திரைப்படம்: அமெரிக்க பூதமும், கம்யூனிச பிணமும்

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

சுப்ரபாரதிமணியன்


====

போலந்து திரைப்படம் ஒன்று . ஸ்டாலின் காலம் பற்றினதில் கம்ய்யூனிசத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு சிறுவன்

ஒரு படத்தை பாதுகாத்து வருகிறான். அவனை வேறொரு கம்யூனுக்கு மாற்றுகிறார்கள்.

கம்யூன் தலைவன் கெடுபிடியான ஆசாமி. குரூரமானவன். சிறுவன் வேறொரு கம்யூனுக்குப் போவதற்காக் தனது பொருட்களை தேடி எடுத்து அவசர கதியில் புறப்படுகிறான். அவன் பாதுகாத்து வைத்திருந்த படம் எதெச்சையாய் கீழே விழுகிறது. கம்யூன் தலைவன் கால் ப்ட்டு கிழிகிறது. கம்யூன் தலைவன் கேட்கிறான். ‘ யார் இந்த வயதானவன் ‘ பையன் அதிர்ந்து போய் சொல்கிறான். ‘ லெனின் ‘ லெனின் படம் கிழிவுறுவது அவனை வெகுவாக பாதிக்கிறது.

கம்யூனிசத்தில் அக்கறை கொண்ட அய்ம்பது வயது பெண் ஒருத்தி இதே போல் லெனின் சிலை தூக்கி எறியப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைவதை ‘ குட்பை லெனின் ‘ என்ற செர்மன் படத்தில் பார்க்கலாம்.

‘ லெனின் பிறப்பு ரஸ்யாவிற்கு ஏற்ப்பட்ட துர்பாக்கியம். அந்த நாட்டின் அடுத்த துர்பாக்கியம் அவர் மரணம் ‘

என்று சர்சில் எழுதினாராம். ஸ்டாலின் ஆட்சியின் கொடுமைகள் சர்ச்சிலின் கருத்த்ற்கு முன்னுரையாக

இருந்திருக்கிறது.

‘ குட்பை லெனின் ‘ படத்தில் அலெக்ஸ் என்ற இளயவனின் அம்மா கோமாவில் கிடக்கிறாள்.சோசலிச

கட்சி உறுப்பினர் அவள். பெர்லின் சுவர் வீழ்ச்சி அதன் தொடர்பான நிகழ்வுகளும் அவன் அம்மாவை வெகுவாக பாதிக்கும் என எட்டு மாதங்களுக்கு பின்னால் கோமாவில் இருந்துஅவள் தப்பிக்கிறபோது அலெக்ஸ் நினைக்கிறான்.

நினைவு திரும்பி விட்ட்து. . ஆனால் நடமாட முடிவதில்லை. இந்நிலையில் பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் கிழக்கு

செர்மனியில் கம்யூனிசத்திற்கு நேர்ந்துள்ள சரிவு பற்றி அவ்ள் அறிந்து கொள்ளக்கூடாது என்ற் அலெக்ஸ்

நினைக்கிறான். இறக்குமதியாகும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் சாதாரணமாக வீட்டில் இருக்கின்றன. அம்மா

அதை அறியக்கூடாது என்பதற்காக் அவற்றின் சுவடு தெய்ரியாமல் அழிக்கிறான். இற்க்குமதிப் பொருட்களை மறைத்து வைக்கிறான் அம்மா ஆசைப்படும் கம்யூனிச அரசாங்க கால உணவுப்பொருட்கள் இப்போதும் விநியோகத்தில் இருப்பவை என்ற எண்ணத்தை நிலைநிறுத்த முயல்கிறான்.தொலைக்காட்சிகளில்

சமீபத்தியவை இடம் பெற்றுவிடக்கூடாது என்று பழய செய்திக்கோப்புகளை வீடியோவில் தொகுத்து

அம்ம்மாவின் அறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறான்.

அவளின் பிறந்த தினத்திற்கு ப்ழய காம்ரேடுகளை அழைத்து வந்து வாழ்த்து சொல்வதும், கட்சியின் நிலை பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதும் நட்க்கிறது. கோக்கோலா விளம்பரம் கண்ணில் படுகிறபோது அவ்ள் அந்நிய் முதலீடு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ப்ற்றி வினா எழுப்புகிறாள். அவ்ன் சமாளிக்கிறான். ஒரு சிறு அதிர்ச்சி கூட அவளின் உயிரைப் ப்றித்து விடும் என்ற் மருத்துவரின் அறிவுரை அவனை அதிர்ச்சியடையச் செய்து கொண்டே இருக்கிறது.அவளின் உடல்நலத்தை மீட்டெடுப்பது அவனின் அக்கறையாக இருக்கிறது. ஒரு நாள் சிறு சுற்றுலாவிற்காக வெளியெ செல்லும் போது வீதிகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும் அலெக்ஸ் மறைத்தே நகரின் ஒதுக்குப்புறத்திற்கு கூட்டிச் செல்கிறான். லெனின் சிலை உடைக்கப்பட்டு கிரெனில் லெனின் தூக்கி எறியப்படும் காட்சியை அலக்ஸின் அம்மா எதேச்சையாய் பார்க்கிறாள். பெர்லின் சுவரின் வீழ்ச்சி மற்றும் கம்யூனிசத்தின் தகர்வைப் புரிந்து கொள்கிறாள். நெடு நாளைய கம்யூனிஸ்ட் உறுப்பினர் அவள். அலெக்ஸின் தடுமாற்றங்கள் முடிவுக்கு வருகின்றன்.அதிர்ச்சியில் மரணம் அடைக்கிறாள்.

கிழிபடுகிற லெனின் படமும், தூக்கி எறியப்படும் லெனின் சிலையும் அந்தத் தத்துவங்களின் மீதான காலம் காலமாக

நம்பிக்கை கொண்டிருப்பவர்களின் கனவுகளைச் சிதைப்பவைதான். அலெக்ஸின் அம்மாவின் கனவை சிதைத்தவர்களில் முக்கியமானவர் அவரின் கணவர். அவர் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர் அல்ல. அதுவே அவளுக்கு பிளவுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. கிழக்கு மேற்கு செர்மனியின் பிளவின் போது குழந்தைகளுடன் அவள் கிழக்கு செர்மனிக்கு வந்து விடுகிறள். பல் கடிதங்கள் எழுதுகிறான். ஆனால் அவள் எதற்கும் பதில் எழுதுவதில்லை. அவள் பதில் எழுதாத கடிதங்கள் அலெக்ஸ்ற்கு கிடைக்கின்றன். அப்பாவைத் தேடி கண்டு பிடிக்கிறான்.அப்பா இன்னொரு குடும்பத்தோடு வாழ்கிறார். உலகமயமாக்கல் செர்மன் எல்லைகளை விரித்து கோடுகள் இல்லாமல் செய்து விட்டது.அதில் நொறுங்கிப்போனக் கனவுகள் ஏராளம்.

கியூபா பற்றினக் கனவுகளும் வீரக்கதைகளும் நமக்குக் கிடைத்துக்கொண்டெ இருக்கின்றன். சமீபத்தில் சேகுவாரா ப்ற்றின ஏராளமானப் புத்தகங்கள் தமிழில் தலையணை அளவுகளில் வந்து சேகுவாரா பற்றின பிம்பக் கட்டமைப்பை உயர்த்திபிடித்திருக்கின்றன். கியூபா புரட்சிக்குப் பின் அமெரிக்காவில் வந்து குடியேறிய திரைப்பட இயக்குனருக்கு அமெரிக்க தாக்கம் இருப்பதில் ஆச்சர்யமில்லை. படத்தை விவரிக்கும் முறையிலும் , கியூபா அரசியல் சூழலைச் சொல்லும் முறையிலும் இயக்குனர் செரிராடு ‘ கியூபா லிபரே ‘ என்ற படத்தில் அமெரிக்கப் பார்வையையே

முதன்மைப்படுத்தியிருக்கிறார்.

அம்பதுகளின் இறுதி இப்படத்திற்கு களனாகியிருக்கிறது. புரட்சியைப் பின்னணியாகவும் கொண்டிருக்கிறது. கியூபா மாணவன் ஒருவனுக்கு திரைப்படங்களை தொடர்ந்து பார்ப்பது பொழுது போக்காகிறது. அந்த ஊரில் இருக்கும் மின் நிலையம் ‘ தீவிரவதிகளால் ‘ அழிக்கப்பட்டு ஊர் இருளாகிறது.அப்பையனுக்கு திரைப்படம் ப்பர்க்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது. மின்சாரம் இல்லத இருட்டுலகில் வாழ்ப்பழகிக் கொள்கிறார்கள். அப்பகுதியில் ஸுலியா என்ற அமெரிக்கப் பெண் வாழ்ந்து வருகிறாள். பையனுக்கு அவளுடன் நட்பு ஏற்படுகிறது.

( செரிராடுவின் முதல் படத்தின் பெயர் டிரிமிங் ஸுலியா)._ ஸுலியா பற்றினக் கன்வுகளில் மூழ்குகிறான். இயல்பான் பாலியல் உண்ர்ச்சிகளால் தூண்டப்படுகிறான், போராளி ஒருவனின் காதலும் இணையாக்ச் சொல்லப்ப்ட்டிருக்கிற்து. போராளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. காவல் துறையினருடனான மோதலில் அவன் கொல்லப்படுகிறான். பையனின் தாத்தா ‘சே ‘ ஸுலியாவுடன் உறவு வைத்திருக்கிறார் என்பது பையனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.ஆனால் ஸுலியாவின் உலகமும் வெகுளித்தனமும் , துரோகமும் என்ற குழப்பமாய் அவளைப் பார்க்கிறான். திறந்த வெளி திரைப்பட அரங்கம் ஒன்று திறக்கப்படுகிறது. பையன் பெருமூச்சு விடுகிறான்.

‘ கசபிளங்கா ‘ படம் அதில் திரையிடப்படுகிறது.தனது முதிர்ந்த சினெகிதி, காதலி ஸுலியாவின் பிம்பங்களை அதில் வரும் பெண்ணோடு பொருத்திப் பார்த்துக்கொள்கிறான். மனச்சாட்சியின் குரல் போல் ஒருவன் படம் முழுக்க வந்து போகிறான். போராளிகள் அவனுக்கு அதிர்ச்சியாகவே இருக்கின்றனர்.

இந்த மனச்சாட்சியாக செரிராடு இருக்கிறார். புரட்சி பற்றின கட்டமைப்புகளுக்கு மத்தியில் அதை தீவிரவாத கேலிக்குறியாகப் பார்ப்பது அவருக்கு உகந்ததாக இருக்கிறது.

சுப்ரபாரதிம்ணியன்

srimukhi@sancharnet.in

.

Series Navigation

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்