சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி

This entry is part of 50 in the series 20041202_Issue

அறிவிப்பு


தமிழில் அறிவியல் புனைகதை வடிவத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டு திண்ணை (http://www.thinnai.com) மற்றும் மரத்தடி ( http://www.maraththadi.com ) இணைய தளங்கள் இணைந்து இந்த சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துகின்றன. போட்டியின் நடுவர் சுஜாதா. முதல் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் பத்தாயிரமும் (Rs.10,000/-) , இரண்டாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஏழாயிரமும் (Rs.7000/-), மூன்றாம் பரிசு பெறும் கதைக்கு இந்திய ரூபாய் ஐயாயிரமும் (Rs.5,000/-) பரிசுகளாக வழங்கப்படும். தேர்வு செய்ப்பட்ட படைப்புகள் திண்னை ம்ற்றும் மரத்தடி இணைய இதழ்களில் வெளியிடப்படும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் அறிவியலைப் பின்புலமாகவோ கருவாகவோ கொண்ட தமிழ்ச் சிறுகதைகளாக, சொந்தக் கற்பனையாக, ஊடகங்கள் எதிலும் பிரசுரமாகாததாக இருக்க வேண்டும். போட்டிக்கு ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப இயலும். மின்னஞ்சலில் கதைகளை அனுப்புகிறவர்கள் TSCII 1.7 தமிழ் எழுத்துருவில்(font) tamil_scifi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். பிற எழுத்துருக்களில் அனுப்புகிறவர்கள் படைப்புடன் அந்த எழுத்துருவையும் சேர்த்து அனுப்பவேண்டும் தபாலில் படைப்புகளை அனுப்புகிறவர்கள் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்புங்கள்.

திண்ணை-மரத்தடி அறிவியல் புனைகதைப் போட்டி,

உயிர்மை

11/29 சுப்பிரமணியம் தெரு

அபிராமபுரம்

சென்னை – 600 018

ph:52074030

படைப்புகள் வந்து சேர கடைசித் தேதி: ஜனவரி 15, 2005

போட்டி பற்றிய விரிவான தகவல்கள் www.thinnai.com, www.maraththadi.com ஆகிய முகவரிகளில் கிடைக்கும். எல்லாத் தொடர்புகளுக்கும் மின் அஞ்சல் முகவரி : tamil_scifi@yahoo.com.. .மூத்த இளம் படைப்பாளிகளை இப்போட்டியில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.

Series Navigation