எங்கிருந்தாலும் வாழ்க

This entry is part [part not set] of 22 in the series 20010917_Issue

வந்தியத்தேவன்


உனக்காக நான் புகையைக்கூட விட்டுவிட்டேன்,
என்னை மட்டும் சாம்பலாக்க உனக்கு எப்படி மனம் வந்தது.

முதுமையிலும் முறுக்காய் வாழ நினைத்தேன்,
இருபதில் அறுபதாய் வாழ வைத்துவிட்டாயே.

உன்னுடன் உலகம் சுற்றிவர நினைதேன்,
உலகம் என்னை சுற்றி நகைக்க வைத்துவிட்டாயே.

நங்கை உன் கை கொண்டு நிலவில் சென்று வாழ நினைத்தேன்,
என்னை நடைபாதை நத்தையாய் நசுக்கிவிட்டுச் சென்றாயே.

உலக வணிக வளாகம் போல உன்னை உயரத்தில் வைத்திருந்தேன்,
தீவிர வாதியாய் வந்து என்னை தகர்த்துவிட்டுச் சென்றாயே.

நான் உனக்கு சிறுகதையாய் இருக்கலாம்,
ஆனால் எனக்கு என்றும் முற்றாத தொடர்கதை தான்.

கடல் கடந்து சென்றாலும் கற்கண்டாய் உன் கனவு,
கல்லரைக்குச் சென்றாலும் கண்டிப்பாய் உன் நினைவு.

வாடாத மலர் கொண்டு வஞ்சி உன்னை வாழ்த்த வந்தேன்,
என்னை சருகாக்கி வீசிய வான்மதியே நீ வாழ்க.

ஏமாற்றமும் ஏக்கமும் ஏராளமாய் எனக்களித்தாலும்
எட்டாத இடத்தில் ஏந்திழையே நீ வாழ்க.

Series Navigationபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு. >>

வந்தியத் தேவன்

வந்தியத் தேவன்