ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

ஜடாயு



ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக வாழும் நகரம் ஹைதராபாத் என்று ஒரு செக்யுலர் பஜனை உண்டு. ஆனால், பிரிவினையின் போதே ஹைதராபாத் முஸ்லீம்கள் பாகிஸ்தானில் சேரத்துடித்து அப்துல் ரசாக் தலைமையில் வன்முறையில் இறங்கியதும் சர்தார் படேல் அவர்களின் உறுதிமிக்க ராணுவ நடவடிக்கையால் அவர்கள் அடக்கப் பட்டதுமான அதி முக்கியமான சரித்திர சம்பவம் இந்த லேசர் காட்சிகளில் கிடையாது..

இந்த வாரக்கடைசியில், வேண்டுமென்றே இருட்டடிக்கப் பட்ட அதே ஜிகாதி இஸ்லாமியத் தீவிரவாதத்தின் அதே கோர முகம் அதே பூங்காவிலும், நகரத்தின் வேறு சில பகுதிகளிலும் 53க்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது.

வழக்கம் போல வாழ்க்கையின் வாரக்கடைசி குதூகலங்களுக்காக பூங்காவிற்கும், உணவகங்களுக்கும் ஓடும், சட்டத்த்தை மதித்து வாழ்ந்த, உழைத்து உண்ணும் மனிதக் கூட்டத்தின் உயிர்கள் இந்த மதவெறி மிருகங்களின் கோழைத்தனமான தாக்குதலில் சிதறடிக்கப் பட்டிருக்கின்றன. உயிரிழந்தவர்களின் ஆன்மா அமைதியடையட்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இஸ்லாமிய தீவிரவாதம் ஹைதராபத்திற்குப் புதிதல்ல. லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஹர்கத்-உல்-ஜிஹாட்-அல்-இஸ்லாமி (HuJi) அமைப்புகள் உள்ளூர் முஸ்லீம்கள் மத்தியில் அன்றாடம் புழங்கும் சமாசாரம் என்று தன்னிடம் கூறப்பட்டதாக பாதுகாப்பு நிபுணர் பி.ராமன் இந்தக் கட்டுரையில் (http://www.rediff.com/news/2007/aug/26raman.htm) கூறுகிறார். அவர் மேலும் தரும் தகவல்கள் –

“.. ஹைதராபத்தில் ஏராளமான முஸ்லீம்கள் வீடுகளில் ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் இந்த நகரத்திற்கு வந்த போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகள் இருந்தன – எதிர்ப்பாளர்கள் பின் லேடன் படங்களை ஊர்வலத்தில் எடுத்துச் சென்றார்கள். வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீன் மீது பட்டப் பகலில் கொலைவெறித்தாக்குதல் நடத்தும் அளவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் இங்கு துளிர்விட்டுப் போயிருக்கிறார்கள். இந்தியாவில் நடக்கும் எல்லா தீவிரவாத தாக்குதல்களிலும் ஏதாவது ஒரு ஹைதராபாத் தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது.. 1995-லேயே இங்கு அல்-கொய்தாவின் தலைமறைவு இயக்கங்கள் (sleeper cells) உருவாகி விட்டன”

கொல்லைப் புறத்தில் இவ்வளவு பெரிய ஜிஹாதி தீவிரவாத ஊற்றை வைத்துக் கொண்டு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததும், வழக்கம் போல பங்களாதேஷ், பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று ஆந்திர முதல்வர் வெட்கமில்லாமல் அறிக்கை விடுகிறார். அதே நேரத்தில் உளவுத்துறை குண்டுவெடிப்பில் பயன்படுத்திய வெடிமருந்து நாக்புரில் கடை வைத்திருக்கும் ஹைதரபாத்காரர் சுஹைல் என்பவரது கடையில் இருந்து வந்திருப்பதாக அறிவிக்கிறது… நம் நகரங்களிலேயே இருக்கும் இந்த கொலைகாரர்களை பார்க்க மறுத்து இன்னும் எத்தனை காலம் தான் கண்களை மூடிக் கொண்டிருக்கப் போகிறோம்?

இந்த குண்டுவெடிப்புகள் 2005 தீபாவளிக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த சம்பவத்தையே பெரிதும் ஒத்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் வாரங்களில் இந்த நகரில் விமரிசையாகக் கொண்டாடப் படும் முக்கியமான இந்துப் பண்டிகைகளான ரக்ஷா பந்தன் மற்றும் விநாயக சதுர்த்தி விழாக்களைக் குறிவைத்து, இந்தத் தருணத்தில் மக்களை அச்சுறுத்த இந்த குண்டுவெடிப்புகள் நடந்ததாகக் கூறப் படுகிறது. இனிமேல் ஒவ்வொரு வருடமும் எல்லா நகரங்களிலும் முக்கியமான இந்துப் பண்டிகைகளின் போது ஜிகாதி தாக்குதல்கள் திட்டமிடப்படலாம் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போல ஜிகாதி தீவிரவாதத்தால் இந்தியர்கள் உயிரிழப்பதும் வழக்கமான நிகழ்வாகி வருகிறது. ஜனவர்-2004 முதல் ஆகஸ்டு 2007 வரை உள்ள காலகட்டத்தில் இந்தியாவின் இழப்பு 3674 மனித உயிர்கள் என்று ஆகஸ்டு-27 டைம்ஸ் ஆப் இந்தியா (http://timesofindia.indiatimes.com/Indias_terror_death_toll_second_only_to_Iraq/articleshow/2312796.cms) தெரிவிக்கிறது. உயிரிழப்பில் போரால் சீரழிக்கப் பட்டிருக்கும் ஈராக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா தான் என்றும் இந்தப் பத்திரிகை கணக்கிட்டிருக்கிறது. தீவிரவாதத்தால் பலியான அமெரிக்கர்களின், பிரிட்டிஷாரின், ஐரோப்பியர்களின் ஒட்டுமொத்த ரத்தத்தை விட அதிகமாக இந்துக்களின் ரத்தம் தான் ஜிகாதி வன்முறைக்கு எதிராக இன்றும் சிந்திக் கொண்டிருக்கிறது.

இப்போது நடப்பது கொடுங்கோலன் ஔரங்கசீப்பின் ஆட்சியோ, கொள்ளையன் தைமூர் படையெடுப்போ அல்ல, ஆனால் சுதந்திர பாரதத்திலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய மதவெறி மிருகங்களின் அதிகபட்ச தாக்குதல்கள் இந்துக்களைக் குறிவைத்தே நிகழ்த்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவ்வளவு பெரிய அபாயத்தை நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணிப் பாருங்கள். இந்த சவாலை எதிர்கொள்ளத் திராணியில்லாத அரசியல் சக்திகளுக்கு நாட்டை ஆளும் உரிமை இல்லை. இனிவரும் காலங்களில் தீவிரவாதம் தான் இந்தியாவின் தலையாய பிரசினை – அதை உறுதியுடன் நேர்கொள்ளும் அரசியல் சக்திகளுக்கு மட்டுமே தங்கள் உயிர்மீது கொஞ்சமாவது பிரியம் உள்ள இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும்.


http://jataayu.blogspot.com/

jataayu.b@gmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு