உடன்படிக்கையில் இரு மறுப்புகள்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

வஹ்ஹாபி


முஸ்லிம்களின் வேதமான அல்குர்ஆன் அருளப் பட்டது “படைத்த உம் இறைவனின் பெயரால் ஓதுவீராக!” என்ற முதல் கட்டளையோடு [096:001]. இறைமறையை, “படைத்த என் இறைவனின் பெயரால் …” என்று எந்த முஸ்லிமும் ஓதத் தொடங்குவதில்லையே அது ஏன்? என்று ஹமீது ஜா.பர் சிந்திக்க வேண்டும்.

மேற்காணும் கட்டளையில் ஆளப் பட்டிருக்கும் ‘இறைவன்’ என்ற ஒரு சொல்லுக்குள் புதைந்திருக்கும் ‘அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்)’, ‘நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்)’, ‘வணங்குதற்குரியவன்(அல்லாஹ்)’ பெயரால் ஓதுமாறு அல்லாஹ்வின் தூதர், (வஹ்ஹாபிகளின் தலைவர்,) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத் தந்ததால் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று தொடங்குகிறோம்.

சுட்டப் படுபவனை விடுத்து, சொல்லை மட்டும் எடுத்துப் பார்த்தால் ‘அல்லாஹ்’ (அல்-இலாஹ்) வணங்குதற்குரியவன் என்ற ஒரே பண்பைத்தான் குறிக்குமேயன்றி அவனுடைய எல்லாப் பண்புகளையும் அச்சொல் உள்ளடக்கி நிற்கவில்லை என்பதையும் கூடுதல் விளக்கமாகச் சொல்லாம்.

“வஹ்ஹாபே, ரஸ்ஸாக்கே! ஜப்பாரே! என் பாவங்களை மன்னித்து விடு” என்று இறைவனை விளித்து வேண்டினாலும் என் பாவங்களை அவன் மன்னிப்பான் என்ற நம்பிக்கையோடு, “ஏன் என்னை கஃப்பாரே என்று விளிக்கவில்லை?” என்று அந்தக் கருணையாளன் எதிர் கேள்வி கேட்க மாட்டான் என்ற உறுதி எனக்குண்டு.
***
இஸ்லாமிய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த ‘ஹுதைபிய்யா உடன்படிக்கை’ [சுட்டி-1] சுவையானதும்கூட.

மக்காவிலுள்ள புனித இறையில்லமான கஅபாவில் உம்ரா வழிபாடு செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்த முஸ்லிம்களைத் தடுத்துத் திருப்பியனுப்பிய நிகழ்வின் தொடக்கம் அது. முஸ்லிம்களுக்குப் பாதகமாகவும் மக்கத்துக் குரைஷியருக்குச் சாதகமாகவும் ஹிஜிரி ஆறாம் ஆண்டு (கி.பி 628) எழுதப் பட்ட அந்த உடன்படிக்கை, பிற்காலத்தில் குரைஷியராலே மீறப் பட்டு, முஸ்லிம்களுக்குச் சாதகமாக மாறிப் போனது.

The Meccans deliberately made their terms as rigorous and provocative as they could, but Muhammad refused to be provoked. As always he wanted peace not bloodshed, therefore he accepted all the terms with all the hardships and all the humiliation they implied. This treaty is known as the Treaty of Hudaibia. It was one of the most outstanding events in the life of Muhammad. According to R.V.C. Bodley in “The Messenger” (London, 1946, p. 257), “In point of fact, that the treaty was Mohammad’s masterpiece of diplomacy. It was a triumph.” Tor Andrae writes in “Mohammed the Man and his Faith” (London, 1936, p. 229) that, “The self-control which Mohammed revealed at Hodaibiya, his ability to bear occasional humiliation in unimportant issues, in order to achieve an exalted goal, shows that he was a person of unique ability.”

“அளவற்ற அருளாளன்(அர்ரஹ்மான்), நிகரற்ற அன்பாளன்(அர்ரஹீம்), அல்லாஹ்வின் பெயரால்.
(முஸ்லிம்களின் சார்பாக) அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கும் (முஸ்லிமல்லாத குரைஷியரின் சார்பாக) அம்ருடைய மகன் ஸுஹலுக்கும் இடையே எழுதப் படும் …” என்று தொடங்கும் அந்த உடன்படிக்கையின் முதலிரு வரிகளிலேயே இரண்டு மறுப்புகளைக் குரைஷிப் பிரதிநிதி ஸுஹைல் தெரிவித்தார்.

“அல்லாஹ்வின் தூதர் என்று நம்பியிருந்தால் உம்மை மக்காவை விட்டு நாங்கள் துரத்தியிருப்போமா? உம்மோடு போர் புரிந்திருப்போமா?” என்பது ஸுஹைலின் இரண்டாவது மறுப்பு.

இனி, திண்ணையில் எழுதிய ஹமீது ஜா.பரின் கடித வரிகளில் [சுட்டி-2] சிலவற்றை நினைவு கூர்ந்து விட்டு, மீதியைத் தொடர்வோம்:
“இறைவனின் எல்லா பெயர்களையும் எல்லா இடத்திலும் உபயோகிக்க முடியாது மட்டுமல்ல உபயோகிக்கவும் கூடாது. அப்படி உபயோகித்தால் அதன் தன்மை முரண்பாடாகிவிடும்.”
“அல்லாஹ் சொன்னான் என்றால் அவனது அனைத்து திருநாமங்களும் அவற்றின் பண்புகளும் உள்ளடங்கிவிடுகின்றன.”
இதையேதான் ஸுஹைல் முதல் மறுப்பாக வெளியிட்டார்: “அளவற்ற அருளாளனா? யாரது புதுக் கடவுள்? அல்லாஹ்வின் பெயரால் என்று மட்டும் இருக்கட்டும்” [சுட்டி-3].
ஹமீது ஜா.பரின் “வஹ்ஹாபா? யாரு … பண்டாரி வஹாபா?” என்ற கேள்வி ஸுஹைலைத்தான் எனக்கு நினைவூட்டுகிறது.
ஃஃஃ
சுட்டிகள்:
1. http://www.a1realism.com/history/Raheequl_makthooom/madinah_first_phase.htm#129
2. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80606302&format=html
3. http://hadith.al-islam.com/Display/Display.asp?hnum=2529&doc=0
___________________________________________________________________

to.wahhabi@gmail.com

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி