ஜார்ஜ் ஒர்வலின் 1984

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

எஸ் என் நடேசன்



அரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும் ஆண், பெண் உறவுகள் எப்படி கட்டுப்படுத்தப்படும், குற்றமாக்கப்படும் என்பதை எடுத்துக்காட்டுகின்ற சிரஞ்சீவியான நூலாகும்.

இந்த கதையை நாடகமாக த.அக்ரேர் காங் (THE ACTORS GANG எனும் நாடக கம்பனி அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சலில் இருந்து வந்து, மெல்பேர்ண் சர்வதேச கலைவிழாவில் (MELBOURNE INTERNATIONAL ARTS FESTIVAL)) ல் மெல்பேன் ஆர்ஸ் தியேட்டரில் மேடை ஏற்றினார்கள்.

ஓவலின் கதையில் வரும் வின்சர் சிமித் கட்சியின் பிரசார பகுதியில் வேலை செய்பவன். கட்சியின் பெண் உறுப்பினர் உடன் அவன் கொண்ட உறவு வெளிபடையாக தெரியவரும்போது கைது செய்யப்பட்டு மற்றய கட்சி உறுப்பினர்களால் சித்திரவதைக்கு உள்ளாகிறான். வின்சன் சிமித்தின் பாத்திரத்துடன் கட்சி உறுப்பினர் நால்வர் (ஒரு பெண் உட்பட) நடிக்கும் இந்த நாடகம் மிகவும் அற்புதமாக, நாவலின் கதையை பின்நோக்கி நகர்த்துகிறது. நாடகத்தி¢ல் சித்திரவதை செய்யும் நால்வருமே வின்சன்ரையும் அந்த பெண்ணின் பாத்திரத்தை நடிக்கிறார்கள். கதை வெகுவேகமாக சினிமாபோல் நகர்கிறது. இரண்டேகால் மணிநேரம் மேடையில் வின்சன்ட் பாத்திரமாக ஒரு பெனியனோடு மேடையின் மத்தியில் நிற்கும் அடம் வால்ஸ் (ADAM WALSH)தனது உடல் நடுக்கத்தை நிறுத்தவில்லை.

எப்படி பிரசாரம் உண்மையை மறைத்து பொய்மையான எதிரிகளை உருவாக்கு மனிதர்களின் உணர்வுகளை தூண்டி, தேவையற்ற போருக்கு தயாராக்குவது என்பது ஜோர்ஜ் ஓர்வெலிஸ் 1984 மிக அழகாக காட்டப்படுகிறது. அப்படியான பிரசார உத்திகள் விசுவல் முறைகளால் இந்தமேடையில் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமாவை பார்த்து பழக்கப்பட்ட கண்களுக்கு நாடகங்கள் பழமையாக அலுப்புத்தட்டும். இங்கே ஒரு விறுவிறுப்பான சினிமாப்படமாக 1984 பின்னோக்கி விசுவல் மற்றும் சவுண்ட் உதவியுடன் விரிகிறது.

இந்த நாடகத்தின் தேவை சமகால கட்டத்தில் உள்ளது. தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் பிரசார கயிறு திரிப்புகள், எங்கள் ஊர் அரசாங்க, புலிகளின் பொய்கள் என்பன இந்த நாடகம் பார்த்த எனது மனக்கண்ணில் விரிந்து மறைந்தது.

மெல்பேனில் பெஸ்ரிவலில் நடந்த எல்லா நாடகங்களிலும் இதுவே மக்களை கவர்ந்ததும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த நாடகமாகும்.


Series Navigation

எஸ் என் நடேசன்

எஸ் என் நடேசன்