவிடிகிறோம் எதற்காகவோ சிலநேரம் மயங்கிவிடுகிறோம் இருக்கும் மீதியோடு சுவாசிப்பதை வாழ்க்கை என்கிறோம் ---- pichinikkaduelango@yahoo.com
டான்கபூர் வானத்து ஆட்சியின் அதிகாரம். கழன்றது கடையாணி. சில்லொன்று உருண்டு வானத்தில் திடாரென விழுந்து வாழையில் முட்டி தென்னையை சரித்தது. அழுதது ஆதவன். கூடவே வெள்ளியும் ஒன்று. பின் வானமும் விழுந்தது. அதில் ஒரு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மூர்க்கத்தன மானவை எனக்கு நேர்ந்த இடையூறுகள்! ஆயினும் நெஞ்சு வலிக்கிறது, தடைகளை உடைக்க முயலும் போது! நான் வேண்டுவ தெல்லாம் எனக்கு விடுதலை! அது வருமென எதிர்பார்த்து நம்பி…
பவளமணி பிரகாசம் வானவில் வருகையிலே வசந்தத்தின் காலையிலே கன்னிப் பருவத்திலே கனவில் மிதக்கின்ற கல்லூரி காலத்திலே வாசித்த தாகூரின் கதையிதை சொன்னது: புதிதாய் மணமானவளிடம் மற்றொருத்தி கூறுவாள் கணவனின் காலடியோசை மனைவியின் காதுக்கு அடையாளம்…
ரிக்ஷி அ/ குடுகுடுப்பைகள் 'கெட்ட காலம் பொறக்குது, கெட்ட காலம் பொறக்குது, கவிதையில் பாலுறுப்புப் பெயரெல்லாம் வருகுது.. புணர்ச்சி வர்ணணைகளும் இடம்பெறுகிறது. சினிமா, 'சன் ' சானல்களிலெல்லாம் அவை கட்டாயம் அத்தியாவசியம். அம்மாக்களும் பேச…
மு. பழனியப்பன் புத்த பிரானின் தங்கப் பல்லைத் தடவிப் பார்த்ததைப் போல அக மகிழ்ந்தாள் மனைவி. அலுவலகக் கோப்பிற்குள் கிடந்த என்னை உசுப்பியது தொலைபேசியின் முனகல் மறுமுனையில் மனைவியின் குரல் பல் முளைத்துவிட்டதாம் குழந்தைக்கு…
பாஷா எறிந்த என் மெளனத்தை எடுத்தெடுத்து என் முன்னிடுகிறது இந்த அலைகள்! மெளனத்தின் ஆழத்தில் மெல்ல காதல் அழிந்ததாய் கற்பிதம் கொண்டாலும் காற்றில் முகம் உரசிப்போகும் உன் முந்தானையில் மீண்டும் உயிர்கொள்கிறது என் காதல்!…