புதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

தமிழில் : புதுவை ஞானம்


ஒரு புதிய படைப்புக்கான பிரசவ வேதனையில் உலகம் இந்தப் பேறுகால வலி பூமித்தாயைத் தவிக்க வைக்கிறது. நமது கற்பனை, உருக்கொடுக்கப் போராடும் தொலைதூர இலட்சியமாக அல்லது இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய அருள்வாக்காக அது இல்லை. அது இங்கேயே இப்போதே நிகழுகிறது.

நமக்குத் தெரியாவிட்டாலும் கூட புதிய மனிதம் மானிடத்தின் தெய்வீக இனம் ஏற்கனவே நம்முடன் இருக்கிற அது நமது அண்டை வீட்டாராக இருக்கலாம், நெருங்கிய சகோதரனாக இருக்கலாம், அல்லது அது நானாகவே கூட இருக்கலாம். ஒரு மெல்லிய திரைதான் அதனை மூடியிருக்கிறது. அந்த கோட்டுக்குப் பின்னே அது நடைபோடுகிறது. திரையைக் கிழித்து எறிந்து முன்னணிக்கு வரும் ஒரு வாய்ப்புக்காக அது காத்திருக்கிறது. நெடுங்காலமாக இருந்து வரும் அமைப்புகள் மறைந்து புதிய சக்திகள் தலைதூக்கும் கடினமான காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். பழைய பழக்கங்கள் தூக்கி எறியப்பட்டு புதிய மனத்தூண்டுதல்கள் (உத்வேகங்கள்) கையாளப்படுகின்றன.

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மறுவார்ப்புக்கும்இ மதிப்பீடுகளுக்குமான அவசரத் தேவையை நாம் பார்க்கிறோம். அடிமட்டத்திலிருந்து, அடிவாரத்திலிருந்து சிகரம் வரை அரசியல் பொருளாதாரம் தொடங்கி கலை மற்றும் ஆன்மீகம் வரை ஒரு புதிய வெளிப்பாட்டையும், புதிய துடிப்பையும் வெளிக்கொணர மானுடம் உலுக்கப்படுகிறது. இருளிலும் முகமுடிக்குப் பின்னாலும் துயரப்பட விரும்பாத ஆத்மாவின் இரகசிய உந்துதல் திமிறி எழுகிறது. பரந்த வெளிச்சத்துக்கு வரவும், உயரிய ஒழுக்கங்களால் அடையாளம் கண்டு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற மன உறுதியிலும் மானுடம் இதுகாறும் வாழ்ந்து வந்த பல பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளில், தனது சக்தியைத் திரட்டி அந்த ஆன்மா-அந்த விசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. மண் மீது மனிதன் தோன்றிய அந்த மகத்தான நாளிலேயே உயர் மனிதனும் பிறவி எடுத்துவிட்டான். அந்தக் கணத்திலேயே மிருகஉடல் என்னும் போர்வையில் சிறைப்பட்டு இருக்க மறுத்துவிட்டு அது மனிதனாக வெளிப்பட்டது. அந்த முன் முயற்சியிலேயே பெரும் சுதந்திரமும் பரந்து, விரிந்த இயக்கமும் அஇதனை அணுகின. ஆழம் காண முடியாத அந்த அலையின் உச்சிமுகடாக; காலகாலமாக கவிஞர்கள், யோகிகள், ஞானிகள் இவர்களின் அனுபவங்களின் ஊடே, உதயத்தை நோக்கி விரைந்து ஓடும் அசுவமேதயாகக் குதிரையைப் போல் குளம்பொலித்து பீடு நடைபோட்டது.

அப்போதே அதன் சிறைக்காலம் அல்லது சொல்லப்போனால் அதன் உள்ளார்ந்த தயாரிப்பு ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த அழையா விருந்தாளியின் குரல் அதற்கு தேவையானதாக இருந்தது. ஏனெனில், ஆன்மாவின் மவுனத்தில் ஒன்றுபடுவதற்கான அழைப்புக் குரலாகும் அது இன்று அந்த மவுனம் பேச்சாக உருக்கொள்கிறது. இன்று அந்த ஓடு முற்றி உடைவதற்குத் தயாராகி, முற்று முழுதாக வளர்ந்த அந்த உயிரியை வெளியே கொண்டு வரும் அளவுக்குப் பக்குவப்பட்டு விட்டது. அஞ்சாத நெஞ்சத்திலிருந்த அவன் பெருமிதத்தோடும், வெற்றி மிதப்போடும் முழு மரியாதையுடன் அரச கம்பீரத்துடன் வெளி வருகிறான்.

இன்றைய மனித இனத்திலிருந்து ஒரு புதிய மானுடம் எழுகிறது. புதிய ஒழுங்கின் உயிரிகள் எங்கனம் இருக்கின்றன ? வெகுவிரைவில் அவை நிரம்பி வழிந்து ஆதிக்கம் செலுத்தும் – நம்மை அணுகி வந்து கொண்டிருக்கும் பரிணாம வளர்ச்சியின் சுழற்சியால் உதிரப் போகும் மனித இனத்தின் இகலோகப் புரட்சியின் தலையும், வாலுமாக அது இருக்கும். இந்த புதிய ஒழுங்கின் உயிரிகள் எப்படி இருக்கும் ? அது மனிதன் என்னவாக இல்லையோ அதுவாகவும்; என்னவாக இருக்கிறானோ அதுவாகவும், இருக்கும். அது மனிதனாக இருக்காது ஏனெனில் மனிதனின் எல்லைகளையும், ஏலாமைகளையும் கடந்ததாகவும்; இ உலக வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்களில் அவனை அலைக்கழித்துத் தொல்லையூட்டி, அடி ஆழத்தில் ஆறுதல் அளித்த அடிப்படைத் தூண்டுதல்களை வென்றடையக் கூடிய மனிதனாக இருக்கும்.

அந்தப் புதிய மனிதன் எசமானாக இருப்பான். அடிமையாக இருக்கமாட்டான். அவன் முதலில் தனக்கே எசமான் ஆகவும் பின்னர் உலகத்தின் எசமானாகவும் இருப்பான். அவன் உண்மையில் மனிதனாக இருந்தபோதிலும் இஅடிமைதான். அவனுக்கு சொந்த குரலோ, தேர்வோ இல்லை அவனுக்குள்ளே உறையும் நிர்ணயிக்கக் கூடிய ஆன்மா அதாவது ஈஸ்வரன் உறக்கத்திலும், அமைதியிலும் பிணைக்கப்பட்டுள்ளான். இயற்கை மற்றும் சூழ்நிலையின் கைகளில் ஒரு விளையாட்டுப் பொம்மையாக அவன் இருக்கிறான். எனவேதான் அறிவியல் அவனது மிக உயரிய (தர்ம சாஸ்திரமாக) அறநெறியாக ஆகி இருக்கிறது. இயற்கையின் மனோநிலை பற்றி நமக்குச் சொல்லிக் கொடுத்து அதனை வசப்படுத்த அறிவியல் உதவுகிறது அல்லவா ? மனிதனைப் பற்றிய நமது சரியான மதிப்பீடுஇ, அவன் ஒரு புத்திசாலியான அடிமை என்பதாகும். ஆனால் புதிய மனிதன் தன்னை அறிந்து தனது அகவயமான விறுப்புறுதி மூலம் (மனோவலிமை) தனக்கான உலகத்தை தனது விருப்பப்படி வார்த்து உருவாக்குகிறான். அவன் இயற்கையைக் கண்டு அஞ்சி பயந்து அச்சத்திலும், தயக்கத்திலும் இருக்கமாட்டான். ஆனால் இயற்கையுடன் ஒத்திசைந்து, தன்னை அதன் எசமானாக பறை சாற்றுவான். புதிய மனிதனை அவனது இயல்பினாலும், நடையினாலும் அதாவது அவனது ஒவ்வொரு வெளிப்பாட்டின் அரச தோரணையாலும், கம்பீரத்தாலும் அடையாளம் காண்போம்.

ஆக்கிரமிப்புக்கும் அல்லது அடக்கி ஆள்வதற்கும் ஆன இயல்பு எதுவும் இந்த இறையாண்மைக்கு இல்லை. ஒரு நித்தியமான எதிரியை உருவாக்கி, அவனுடன் தொடர்ந்து மோதல் நடத்தி இஅவனை வென்று அடிமைப்படுத்துவதன் இமூலம், தன்னை உணரும் சக்தியாக அது இருக்கும். அது அதன் போக்கில் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு அசுர சக்தியாக விளங்கும். நீீீட்சேயின் அதிகாரத்தை நோக்கிய விருப்புறுதிச் சக்தியாக (Will to Power) இருக்காது. மாறாக அது ஒரு தெய்வீக சக்தியாக இருக்கும். ஏனெனில் அது செலுத்தும் விசையின் பலமும் அது பெறும் வெற்றிகளும் அதன் ஆணவத்தில் இருந்து பிறப்பதில்லை. அதாவது தனக்கு எதிராக [வெளியே] புறவயமான ஒரு சக்தியை உணர்ந்து தன்னை வலுப்படுத்தி நிலைநிறுத்தும் ஆணவமாக இருக்கும் ஆனால் பிரபஞ்ச ஆன்மாவிடம் தோன்றி வெளிவந்து எல்லா தனித்தனி ஆன்மாக்களுடன் கலந்திருக்கும் ஒரு உயிரிய ‘தான் ‘ எனும் உயர்வாக அது இருக்கும். இந்த அமைதி மயமான முழுநிறைவான தெய்வீக இறையாண்மைக்கு மாறாக தனது ஆக்கிரமிப்பை வெளிப்படுத்தும் சக்தியாக அசுரசக்தி இருக்கும். தெய்வீக சக்தி தன்னை வலியுறுத்திக் கொள்வதில்லை. மாறாக வென்றெடுக்கிறது. உலகின் சக்திகள் அதன் எதிரியாக செயல்படுவதில்லை மாறாக அதன் கருவியாக செயல்படுகின்றன. இவ்வாறாக புதிய மனிதன் தனது இறையாண்மையை உறுதிப்படுத்துகிறான். பிரபஞ்ச சக்திகளுடனும் நித்திய கடவுள் பக்தியுடன் இணைந்தும், இசைந்தும் முழுமையாக இதனைச் சாதிக்கிறான். தனது இயல்பில் (ஸ்வரத்) இயங்குவதால் உலகத்தின் பேரரசனாக (சாம்ராட்) அவன் ஆவான்.

இந்த ஆளுமையானது விறுப்புறுதியில் மட்டும் (மன திட்டத்தில்) அல்லாமல் இதயத்திலும், அறிவிலும் கூட செயற்பாட்டுக்கு வரும் ஏனெனில் புதிய மனிதனானவன் ஆணவத்தை மையமாகக் கொண்ட அறிவால் மட்டுமின்றி, மறைமுகமான ஐயத்துக்கிடமான செயற்பாடான தரப்படுத்தல் (Ratiocination) (பிரமானத்தால்) மட்டுமின்றி உள்ளார்ந்த தொடர்பாலும் ஏராளமான நேரடியான வெளிப்பாட்டாலும் தெரிந்து கொள்வான் இந்தப் புதிய அறிவு பரந்துபட்டதாகவும், முழுமையானதாகவும் படைப்பாற்றல் மிக்கதாகவும் இருக்கும். ஏனெனில் அது விஷயங்களில் யதார்த்தத்தை [நிழலை (சாயலை) அல்ல] அடிப்படையாகக் கொண்டிருக்கும் உண்மையானது ஒவ்வொரு அனுபவத்திலும் ஒவ்வொரு சொல்லிலும் ஒளிவிட்டு சுடரும் ‘நமது பேச்சிலும் அறிவிலும் நாம் கேட்கும் வார்த்தைகளிலும் உண்மை இடம் பெற்றிருக்கம் ‘ என வேதங்கள் கூறுகின்றன புத்தியும், மனமும் துரிதமான கட்டுமான முகாமைகளாக மட்டுமின்றி, தானே ஒளிப்பாதையாக விளங்கும். இதயம் கூட ஆணவத்தாலும் ஆசா பாசங்களாலும்இ, இப்போது ஏற்படும் கூச்சல் குழப்பத்திலிருந்து விடுவிக்கப்படும். அமைதியான ஒரு வானம் தனது தூய்மையும், ஜொலிப்பும் மிக்க ஒளியினைப் பாய்ச்சும் முடிச்சு அவிழ்க்கப்பட்டு, வடமொழியில் ‘பிடாயதே ஹ்ருதய கிரந்தி ‘ – எனக் குறிப்பிடுவது போன்ற மற்றொரு சமுத்திரத்தின் வலிந்து பரந்த நீரோட்டங்கள் பிரவகிக்கும். நமக்கு உறவினர்களை மட்டுமின்றி கடவுள் படைத்த அனைவரையும் நாம் நேசிப்போம். பசியும், கருணையும் கொண்ட அநித்தியமான மனித அன்பினால் மட்டுமல்ல, ஆன்மாக்களின் தெய்வீக அடையாளத்தில் உறையும் ரசானுபவத்தின் ஆழ்ந்தஅகன்ற அன்பினால் நேசிப்போம்.

அந்தப் புதிய சமுதாயம் போட்டிகளின் அடிப்படையிலோ அல்லது கூட்டுறவின் அடிப்படையிலோ அமையாது. இது ஒரு வெளிப்படையான மோதலாகவோ அல்லது ஒன்றுக்கொன்று முரண்பட்ட தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் சமரசமாகவோ இருக்காது மானிடத்தின் கூட்டு ஆன்மாவின் இயற்மையான வெளிப்பாடாக இருப்பதும் ஒவ்வொரு தனிப்பட்ட ஆன்மாவின் பரந்துபட்ட சிறகடிக்கும் சுதந்திரத்தின் உழைப்பால் நிகழும் சாதனையாக, ஒவ்வொருக்கும் பொருத்தமான கடவுள் சக்தியின் வெளிப்பாடாக இருக்கும். மிகவும் நுட்பமானதும், நெகிழ்ச்சி மிக்கதும் ஆனதொரு அமைப்பாக மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பதற்குப் பதிலாக ஒருவருடன் ஒருவர் உள்ளுறையும் அமைப்பாக விளங்கும் நீங்கள் விரும்பினால் அது பல கடவுள்களில் ஒருவரை வணங்கும் ஒவ்வொருவர் உள்ளிருக்கும் படிநிலையின் உன்னதமானதாக இருக்கும். ஏனெனில் ஒரே சமயத்தில் ஒவ்வொருவரும் எல்லாருள்ளும் எல்லாரும் எவ்வொருவருள்ளும் இருக்கும் அமைப்பு அது.

இந்த புதியமானுடம், கடவுளருக்கு நாம் வார்தெடுத்து சமர்ப்பிப்பதாக இருக்கும். கடவுளருக்கும், மனிதருக்கும் இடையில் காணமற் போன தொடர்பை மீட்டெடுப்பதாக அது இருக்கும் அது கடவுள் குடியிருக்கும் இனமாக அமையும் தனது முழு முதல் ஆசையும் கனவுமான ஆண்டாண்டு காலமாக கடவுளை யாசித்து அவன் பெற்றதான அமரத்துவத்தை மனிதன் அடைவான். பிரித்தும், தனிமைப்படுத்தியும் இணைத்தும் மனிதனை; சாவுக்கும் துயருக்கும் ஆட்படுத்தும் அனைத்தும் அவனது அறியாமை, பலவீனம் மற்றும் ஆணவத்தால் விளைபவை. இதற்கு அவனது ஆன்மாவே காரணம் இஇயேசு கிருஸ்து கோரியது போல அவனுக்கு ஒரு புதிய பிறப்பு, அவனது ஆன்மாவில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது தன்னை விட பெரியதும், வலியதுமான ஆன்மாவிலிருந்து துண்டித்துக் கொண்ட சிறிய ஆன்மா நம்முடைய ஆன்மா. எனவே தான், அது ஒவ்வொருவருக்குள்ளும் செத்துப்பிழைக்கிறது. வாழும்போதும் வாழ்வதற்கு அஞ்சுகிறது. எனவே அற்பமானதாகவும், ஏழ்மையிலும் வாழுகிறது. ஆனால் இப்போது வரும் யுகத்தில் கடவுளே போன்ற நித்தியமான ராஜமரியாதை பூண்டெழுந்து நமக்கு விமோசனம் தருகிறது.

புதிய உருவாக்கத்தின் மூச்சும் வீச்சும் தவறாகப்புரிந்து கொள்ளப்படக் கூடாது. நம்மை இன்று எதிர்நோக்கி இருக்கும் கேள்வி- அந்த புதிய மனிதன், அதிகமானுடம் வருமா – இல்லையா ? என்பதல்ல ஆனால் நாம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி நம்மில் யார் அதனையும் அதன் கருவிகளையும் அதன் உள்ளடக்கத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம் என்பது தான்.

ஒரு புதிய உலகம் பிறக்கிறது:

நூற்றாண்டு நூற்றாண்டுகளாக மானுடம் இந்த கணத்துக்காகக் காத்திருக்கிறது அது வருகிறது என்றபோதிலும் அது கடினமானது தான்

அதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே நாம் வெறுமனே ஒய்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கலாம் என நான் சொல்ல வரவில்லை நாம் இங்கே இஇருக்கிறோம் புதிய படைப்புக்கான வழியைத் தயார் செய்வதற்காக வரலாறு படைக்க வேண்டிய நேரம் இது.

தைரியம் என்பது ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போன்றதல்ல முற்றிலும் ஒன்றுபட்டு வரலாறு படைப்பதற்கான நம்பிக்கையோடு இருக்க முடிவு எடுத்தவர்களுக்கு உதவியாக எப்போதும் தெய்வம் இருக்கும்.

– அருள்மிகு அன்னை. –

மூலம்: ‘NEW HUMANITY ‘

BY NOLINIKANTAGUPTA

SOURCE: COLLECTED WORKS OF NOLINI KANTA GUPTA VOL I

தமிழாக்கம் : புதுவை ஞானம்.

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்