பொது மக்கள் கவனத்திற்கு – பரவி வரும் Blackmail கலாச்சாரம்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

மாதவி ஸ்ரீப்ரியா


சென்னை மருத்துவர் பிரகாஷ்ராஜ் பெண்களை படம் எடுத்து மிரட்டி internet-ல் வியாபாரம் செய்தது போல, இப்பொழுது அரசியல்வாதிகள், மற்றும் சில பிற துறைகளை சேர்ந்தவர்களும் (Call centers, சினிமா, மருத்துவம், இன்ன பிற) இதே யுத்தியை கையாள தொடங்கியிருப்பதாக தெரிகிறது. சில Hotels, Hospitals, மற்றும் விபசார இல்லங்களிலும் Audio மற்றும் Video கருவிகளை பொருத்தி, பொது மக்களுக்கு தெரியாமல் படங்கள் மற்றும் உரையாடல்களை

பதிவு செய்து பல்வேறு அரசியல், பணம், வியாபார ஆதாரங்களுக்கு பொதுமக்களையும், அதிகாரிகளையும், மற்ற துறை சார்ந்தவர்களையும் மடங்க வைப்பதற்கு முயற்சி செய்யலாம். அதிலும் குறிப்பாக இந்த மோசடி வெளி நாட்டில் வாழும் இந்தியரை(NRIs) குறிவைக்க வாய்ப்புகள் அதிகம். இதைப்பற்றி சினிமாக்கள் கூட வர ஆரம்பித்துள்ளன.

இந்த மோசடிகளில் சில மருத்துவர்களும் உடந்தையென செய்திகள் வந்துள்ளன. மருத்துவர்களுக்கு, பொதுமக்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த நோய்கள் பற்றி தெரிவதால், அதை உபயோகபடுத்தி தங்களிடம் வரும் நோயாளிகளை மோசமான நடவடிக்கைகளுக்கு தள்ள வாய்ப்புகள் அதிகம்.அதிலும் சில மருத்துவர்கள் (குறிப்பாக மன நல மருத்துவர்கள்) இந்த மாதிரி மோசடிகளில் ஈடுபடுவதும், அதற்கு துணை போவதும் மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். இதைப் பற்றி இந்திய மெடிக்கல் கவுன்சில் ஆராய்ந்து இந்த மாதிரி வேலைகளில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரையில் ரயிலில் ஒரு சக பயணி சொன்னார், திருச்சி மற்றும் மதுரையில் உள்ள சில மருத்துவர்கள் பிரகாஷ்ராஜ் போன்று காரியங்களில் ஈடுபட்டுவருவதாக. அவர் சொன்னது போலவே, சில மாதங்களில் இந்த நகரங்களை சேர்ந்த சில மருத்துவர்கள் இந்த மாதிரி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்தது. இன்னும் இதை போல வேறு சிலரும் இருக்கலாம். பொதுமக்கள் முன்வந்து இவர்களை அதிகாரிகளுக்கு தெரிய படுத்த வேண்டும்.

இதைபோலவே தங்கும் விடுதிகளிலும், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் அறைகளிலும், குளியறைகளிலும், கருவிகளை பொருத்தி படங்கள் எடுத்து இணையதளங்களுக்கு விற்கபடலாம்; அல்லது பொதுமக்களையும், அவர்களது குடும்பங்களையும் மிரட்டுவதற்கு உபயோகிக்கலாம்; அடுத்த முறை உங்களது நண்ப, நண்பிகளோட, குடும்பத்தினரோடோ இந்தியா செல்லும்போது தங்கும் விடுதிகளை கவனமாக தெரிவு செய்தல் அவசியம்.

அரசியல் கட்சிகளும் இதை போன்று அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பலவீணங்களை படம்பிடித்து அவர்களை தங்களுக்கு சாதகமாக்க ‘அப்பாவி பெண்களையும், தனியார் தொலை பேசி மையங்களையும் (சினிமா துறை சேர்ந்தவர்கள், call centers, call girl networks) கொண்டு ‘ ஒரு வலைப்பின்னல் அமைக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்தால், வளர விட்டால் இந்தியாவே ஒரு நம்பகத்தண்மை அற்ற (Untrustworthy), சமுதாயமாக மாறிவிடக்கூடும். இந்தியா போன்று ஒரு பொருளாதார பிரச்சனை உள்ள வளரும் நாடுகளில், ஊழலை போன்று இது போண்ற யுக்திகளும் பொருள் மற்றும் காரியங்களை சாதிக்க எல்லோரும் ஏற்றுக் கொள்ளதக்கதாக மாறிவிடும்.

இந்த மாதிரி பிரச்சனைகளை அனுகவும், மாட்டிக்கொண்ட அப்பாவிகளுக்கு ‘பத்திரிக்கை தொல்லைகள் இல்லாமல் ‘ தீர்வு காணவும், சட்டம் மூலம் தனியார் மற்றும் பொது துறை சார்ந்த நிறுவனங்களும், விடுதிகளும், மருத்துவ இல்லங்களும் ஈடுபடாமல் இருக்க பொதுமக்களுக்கு உத்தரவாதம் (certification/guarantees) வழங்கவும், அதை நடைமுறை படுத்தவும் மத்திய அரசு CBI போன்று சில மையங்களை இந்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.

சாதாரண போலீஸ் மற்றும் சட்ட அமைப்புகள் இதற்கு உதவாது, ஏனெனில் அவர்களே இந்த மாதிரி வலைகளில் விழுந்து கிடக்க வாய்ப்புள்ளது.

—-

Series Navigation

மாதவி ஸ்ரீப்ரியா

மாதவி ஸ்ரீப்ரியா