சதாரா மாலதிக்கு…

This entry is part of 33 in the series 20070405_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


எவர் குறித்தும்
எனக்கு இரண்டு அபிப்ராயங்கள்
புறம் ஒன்று உறவாட
உள் ஒன்று ஒளிக்க!.
பின்னது
தராசில் உயரும் தட்டு!
ஏழைசொல்!
அம்பலம் அறியாது,
தேர்தல்வரை காத்திருக்கும்
தீர்ப்பைச்சொல்ல!
நதிகடந்த படகொன்று
நடுக்கடலுக்குச் சென்றதாய்
சேதி, மூழ்கியது
படகோட்டி அல்ல
இரண்டாவது அபிப்ராயமும்
எனது கண்களும்…


Series Navigation