பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்

This entry is part of 34 in the series 20061026_Issue

புதுவை ஞானம்நாம் வெளி -கனபரிமானம் பற்றியும் காலம் பற்றியுமான பண்டைத் தமிழர்களின் புரிதல் பற்றி கடந்த கட்டுரைகளில் பேசினோம் அல்லவா? இனி அவர்தம் ‘தூரம்’ அல்லது ‘நீட்டல் அளவை’ பற்றி கிடைத்திருக்கும் சில தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம்.
நான் ஏற்கனவே ‘தமிழ் அளவைகள்’ 1 மற்றும் 2 -ல் இவை பற்றி எழுதியுள்ளேன்.

“ ஆற்றிய அணுவோரெட்டால் அழகு தெத்துகளென்றாகும்
தோற்றிய துகளோரெட்டால் தொகுபஞ்சிற் றுளியென்றாகும்
மாற்றிய துயிலோரெட்டால் மயிர்நுனை பெயரன்றதாகும்
போற்றிய நுனை ரெட்டால் பொருந்துநேர் மணலென்றாகும்.

நேர்மணல் அதுவோரெட்டால் நிறைதரு கடுவென் றாகும்
ஏர்தரு கடுகோர் எட்டால் எள்ள ஒன்றதாகும்
சேர் தரு எள்ளோர் எட்டால் சிறந்தநெல் ஒன்றதாகும்
வீரமாம் நெல்லொ ரெட்டால் விரலள வொன்றதாகும்.

அணுவாய்க் கதித்துகளாய் ஆனாத பஞ்சாய்
மணியாய் மயிர் கண் மணலாய் – தணியவே
முட்டச் சிறுகாய் முன்னே வரும் எள்ளாகி
தட்டாதே நெல்லுவிரல் சாண்.

இருசான் முழமாகி எண்ணிரண்டாய் நல்ல
இருசாணும் கோலிரண்டாய் ஓத _திருசாண்
திடமாய்த் திருந்தவே செங்கோலிற் காலாய்
வடவான காலென்று மாறு”

(இதுவுமது)

“ஐயணுதூள் பஞ்சு மயிர்¢முனை நுண்மணல்
ஐயெள்ளு நெல்லுடனே அவ்விரலாம் _ பெய்வளையாய்
எட்டின் வழியெல்லாம் ஏற்றியே அவ்விரலின்
சட்டமதாய்ப் பன்னிரண்டு சான்”

(கணக்கதிகாரம்- பாடல் 41- 45 )

அணு என்பது பற்றியும் அதற்கும் கீழான பின்னங்கள் பற்றியும் ஏற்கனவே விவாதித்து விட்டோம். இப்போது அணு என்ற அலகில் (Unit) இருந்து மேல் நோக்கிய (Upwards) நீட்டல் அளவைகளின் அலகுகள், பற்றி சற்று பார்ப்போம்.

அணு 8 கொண்டது = கதிரெழுதுகள் 1*8 = 8
கதிரெழுதுகள் 8 கொண்டது = பஞ்சித்துகள் 8*8 = 64
பஞ்சித்துகள் 8 கொண்டது = மயிர்முனை 64*8 = 512
மயிர்முனை 8 கொண்டது = நுண்மணல் 512*8 = 4096
நுண்மணல் 8 கொண்டது = வெண்சிறு கடுகு 4096*8 = 32768
வெண்சிறு கடுகு 8 கொண்டது = எள்ளு 32768*8 = 262144
எள்ளு 8 கொண்டது = நெல்லு 262144*8 = 2097152
நெல்லு 8 கொண்டது = விரல் 2097152*8 = 16777216
விரல் 12 கொண்டது = சாண் 16777216*12 = 201326592
சாண் 2 கொண்டது = முழம் 201326592*2 = 402653184
முழம் 2 கொண்டது = சிறுகோல் 402653184*2 = 805306368
சிறுகோல் 4 கொண்டது = பெருங்கோல் 805306368*4 = 3221225472

இக்கோல், “செருமிதானை செம்பியவளவன் திருவுலகளந்த செம்பொற்கோலே”

இந்த வாய்ப்பாட்டின் படி 2முழம் = 1 கஜம் (yard) அதாவது சிறுகோல் = 805306368 அணுக்கள் கொண்டது எனவாகிறது.
1 yard =0.9144metre என்பதால் இதனை அடிப்படை அலகாகக் கொண்டு மற்ற அளவைகளை மெற்றிக் (Matric ) முறைக்கு மாற்றிப் பார்ப்போமா ? பெருங்கோல் என்பது 4 சிறுகோல் ஒரு பெருங்கோல் என்பதால் அதாவது 4 * 2= 8 முழம், 4 கஜம் ஆகிறது. 4*0.9144=36576 மீட்டர். இவ்வாறாக கூப்பிடு தூரம் என்பது 36576*500 = 182880 எனவும் காதம் என்பது182880*4=731520
மீட்டர் எனவும்,காதம் 4 கொண்டது யோசனை 731520*4 =2926080மீட்டர் எனவும்,இதன் 50ஆயிரம் மடங்கு ஆதித்ய மண்டலம் 2926080*50000=1463040,00000 மீட்டர் இதன் இரட்டிப்பு 1463040,00000 *2=292608000000மீட்டர் எனவும் ஆகிறது.
இக்கோல், “செருமிதானை செம்பியவளவன் திருவுலகளந்த செம்பொற்கோலே”

அக்கோல் 500 கொண்டது = கூப்பிடு 3221225472*500 = 1610612736000
கூப்பிடு 4 கொண்டது = காதம் 1610612736000*4 = 6442450944000
காதம் 4 கொண்டது = யோசனை 6442450944000*4 = 25769803776000
யோசனை 50000 கொண்டது = ஆதித்ய 25769803776000*50000 = 1288490188800000000
பகவான் இயங்கும் மட்டு
இதனை இரட்டித்த யோசனை = சந்திர 1288490188800000000*2 = 2576980377600000000
பகவான் இயங்கும் மட்டு
இதனை இரட்டிக்க = நட்சத்திர 2576980377600000000*2 = 5153960755200000000
மண்டலம்

இப்படி ஒன்றற்கொன்று இரட்டித்த தொகைகளாக இருக்குமென்று பெருநூல் கூறும்.

நட்சத்திர மண்டலம் என்பதன் அளவு 5153960755200000000 என்று கண்டுகொண்டபிறகு தமிழர்கள் அதனை எவ்வாறு அலகுச்சுருக்கம் செய்தனர் என்பதைக் காண்போம்: “அலகுச் சுருக்கம்” என்ற பெயரில் ஒரு ஓலைச் சுவடிக்கட்டு சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் இருக்கிறது .ஆனால் என் போன்றவர்களுக்குப் பார்க்க வாய்ப்பில்லை.

5153960755200000000 1.9402553637822469075520833333333e-19
2576980377600000000 3.8805107275644938151041666666667e-19
1288490188800000000 7.7610214551289876302083333333333e-19
25769803776000 3.8805107275644938151041666666667e-14
6442450944000 1.5522042910257975260416666666667e-13
1610612736000 6.2088171641031901041666666666667e-13
3221225472 3.1044085820515950520833333333333e-10
805306368 1.24176343282063802083333333333333e-9
402653184 2.48352686564127604166666666666667e-9
201326592 4.96705373128255208333333333333333e-9
16777216 0.000000059604644775390625
2097152 0.000000476837158203125
262144 0.000003814697265625
32768 0.000030517578125
4096 0.000244140625
512 0.001953125
64 0.015625
8 0.125

நாம் கடந்த கட்டுரையில் பதார்த்த சாரம் நாம் வாழும் பூமியின் அளவு குறித்து சொன்னவற்றைக் கண்டோம்.இப்போது ‘அண்ட கோள விலாசம்’ என்னும் தமிழ் நூல் இது குறித்து என்ன பேசுகிறது என்பதைக் காண்போம்.இந்நூல் முழுக்க முழுக்க COSMOLOGY குறித்த தமிழ் நூலாகும்.

“ குக்குடக் குடம்பை போலக் கூறுவாங் கீழ்மே லாக
நிற்குமே நூறு கோடி நிகழ்ந்திடுங் கீழ் மேற் றீர்க்கந்
தக்கது நூறு கோடி சாற்றுதென் வடல்வி சால
மிக்கது நூறு கோடி விளம்பும்யோ சனையைச் சொல்வாம்.”

என்றது, கோழிமுட்டை வடிவமாயிருக்கின்ற அண்டத்தினுடைய உன்னதம் நூறு கோடியாகச் சொல்லும். தென்வடல் விசாலம் நூறு கொடியாய்ச் சொல்லும் யோசனைப் பிரமானமாம் என்றவாறு.

மேற்கத்தியர்கள் உலகம் உருண்டை என்று சொன்ன விஞ்ஞானியைக் கொளுத்திய கொடுமை உங்களுக்குத் தெரியும். ஆனால் தமிழர்கள் உலகம் உருண்டை என்பதையும் தாண்டி கோழிமுட்டை வடிவாயிருப்பதாக ஏற்றுக் கொண்டதுடன் அதன் அளவைகளையும் எழுதி வைத்திருப்பதனைக் காண்கிறீர்கள்.

வேறு
——-

“பானு வின்கதிர் தூள்பர மாணுவா
மான தூளிரண் டோரணு வவ்வணுத்
தானே மும்மடி சாற்றுந் திரேணுவா
மான மிரண்டு கொண் டாலோர் மயிர் நுணி.”

என்றது, ஒரு சாளரத்தில் கிரணம் போமளவில் எழுந்தூள் பரமாணுவாம். அந்தப் பரமாணு இரண்டு கொண்டது அணு, அவ்வணு மூன்று கொண்டது திரேணு. திரேணுவிரண்டு கொண்டது மயிர் நுணியாம் என்றவாறு.

பரமாணு பற்றி பதார்த்த சாரம் பேசியதைச் சொல்லி இருக்கிறோம்.

பரமாணு* 2=அணு.
அணு* 3= திரேணு.
திரேணு* 2=மயிர் நுணி( 2*3*2= 12)

12 பரமாணு கொண்டது மயிர் நுணி என்பதாக இந்தப் பாடல் சொல்கிறது.ஆனால் பதார்த்த சாரம் மயிர் நுணி என்பதில் மூன்று படி நிலைகளக் குறிக்கிறது என்பதுடன் அது பின் பற்றும் அணுமுறை OCTOGESIMIC எனப்படும் எட்டும் எட்டின் மடங்குகளாகவும் இருப்பதனைக் கூர்ந்து கவனியுங்கள். இவை ஆழ்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை.அது ஒரு புறமிருக்க,கீழ் வரும் பாடல்கள் OCTOGESMIC முறைக்கே திரும்புவதும் ஆய்வுக்குறியது.

“சேரும் ரோம நுணியெட்டுச் சேர்ந்தது
பாரமான விலாகை பகர்ந்திடுஞ்
சேரு மாவவ் விலாகையெண் சார்ந்தது
ஊரும் பேனந்த பேனெட்டோர் நெல்லதாம்.”

என்றது முன் சொன்ன மயிர் நுணி யெட்டுக் கொண்டது பெரிதான விலாகை .விலாகை எட்டுக்கொண்டது ஊராநின்ற பேன்
அந்த பேன் எட்டுக் கொண்டது நெல்லாம் என்றவாறு.

மயிர் நுணி *8 =(பெரிதான) விலாகை 12*8=96
விலாகை *8 =பேன் 96*8=768
பேன் *8 =நெல் 768*8=6144

மயிர் நுணி என்பதை எடுத்துக் கொண்டோமானால், 8 இரத ரேணு கொண்டது ஒரு உத்தம போக மயிர்நுணி எனவும், 8 உத்தமபோக மயிர் நுணி கொண்டது ஒரு மத்திம போக மயி நுணி எனவும், 8 மத்திம போக மயிர் நுணி கொண்டது ஒரு அதம போக மயிர் நுணி எனவும் ஒரு கரும பூமி மயிர் நுணி எனவும் படித்திருக்கிறோம். இவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் ஆய்வுக்குரியவை.

“பார நெல்லெண் பரப்புமோ ரங்குலம்
ஆறு மங்குல மாறுநான் கோர்முழம்
ஓரு மம்முழ நான்கொரு வில்லதாய்
நேரு மவ்வி லிரண்டோர் நெடுந்தண்டே.”

என்றது,பெரிதான நெல்லெட்டுக் கொண்டது ஒரு அங்குலம். அங்குலம் இருபத்து நான்கு கொண்டது ஒருமுழம். முழம் நான்கு கொண்டது விற்கிடை.விற்கிடை யிரண்டு கொண்டது ஒரு தண்டம் என்றவாறு.

நெல்லு*8 =அங்குலம் 6144*8 = 49152
அங்குலம்*24 =முழம் 49152 *24 = 1179648
முழம்*4 =விற்கிடை 1179648 *4 = 4718592
விற்கிடை*2 =தண்டம் *4718592*2 = 9437184

“சோருந் தண்டிரு வாயிரங் கொண்டதே
சாரு மேவொரு குரோசமக் குரேசமே
சேரு நான்மடங் குற்றதைச் செப்பிடிற்
பாரின் மேலொரு யோசனைப் பண்பிதே.”

என்றது எடாநின்ற தண்டு இரண்டாயிரங் கொண்டது குரோசம்.குரோசம் நானூறு கொண்டது பூமியில் ஒரு யோசனையாம் என்றவாறு.

தண்டு*2000 =குரோசம் 9437184 *2000 =18874368000
குரொசம்*400 =யோசனை 18874368000 *400=7549747200000
ஏற்கனவே நாம் உன்னதம் யோசனை என்பனவற்றைப் பற்றிப் பேசிவிட்டோம். அதாவது யோசனையின் நீளம் 292608 மீட்டர் .

(வேறு)

“அண்ட வுன்னத நூறு கோடியாம்
அதன டிக்கனங் கோடி யாகுமேற்
கொண்ட பொற்பதி கோடி யுன்னதங்
கூறு மத்தியின் வேதி கைக்கனம்
விண்ட வுன்னத நூறு பத்தென
விசால மோவிரண் டாயிரமாமே
தொண்டெ னப்பர வுருத்திர பூதருஞ்
சூழ நிற வரியணை யின்மேல்”

என்றது அண்டத்தினுடைய உன்னதம் நூறு கோடி. அதனுடைய அடித்தொட்டுக் கனம் கோடி. அதன் மேற் பொற்பதி உயரம் கோடி. அதன் மத்தியிலிருக்கின்ற வேதிகை யுயரம் ஆயிரம் யோசனை. அதனுடைய அகலம் இரண்டாயிரம் யோசனை. அந்த வேதிகையி லிராநின்ற போத கணங்களோடுங் கூடி சிம்மாசனத்தில் இருக்கின்றவர் என்றவாறு.

கடந்த கட்டுரையில், கயிறு (ரஜ்ஜு) அளவில் உலகின் கன அளவு தரப்படுகிறது.உலகம் அடியில் 7 கயிறு நீளமும் , நடுவில் ஒரு கயிறு நீளமும் , முடிவில் 1 கயிறு நீளமும் உள்ளது.இடைப்பகுதிக்கும் முடிவுப்பகுதிக்கும் இ¨டெயில் 5 கயிறு நீளமும் உள்ளது. ( 7+1+1+5= 14) 14/4 =3 1 / 2 கயிறு. அகலம். உலகின் நீளம்7 கயிறு. உயரம் 14 கயிறு. எனவே உலகின் கன பரிமானம் 3.5*7 cube= 343 கயிறு என்று பதார்த்த சாரம் சொன்னதைக் குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அதனை மேற்கண்ட பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

புதுவை ஞானம்

Puthuvai_gnanam@redif mail.com

Series Navigation