இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி

This entry is part [part not set] of 35 in the series 20070222_Issue

பாரதி மகேந்திரன்


உ) வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி

தேவையானவை:

நன்கு முற்றிய வா;ழைக்காய்கள் – 3
சாம்பார் (சிறிய) வெங்காயம் – 200 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
கடுகு – 1 தே. க.
மிளகாய்ப் பொடி – 2 தே. க
உப்பு – 2 தே. க. அல்லது தேவைப்படி

முதலில் வாழைக்காய்களைத் தோல் சீவி, அவற்றைச் சிறு துண்டங்களாக அரியவும். பிறக கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் ஏற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகைப் போட்டு அது வெடித்த பின் உரித்து வைத்துள்ள வெங்காயங்களை அதில் போட்டு அது நன்றாக வேகும் வரை வதக்கவும். பின்னர், அரிந்து வைத்துள்ள வாழைக்காய்த் துண்டங்களை அதில் போட்டுக் கிளறிக் கலந்து, மிளகாய்ப் பொடியையும் உப்புப் பொடியையும் சேர்க்கவும். பிறகு ஒரு சல்லடைத் தட்டால் மூடி வைத்து மிதமான தீயில் அதை வேகவிடவும். அவ்வப்போது அடி பிடிக்காமல் இருக்கக் கிளறிவிடவும். நன்றாக வெந்து பிறகு இறக்கவும்.

இது சாதத்தில் பிசைந்து சாப்பிட ஏற்றதாகும். சிலர் வெங்காயத்துடன் உரித்த பூண்டுப் பற்களும் கொஞ்சம் சேர்த்து வதக்குவார்கள். இதனால் பூண்டு வாசனையுடன் இதன் சுவை கூடும். பெருங்காயப் பொடி அவசியம் இல்லை. ஆனால் சேர்ப்பதும் சேர்க்காததும் அவரவர் விருப்பம்.


mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்

Series Navigation

பாரதி மகேந்திரன்

பாரதி மகேந்திரன்