தெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

ராய்ட்டர்ஸ்


.

மனித உடலுக்கு தேவையான உடல் உறுப்புக்களை தயாரிக்க உகந்த பன்றிக்குட்டிகளை மரபணு மாற்ற முறையில் தெற்கு கொரிய அறிவியலாளர்கள் தயாரித்துள்ளார்கள்.

இதன் தலைமை அறிவியலாளரான பார்க் க்வாங்-வூக் அவர்கள், HLA-G என்ற ஜீன் உள்ளதாக இந்த பன்றிக்குட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று அறிவித்திருக்கிறார். இந்த ஜீன் உள்ள பன்றிகள் உருவாக்கும் மனித உடல் உறுப்புகள் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும்போது அவை மனித உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பு அதிகம்.

ஒரு பன்றியின் செல்லில் இந்த ஜீனை செலுத்திய பின்னர் இந்த ஜீன் மற்றொரு பன்றியின் கர்ப்பப்பையில் வைக்கப்பட்டு ஐந்து நகல் பன்றிக்குட்டிகள் உருவாக்கப்பட்டன.

பன்றியிடம் உருவாக்கப்பட்ட மனித உடல் உறுப்புகள் மனிதருக்கு மாற்றம் செய்யப்படும்போது அவை மனித உடலில் உருவாகும் எதிர்ப்புசக்தியுள்ள செல்களால் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன.

HLA-G ஜீன் உள்ள செல்கள் 70 சதவீத விஷத்தன்மையை குறைக்கின்றன என்று பார்க் கூறுகிறார். இதனால் நிராகரிப்பு சதவீதம் குறைகிறது. இந்த ஆராய்ச்சிக்கு அரசாங்க உதவி கொடுக்கப்பட்டுள்ளது.

—-

Series Navigation

ராய்ட்டர்ஸ்

ராய்ட்டர்ஸ்